Published:Updated:

``முன்னாள் காதலியின் ஹேண்ட் பேகில், சிறுநீர் கழித்த ஆண்'': நீதிமன்றம் விதித்த தண்டனை இதுதான்!

hand bag! ( pixabay )

காதல் பிரிவின் முடிவில், வெறுப்பின் உச்சத்தில் சிலர் வன்முறையில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில் காதலன் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலியிடம் காட்டிய வெறுப்பு, அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.

``முன்னாள் காதலியின் ஹேண்ட் பேகில், சிறுநீர் கழித்த ஆண்'': நீதிமன்றம் விதித்த தண்டனை இதுதான்!

காதல் பிரிவின் முடிவில், வெறுப்பின் உச்சத்தில் சிலர் வன்முறையில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில் காதலன் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலியிடம் காட்டிய வெறுப்பு, அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.

Published:Updated:
hand bag! ( pixabay )

அன்பும் அக்கறையும் இருக்கும்போது, காதலர்களிடையே உறவானது தொடர்கதையாகிறது. அதுவே அன்பு குறைந்து வெறுப்புகள் சூழும்போது, அந்த உறவு விடுகதையாகிறது. இனிமேல் இத்தகைய உறவை இறுகப் பிடித்துக் கொள்வதில் எத்தகைய பலனும் இல்லை எனும் போது பிரிவுகள் நிகழ்ந்து விடுகின்றன.

Love
Love

பிரிவின் முடிவில், சிலர் வெறுப்பின் உச்சத்தில் வன்முறையில் ஈடுபடுவதுண்டு. அந்த வகையில் காதலன் ஒருவர் தன்னுடைய முன்னாள் காதலியிடம் காட்டிய வெறுப்பு, அருவருக்கத்தக்கதாக இருக்கிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

அக்டோபர் 2021-ம் ஆண்டு தென்கொரியா சியோலில், 31 வயது ஆண், தன்னுடைய முன்னாள் காதலியின் வீட்டிலிருந்துள்ளார். இவர்கள் இருவருக்குள்ளும் சண்டை முற்றிவிட, அப்பெண், தான் கடனில் சிக்கித் தவிப்பதாகச் சொல்லி, காதலித்தபோது தான் செலவழித்த பணத்தைத் திரும்பக் கேட்டுள்ளார்.

இதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த நபர், நேராக அப்பெண்ணின் படுக்கையறைக்குச் சென்று, அப்பெண் வைத்திருந்த மிகவும் விலை உயர்ந்த Louis Vuitton ஹேண்ட் பேகின் உள்ளே சிறுநீர் கழித்துள்ளார். மேலும் இது வெளியே தெரியக்கூடாது என்பதற்காக, சிறுநீர் கழித்தவுடன் அந்த ஹேண்ட்பேகினுள் லிக்விட் டிடர்ஜென்டை ஊற்றி உள்ளார்.

ஹேண்ட் பேக்
ஹேண்ட் பேக்

இதனைச் சிறிதும் விரும்பாத அந்தப் பெண், அவரின் இச்செயலுக்கு இழப்பீடு கேட்டு நீதிமன்றத்தை நாடியுள்ளார். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், டி.என்.ஏ பரிசோதனையில் அவர் சிறுநீர் கழித்ததை உறுதி செய்தது.

அப்பெண் பொய் கூறவில்லை என்றும், பெண்ணின் ஹேண்ட் பேகினுள் சிறுநீர் கழித்த குற்றத்திற்காக அவருக்கு 1,150 அமெரிக்க டாலர் (இந்தியப் பண மதிப்பில் 91,634 ரூபாய்) அபராதம் விதித்துள்ளது. அதோடு இது அவரின் முதல் குற்றம் என்பதால் மிகவும் கடுமையான தண்டனைகளை விதிக்கவில்லை. இருந்தபோதிலும் இந்த நிகழ்வு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.