Published:Updated:

`ஸ்கூல் எப்போ சார் திறப்பீங்க?' - போராட்டத்தில் குதித்த இத்தாலி குழந்தைகள்! #MyVikatan

பள்ளிகளைத் திறக்கக் கூறி ஒரு போராட்டம் கண்டதுண்டா? அதுவும் பள்ளி மாணவர்களே போராடி கண்டதுண்டா?

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை, வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஊதிய உயர்வு கோரிக்கையை முன்வைத்து, தொழிலாளர்கள் போராட்டத்தைக் கண்டிருப்பீர்கள். மக்களுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட அரசாங்க திட்டங்களை எதிர்த்துப் போராட்டம் கண்டிருப்பீர்கள். கல்லூரி மாணவர்கள் போராட்டம் செய்து பார்த்திருப்பீர்கள். இதுபோன்ற அனைத்துப் போராட்டங்களுமே தொழிற்சாலைகளையோ, கல்லூரிகளையோ, சில பல அரசு திட்டங்களையோ நிறுத்தவே செய்யப்பட்டிருக்கும்.

ஆனால், பள்ளிகளைத் திறக்கக் கூறி ஒரு போராட்டம் கண்டதுண்டா? அதுவும் பள்ளி மாணவர்களே போராடி கண்டதுண்டா?

ஆம், அதுதான் கடந்த இரண்டு மாதங்களாக இத்தாலியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Italy school students
Italy school students
Twitter image

முன்பெல்லாம் பிள்ளைகள் மழையின் காரணமாகப் பள்ளி விடுமுறை விட்டால்கூட பெரும் சந்தோஷத்தில் இருப்பார்கள். ஆனால், உலகம் மாறிக்கொண்டு வருவது உண்மைதான் போலும்.

சென்ற ஆண்டு தொடக்கத்திலிருந்து, கொரோனா என்ற கொடிய நோய்த்தொற்றின் காரணமாக இத்தாலி மட்டுமன்றி உலக நாடுகள் அனைத்துமே ஸ்தம்பித்து நின்றன. சென்ற மார்ச் மாதம் முதலே இத்தாலியில் பள்ளிகள், கல்லூரிகள் என்று அனைத்துமே மூடப்பட்டன. பல பள்ளிகளில் இறுதி ஆண்டுத் தேர்வுகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெற்று முடிந்தன. அனைத்தும் முடிந்து புதிய கல்வியாண்டு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. தொடக்கத்தில் ஒரு பாதி மாணவர்கள் வீட்டிலிருந்தும் மற்ற பாதி மாணவர்கள் பள்ளியிலிருந்தும் வகுப்பைத் தொடங்கினார்கள். ஆனால், சில தினங்களிலேயே சில மாணவர்களும் ஆசிரியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டது தெரியவரவே, பள்ளிகளை மீண்டும் மூட உத்தரவிட்டது அரசாங்கம்.

பின், சிறார்கள் ஆன்லைன் வகுப்புகளில் சரிவர பயில முடியாத காரணத்தால் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளைத் திறந்தது இத்தாலி. எனவே, 50% மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வந்தார்கள். ஆனால், 9-ம் வகுப்புக்கு மேல் பயிலும் மாணவர்கள் இன்னமும் ஆன்லைன் மூலமாகவே பள்ளிப்படிப்பை மேற்கொண்டுள்ளார்கள்.

இப்படி மாதக்கணக்காக மூடியிருக்கும் பள்ளிகளால் தங்கள் படிப்பு பாதிப்பதாகக் குற்றம் சாட்டி, மூடப்பட்டிருக்கும் பள்ளிகளை உடனே திறக்கக் கூறி பிள்ளைகளே இத்தாலியில் மார்ச் மாத இறுதியில் இருந்து போராடி வருகின்றனர்.

Italy School Students
Italy School Students
Twitter image

தங்கள் தாயின் கைகளைப் பற்றிக்கொண்டு பள்ளிக்குள் செல்ல மாட்டேன் என்று ஆடம் பிடிக்கும் பிஞ்சுகளைக் கண்டு வந்த நமக்கு, இச்செய்தி சற்று வித்தியாசமானதுதானே?

கொரோனாவின் காரணமாக இந்த உலகில் இன்னும் என்ன என்ன நிகழ்வுகள் நடைபெற காத்துக்கொண்டிருக்கிறதோ தெரியவில்லை. நாமும் காத்துக்கொண்டிருப்போம்.

இத்தாலியிலிருந்து,

மகேஸ்வரன் ஜோதி

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு