பெற்றோர் வழக்கமாகக் கொடுக்கும் தினசரி பாக்கெட் மணியில், எக்ஸ்ட்ரா 10 ரூபாய் கேட்டாலே, ஏன் கேட்டோம் என்ற அளவுக்கு திட்டும், சில நேரங்களில் உதையும் கூட கிடைக்கும்; கேட்ட காசு மட்டும் கிடைக்காது.
ஆனால், ஒரு பெண் தன்னுடைய பெற்றோரின் வருமானத்தை செலவு செய்வதை மட்டுமே வழக்கமாகக் கொண்டுள்ளார். நூறு, ஆயிரங்களில் அல்ல... தினமும் லட்சங்களில் செலவு செய்கிறார்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
நியூயார்க்கைச் சேர்ந்த பெண் ரோமா அப்தெஸ்ஸலாம் (Roma Abdesselam), தனது ஆடம்பர வாழ்க்கை குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்.
எந்த வேலையும் செய்யாமல் வீட்டில் இருக்கும் இவருக்கு முழுநேர வேலையே, தன்னுடைய பெற்றோர் சம்பாதிக்கும் பணத்தைச் செலவழிப்பதுதான். அவர் செலவழிக்கும் பணத்தைக் கேட்டால் வாயடைத்துப் போவோம்.
அதாவது, அமெரிக்க மதிப்பில் ஒரே ஒரு நாளைக்கு மட்டும் 50,000 டாலர்களைச் செலவு செய்கிறார். இந்திய மதிப்பில் சுமார் ரூபாய் 39.49 லட்சம். இவருடைய தினசரி வாடிக்கை என்ன தெரியுமா... காலையில் எழுந்து பிரேக்ஃபாஸ்ட் சாப்பிட்டுவிட்டு, வொர்க் அவுட் செய்துவிட்டு, பிறகு தன் தோழிகளோடு ஷாப்பிங் செய்வது.
இவர் வெளியிட்ட வீடியோ பதிவில், பியூட்டி பார்லர் செல்கிறார், புருவங்களைத் திருத்தம் செய்ததற்காக $600 டாலர் செலவழிக்கிறார். அப்படியே துணிக்கடைக்குச் செல்கிறார், அங்கு ஒரு தொகையைச் செலவிட்டு கட்டணத்தொகை ரசீதைக் காட்டுகிறார். இப்படி கடைக்குப்போவதும், செலவழிப்பதும்தான் இவரின் வேலை.
``பெற்றோரின் பணத்தைச் செலவு செய்வதை வேலையாகக் கொண்டிருப்பது, மிகவும் வேடிக்கையாக இருக்கிறது, நான் இப்போது அதிகமாக செலவழிப்பதால் பணத்தை எடுக்க முடியாதபடி செய்துள்ளார்கள் என் பெற்றோர். ஆனால், நான் என் இஷ்டம்போல செலவு செய்வதற்கான பணத்தடை நீண்ட நாள் நீடிக்காது” என ரோமா தெரிவித்துள்ளார்.
`அடிச்சுக் கேட்டாலும் அதை மட்டும் சொல்ல மாட்டேன்' என்பது போல் இவரின் பெற்றோர் என்ன வேலை செய்கிறார்கள் என்பதை மட்டும் கூற மறுத்துள்ளார்.
சமூக வலைதளத்தில் பிரபலமடைந்துள்ள இவர், அழகு சாதன பொருள்களுக்கு விளம்பரம் செய்து, அதில் கிடைக்கும் வருமானத்தை உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் கல்விக்காக செலவு செய்து வருகிறார்.