Published:Updated:

`ரிட்டர்ன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கிடையாது!' - கண்டிஷனோடு கணவரை ஆன்லைனில் ஏலம் விட்ட மனைவி

Linda ( Facebook Photo )

ஏலம் விடுகிற `trade me' என்ற சைட்டில், `என் கணவருடைய உயரம் ஆறடி ஓர் அங்குலம். வயது 37. மிகவும் நல்லவர். மீன் பிடித்தல் அவருடைய பொழுதுபோக்கு' என்று கணவர் பற்றிய தகவல்களையும் பகிர்ந்திருந்தார்.

`ரிட்டர்ன் மற்றும் எக்ஸ்சேஞ்ச் கிடையாது!' - கண்டிஷனோடு கணவரை ஆன்லைனில் ஏலம் விட்ட மனைவி

ஏலம் விடுகிற `trade me' என்ற சைட்டில், `என் கணவருடைய உயரம் ஆறடி ஓர் அங்குலம். வயது 37. மிகவும் நல்லவர். மீன் பிடித்தல் அவருடைய பொழுதுபோக்கு' என்று கணவர் பற்றிய தகவல்களையும் பகிர்ந்திருந்தார்.

Published:Updated:
Linda ( Facebook Photo )

தன் கணவரை ஆன்லைனில் விற்பனை செய்ய முயற்சி செய்திருக்கிறார் அயர்லாந்தைச் சேர்ந்த மனைவி ஒருவர். இந்தச் சம்பவம் நடந்திருப்பது நியூசிலாந்தில். `அச்சச்சோ' என்பவர்களும் 'ஹா ஹா' என்பவர்களும் கொஞ்சம் ரிலாக்சாக காரணத்தைப் படியுங்கள்.

Linda
Linda
Facebook Photo

அந்த மனைவியின் பெயர் லிண்டா. கணவர் பெயர் ஜான். கணவர் மீன் பிடிக்கச் செல்ல, இரண்டு மகன்களுடன் வீட்டிலிருந்த லிண்டா, ஏலம் விடுகிற `trade me' என்ற சைட்டில் `கணவர் விற்பனைக்கு' என்ற ஹேஷ்டேகில் பதிவேற்றியுள்ளார். கூடவே இந்தப் பதிவை தன் ஃபேஸ்புக்கிலும் ஷேர் செய்திருந்தார். அதில் `என் கணவருடைய உயரம் ஆறடி ஓர் அங்குலம். வயது 37. மிகவும் நல்லவர். மீன் பிடித்தல் அவருடைய பொழுதுபோக்கு' என்று கணவர் பற்றிய தகவல்களையும் பகிர்ந்திருந்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

கண்டிஷனில், பயன்படுத்தப்பட்டது, ரிட்டர்ன் மற்றும் எக்ஸ்சேஞ் கிடையாது என்று குறிப்பிட்டவர், லோக்கல் ஏரியாவில் இருப்பவர்கள் வாங்கினால் இலவசமாக டெலிவரி செய்வேன். நாடு முழுக்க என்றால் ஃப்ரீ ஷிப்பிங் செய்கிறேன் என்றும் அந்த விளம்பரத்தில் லிண்டா குறிப்பிட்டிருந்தார். இத்தனை களேபரங்களுக்கு மத்தியிலும் தன் மனைவி தன்னை ஏலம் விட்டிருக்கிறார் என்பதே ஜானுக்கு அவருடைய நண்பர்கள் சொல்லித்தான் தெரிய வந்திருக்கிறது.

husband for sale
husband for sale

விஷயம் ரொம்ப சிம்பிள்ங்க. இதை விளையாட்டுக்காகத்தான் செய்திருக்கிறார் லிண்டா. ஜானுக்கும் அது புரிந்த பிறகு இருவரும் சேர்ந்து தங்களுடைய ஒரு ஹா ஹா புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றி விட்டார்கள். இவையெல்லாம் தெரியாத சில பெண்கள் ஜானை ஏலம் எடுக்க முன் வந்ததுதான் மிகப்பெரிய நகைச்சுவை என்கின்றன அந்த நாட்டின் வெப்சைட்கள். Trade me ஏல நிறுவனம், `எங்க சைட்ல இந்த மாதிரி இதுக்கு முன்னாடி நடந்ததே இல்லைங்க' என்று சொன்னதோடு லிண்டாவின் விளம்பரத்தையும் நீக்கியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism