Published:Updated:

கனவில் ஆட்டை வெட்டுவதாக நினைத்து, பிறப்புறுப்பை வெட்டிக்கொண்ட ஆண்: என்ன நடந்தது?

chop ( pixabay )

கண் விழித்தவருக்கு, தன்னுடைய கையில் கத்தி எப்படி வந்ததென்றும், தன்னுடைய பிறப்புறுப்பை தானே வெட்டிக்கொண்டது எப்படி என்பதும் தெரியவில்லை.

கனவில் ஆட்டை வெட்டுவதாக நினைத்து, பிறப்புறுப்பை வெட்டிக்கொண்ட ஆண்: என்ன நடந்தது?

கண் விழித்தவருக்கு, தன்னுடைய கையில் கத்தி எப்படி வந்ததென்றும், தன்னுடைய பிறப்புறுப்பை தானே வெட்டிக்கொண்டது எப்படி என்பதும் தெரியவில்லை.

Published:Updated:
chop ( pixabay )

கனவில் மிஞ்சி மிஞ்சி போனால் என்ன செய்வார்கள்? சிலர் எழுந்து நடப்பார்கள். சிலர் கட்டிலில் இருந்து உருண்டு கீழே விழுவார்கள். ஆனால், கத்தியை எடுத்து தங்களை குத்திக்கொண்டவர்கள் உண்டா?

ஆனால் உண்மையில் ஒருவர், தான் நிஜ உலகத்தில் இருக்கிறோமா அல்லது கனவுலகத்தில் இருக்கிறோமா எனத் தெரியாமல், என்ன செய்கிறோம் என்று உணராமல், கனவு ஏற்படுத்திய பிறழ்வில் தன் பிறப்புறுப்பை வெட்டிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

dreams
dreams
pixabay

மேற்கு ஆப்பிரிக்கா கானாவின் மத்திய பகுதியில் வசித்து வரும் 42 வயதான விவசாயி கோஃபி அட்டா (Kofi Atta). இவர் எதிர்பாராத விதமாக கனவில், தன்னுடைய ஆணுறுப்பை தானே வெட்டிக் கொண்டுள்ளார். வலியில் கனவில் இருந்து விழித்துப் பார்த்தபோது, நாற்காலியில் இருந்தவர் ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார்.

அது பற்றி அவர் கூறும்போது, `அன்று மாலை என் மனைவி சமைப்பதற்கு ஆட்டை வெட்டுவதாக நினைத்து, என் பிறப்புறுப்பை வெட்டிக்கொண்டேன்’ எனத் தெரிவித்துள்ளார். இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``நான் தூக்கத்தில் மூழ்கியபோது, நாற்காலியில் அமர்ந்திருந்தேன். என்னுடைய தூக்கத்தில் எனக்கு முன்னர் இருந்த இறைச்சியை வெட்டுவது போல் கனவு கண்டேன்’’ என அந்த விவசாயி தெரிவித்துள்ளார்.

விழித்தவருக்கு தன்னுடைய கையில் கத்தி எப்படி வந்ததென்றும், தன்னுடைய பிறப்புறுப்பை தானே வெட்டிக்கொண்டது எப்படி எனத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். கனவிலிருந்து விழித்தவர் வலியால் கத்த, அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்துள்ளனர். அங்கு சென்று பார்க்கையில், அவர் அமர்ந்திருந்த நாற்காலியிலிருந்து ரத்தம் வழிந்தோடி உள்ளது.

Surgery
Surgery
Photo by Piron Guillaume on Unsplash

அட்டாவின் மனைவி அந்த நேரத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார். அவரை தொடர்புகொண்ட சுற்றத்தார் இந்தத் தகவலைத் தெரிவித்தனர். அவரின் மனைவி வீட்டை அடைந்ததும், ரத்தப்போக்கை நிறுத்த கணவருக்கு டயப்பர் அணிவித்து, மருத்துவமனைக்கு விரைந்து அழைத்துச் சென்றுள்ளார்.

இந்த நிகழ்வு செய்திகளில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகிறது. கனவில் இப்படி ஒரு துயரம் நிகழ்ந்ததைப் பலரும் அதிர்ச்சியுடனும் சோகத்துடனும் பகிர்ந்து வருகின்றனர்.