Published:Updated:

சிலந்திகளை சேகரிக்கும் `ஸ்பைடர்மேன்’... கலெக்‌ஷனில் 300; விநோத பழக்கத்தின் ஆச்சர்ய காரணம்..?!

Aaron Phoenix ( Aaron Phoenix )

2021-ம் ஆண்டில் இருந்து சிலந்திகளைச் சேகரிக்கத் தொடங்கியவரிடம், தற்போது 300-க்கும் அதிகமான சிலந்திகள் உள்ளன. என் கலெக்‌ஷனில் உள்ள சிலந்திகளை சிறிது நேரம் கவனிப்பேன்; அவை என் மீது நம்பமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

சிலந்திகளை சேகரிக்கும் `ஸ்பைடர்மேன்’... கலெக்‌ஷனில் 300; விநோத பழக்கத்தின் ஆச்சர்ய காரணம்..?!

2021-ம் ஆண்டில் இருந்து சிலந்திகளைச் சேகரிக்கத் தொடங்கியவரிடம், தற்போது 300-க்கும் அதிகமான சிலந்திகள் உள்ளன. என் கலெக்‌ஷனில் உள்ள சிலந்திகளை சிறிது நேரம் கவனிப்பேன்; அவை என் மீது நம்பமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.

Published:Updated:
Aaron Phoenix ( Aaron Phoenix )

ஒவ்வொருவரும் தங்களை நிஜ உலகத்தில் இருந்து விடுவித்துக் கொள்ள ஒரு வித்தியாசமான பழக்க வழக்கத்தை கடைப்பிடிப்பதுண்டு. அதில் சிலர், வீட்டிற்கு வரும் விருந்தாளிகளிடம், `பாருங்கள் நான் இதையெல்லாம் சேமித்து வைத்திருக்கிறேன்' எனக் காட்டி பெருமைப்பட்டுக் கொள்வார்கள். பழைய நாணயங்கள், இறகுகள், சருகுகள் என ஒவ்வொருவரின் பழக்கமும் வித்தியாசமாக இருக்கும்.

Stress
Stress

ஆனால் ஒருவர், சிலந்திகளை (Tarantulas) சேமித்து வைக்கிறார் என்று சொன்னால் நம்புவீர்களா..? இங்கிலாந்தில் வசித்து வரும் ஆரோன் பீனிக்ஸ் என்பவரின் மனநலத்தை சீரமைக்க தெரபிஸ்ட் ஒருவர், புதிய பழக்கத்தைத் தொடருங்கள் என அறிவுறுத்தி உள்ளார்.

புதிய பழக்கமா என யோசித்த ஆரோன், ஒரு விளையாட்டையோ, படிப்பையோ தேர்ந்தெடுக்காமல், சிலந்திகளைச் சேகரிக்க முடிவு செய்துள்ளார். அதன்படி 2021-ம் ஆண்டில் இருந்து சிலந்திகளைச் சேகரிக்கத் தொடங்கியவரிடம், தற்போது 300க்கும் அதிகமான சிலந்திகள் உள்ளன.

இது குறித்து ஆரோன் பீனிக்ஸ் கூறுகையில், ``ஒவ்வொருவருக்கும் அவரவர் விருப்பம் உண்டு, இது என்னுடைய விருப்பம். பலரும் என்னை `ஸ்பைடர் மேன்’ என அறிந்துள்ளார்கள்.

நான் அமர்ந்து, என் கலெக்‌ஷனில் உள்ள சிலந்திகளை சிறிது நேரம் கவனிப்பேன்; அவை என் மீது நம்பமுடியாத தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. சிலந்திகளை வைத்திருப்பதை நான் ஒருபோதும் கைவிடப்போவதில்லை.

SPIDER
SPIDER
flickr.com

ஆரம்பத்தில் என் மனைவியும், குழந்தைகளும் என்னுடைய இந்தப் பழக்கத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலும், இவை என்னில் ஏற்படுத்திய நேர்மறையான தாக்கங்களை புரிந்து கொண்ட பின்பு, ஆதரவு தெரிவிக்க ஆரம்பித்தனர்’’ எனத் தெரிவித்துள்ளார்.

ஆரோன் சிலந்திகளுக்கான கடையைத் திறந்து, சிறிய சிலந்திகளை வளர்த்து விற்க உள்ளதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.