Published:Updated:

மெக்ஸிகோ: புதிய நடைபாலத்தைத் திறந்துவைத்து வாக்கிங் சென்ற மேயர்! - இடிந்து விழுந்ததால் பரபரப்பு

மெக்ஸிகோவில் மேம்பாலத் திறப்புவிழா ( ட்விட்டர் )

மெக்ஸிகோவில் நடைபால திறப்புவிழாவின்போது புதிதாகக் கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மெக்சிகோ நாட்டின் மோரேலோஸ் மாகாணத்தில் மரப் பலகைகள் மற்றும் உலோகச் சங்கிலிகளால் செய்யப்பட்ட நடைபாலம் சமீபத்தில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது. இந்த புதிய நடைபாலத்தை அந்த நகரத்தின் மேயர் ஜோஸ் லூயிஸ் யுரியோஸ்டெகுய் பொதுமக்களின் பயன்பாட்டுக்காகத் திறந்துவைத்தார். தொடர்ந்து நகர மேயரும், அவரின் மனைவி அமனால்கோ இருவரும் புதிய நடைபாலத்தில் நடந்து சென்றனர். கூடவே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பொதுமக்களும் நடந்துவந்தனர்.

அப்போது, திடீரென புதிதாக கட்டப்பட்ட நடைபாலம் இடிந்து விழுந்தது அந்தப் பகுதியில் இருந்த மக்களை பீதியடையச் செய்தது. இதில், பாலத்தின் மேல் நடந்து சென்றுகொண்டிருந்த நகர மேயர் ஜோஸ் லூயிஸ் உள்ளிட்ட சிலர் 3 மீட்டர் பள்ளத்தில் விழுந்தனர். அளவுக்கு அதிகமான எடை இருந்ததால் புதிதாகக் கட்டப்பட்ட நடைபாலம் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கீழே விழுந்தவர்களை அக்கம் பக்கத்தில் சுற்றியிருந்தவர்கள் மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism