Published:Updated:

`தூங்கினால் ₹26,500 சம்பளம்!' - முந்தி அடித்துக்கொண்டு விண்ணப்பித்த மக்கள்

Sleep ( Photo by Gregory Pappas on Unsplash )

மலாயா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு மலேசியாவில் பேசுபொருளாகியிருக்கிறது. அதற்கான முக்கியக் காரணம் இந்த ஆய்வில் கலந்துகொள்வோருக்கு 1,500 ரிங்கிட் அதாவது இந்திய ரூபாய் மதிப்புப்படி 26,500 ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருப்பதுதான்.

`தூங்கினால் ₹26,500 சம்பளம்!' - முந்தி அடித்துக்கொண்டு விண்ணப்பித்த மக்கள்

மலாயா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு மலேசியாவில் பேசுபொருளாகியிருக்கிறது. அதற்கான முக்கியக் காரணம் இந்த ஆய்வில் கலந்துகொள்வோருக்கு 1,500 ரிங்கிட் அதாவது இந்திய ரூபாய் மதிப்புப்படி 26,500 ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருப்பதுதான்.

Published:Updated:
Sleep ( Photo by Gregory Pappas on Unsplash )

தூங்கி எழுந்த பிறகு, உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த ஆய்வில் பங்கேற்று தூங்குவோருக்கு சன்மானம் வழங்கப்படும் என்கிற மலாயா பல்கலைக்கழகத்தின் அறிவிப்பு மலேசியாவில் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது. கரும்பு தின்னக் கூலி கொடுப்பதைப்போல ஆய்வின் நிமித்தம் தூங்குவதற்கு பணம் என்கிற அறிவிப்பால் ஈர்க்கப்பட்டு பலரும் அதற்குப் பதிவு செய்துள்ளனர்.

Sleep
Sleep
Photo by Kinga Cichewicz on Unsplash

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மலேசியாவில் உள்ள மலாயா பல்கலைக்கழகம் தூக்கம் குறித்த ஆய்வு ஒன்றினை மேற்கொள்ளவிருக்கிறது. தூங்கி எழுந்த பிறகு உடலில் நிகழும் ஆரோக்கியமான மாற்றத்தைக் கண்டறிவதே இந்த ஆய்வின் நோக்கமாகும். சராசரி எடை கொண்ட, தூக்கம் தொடர்பான எவ்விதப் பிரச்னையும் இல்லாத, 20 - 40 வயதுடையவர்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட விருக்கிறது. இந்த ஆய்வில் பங்கேற்போருக்கு தூங்குவது மட்டுமே வேலை. தூக்கத்தின் மூலம் அவர்கள் அடையும் புத்துணர்ச்சி எத்தகையது என்பது கண்காணிக்கப்பட்டுக்கொண்டே வரும்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்த ஆய்வில் கலந்துகொண்டு தூங்குவதற்கு ஆட்கள் தேவை என மலாயா பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு மலேசியாவில் பேசுபொருளாகியிருக்கிறது. அதற்கான முக்கிய காரணம் இந்த ஆய்வில் கலந்து கொள்வோருக்கு 1,500 ரிங்கிட் அதாவது இந்திய ரூபாய் மதிப்புபடி 26,500 ரூபாய் வழங்கப்படும் என்று குறிப்பிட்டிருப்பதுதான்.

Sleep
Sleep
Photo by Isabella and Louisa Fischer on Unsplash

எந்த வேலையும் இல்லாமல் வெறுமனே தூங்குவதற்குப் பணமா எனப் பலரும் முந்தியடித்துக்கொண்டு இந்த ஆய்வில் பங்கேற்கப் பதிவு செய்துள்ளனர். ஒரு கட்டத்தில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை அதிகமானதால் மலாயா பல்கலைக்கழகம் பதிவை நிறுத்தியிருக்கிறது.

முதல்கட்ட பரிசோதனைகளை மேற்கொண்ட பின்னரே அவர்கள் ஆய்வுக்குள் ஈடுபடுத்தப்படுவார்கள். 30 நாள்கள் இந்த ஆய்வு நடைபெறவிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism