Published:Updated:

``கலாசாரம், வாழ்க்கைமுறையோடு இணைந்த மதுபானம்”: புவிசார் குறியீடு கேட்கும் ஜப்பான்!

Nihonshu ( twitter )

இந்த மதுபானம் நொதிக்க வைத்த அரிசியிலிருந்து தயாரிக்கப்படும் சிறப்பான மதிப்புமிக்க ஒரு பானமாகக் கருதப்படுகிறது. இது ஜப்பானின் வாழ்க்கைமுறை மற்றும் கலாசாரத்தோடு இணைந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஒரு பகுதி அல்லது புவியியல் இருப்பிடத்தோடு தொடர்புடைய தயாரிப்புகளுக்கு, புவிசார் குறியீடு வழங்கப்படும். பல பகுதிகளில் உள்ள மக்களும் அவர்களின் தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு வேண்டி விண்ணப்பிப்பது வழக்கம். 

Japan
Japan
Image by Jason Goh from Pixabay

இந்நிலையில் டெல்லியில் உள்ள ஜப்பான் தூதரகம், அந்நாட்டின் மதுபானமான நிஹோன்ஷுவிற்கு (Nihonshu) புவிசார் குறியீடு வேண்டி விண்ணப்பத்தைத் தாக்கல் செய்துள்ளது. அதாவது ஜப்பானில் உள்ள ஒரு தயாரிப்புக்கு இங்கு புவிசார் குறியீடு கேட்டு விண்ணப்பித்திருப்பது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. 

இதற்காகத் தாக்கல் செய்யப்பட்ட விவரத்தின்படி, ``இந்த மதுபானம் நொதிக்க வைத்த அரிசியில் இருந்து தயாரிக்கப்படும் சிறப்பான மதிப்புமிக்க ஒரு பானமாகக் கருதப்படுகிறது.

Rice
Rice

இதன் முக்கிய மூலப்பொருள்கள், அரிசி, கோஜி - கின் எனப்படும் ஒருவகை பூஞ்சை வித்து மற்றும் தேவையான அளவு தண்ணீர். இந்த பானம் பாரம்பர்ய திருவிழாக்கள், திருமணங்கள், இறுதிச் சடங்குகள் போன்றவற்றில் அருந்தப்படுகிறது. அன்றாடமும் மக்கள் அருந்துகிறார்கள். இது ஜப்பானின் வாழ்க்கைமுறை மற்றும் கலாசாரத்தோடு இணைந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது'' என்று தெரிவித்து, புவிசார் குறியீடு வழங்குமாறு விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.