Published:Updated:

குழந்தைக்கு பாலிலும் தேனிலும் குளியல், தங்கத்தாலான நிப்பிள்: வியக்க வைக்கும் தாய்ப்பாசம்!

mother ( pixabay )

நடனக் கலைஞரும், மாடலுமான 32 வயதான கேசி அக்ரம், தனக்கு குழந்தை பிறந்த பின்பு வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாக குழந்தையைக் கவனித்துக்கொள்வதை மட்டுமே செய்கிறார். தன் குழந்தையின் மீது ஏற்பட்ட மிகுந்த அன்பால், ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறார்.

குழந்தைக்கு பாலிலும் தேனிலும் குளியல், தங்கத்தாலான நிப்பிள்: வியக்க வைக்கும் தாய்ப்பாசம்!

நடனக் கலைஞரும், மாடலுமான 32 வயதான கேசி அக்ரம், தனக்கு குழந்தை பிறந்த பின்பு வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாக குழந்தையைக் கவனித்துக்கொள்வதை மட்டுமே செய்கிறார். தன் குழந்தையின் மீது ஏற்பட்ட மிகுந்த அன்பால், ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறார்.

Published:Updated:
mother ( pixabay )

பிறந்த குழந்தையை தங்கத்தட்டில் வைத்துத் தாங்குவேன் என்று சொல்லும் எத்தனையோ பெற்றோரைப் பார்த்திருப்போம். குழந்தைக்குத் தேவையானவற்றைப் பார்த்துப் பார்த்து செய்யும் பெற்றோர் பலர். இது பெரும்பாலான வீடுகளில் சகஜம்தான்.

குழந்தை பராமரிப்பு
குழந்தை பராமரிப்பு

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், பிரிட்டனில் ஒரு பெற்றோர் செய்யும் விஷயங்கள் வித்தியாசமாக இருக்கின்றன. ஒரு வயதே ஆன ஜரீம் என்ற குழந்தையை, அதன் தாய் பராமரித்துக்கொள்ளும் விதம் பிரமிக்க வைக்கிறது.

நடனக் கலைஞரும் மாடலுமான 32 வயதான கேசி அக்ரம், தனக்கு குழந்தை பிறந்த பின்பு வேலையை விட்டுவிட்டு, முழு நேரமாகக் குழந்தையைக் கவனித்துக்கொள்வதை மட்டுமே செய்கிறார். தன் குழந்தையின் மீது ஏற்பட்ட மிகுந்த அன்பால், ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்துச் செய்கிறார்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குழந்தையின் தினசரி ஷெட்யூல் இதுதான்... காலை 6 மணிக்கே எழுந்து குழந்தை விரும்பும் சிற்றுண்டியைத் தயாரிப்பது. குழந்தையை காலையில் குளிப்பாட்டி முடித்ததும் மசாஜ் செய்வது. அதன் பிறகு டிவியில் `peppa pig’ என்ற நிகழ்ச்சியைப் பார்க்க வைப்பது.

குழந்தை பராமரிப்பு
குழந்தை பராமரிப்பு

இது தவிர, குழந்தைக்கு வாரத்துக்கு இரண்டு முறை பாலிலும் தேனிலும் குளியல். ரப்பரால் ஆன நிப்பிளுக்குப் பதிலாக, 1000 பவுண்டுகள் மதிப்பில் செய்யப்பட்ட தங்கத்தாலான நிப்பிள். 750 பவுண்டுகள் மதிப்பில் கழுத்தில் அணியும் வெர்சேஸ் செயின் (Versace chain), 925 பவுண்டுகள் மதிப்பில் வைரம் பதிக்கப்பட்ட பிரேஸ்லெட்...

சலூனில் உயர் பொறுப்பில் இருக்கும் மேனேஜரின் கைகளாலேயே குழந்தைக்கு 14 நாள்களுக்கு ஒரு முறை ஹேர் கட். பிறகு வேறொரு சலூனில், நகங்களைப் பராமரிக்கும் பெடிக்யூர் (pedicure). பிராண்டடு ஆடைகள், இயற்கையான உணவுகள்... `போதும் போதும் லிஸ்ட் ரொம்ப பெருசா போகுது’ எனச் சொல்லும் அளவுக்கு அதீத அக்கறையுடன் குழந்தைக்குத் தேவையானதைச் செய்கிறார்.

இது குறித்து கேசி கூறுகையில், ``இந்த உலகிலேயே மிகவும் அழகான குட்டிப்பையன் இவன். அவன் என்ன விரும்புகிறானோ அதை அவனுக்கு அளிக்கிறேன். ஒருவேளை என்னால் அளிக்க முடியாத பட்சத்தில், இவனுடைய தந்தைக்கு போன் செய்து பணத்தைப் பெற்றுக்கொள்வேன்” எனத் தெரிவித்துள்ளார்.