Published:Updated:

``ஒண்ணு கறுப்பு, ஒண்ணு வெள்ளை'' இருவேறு நிறம் கொண்ட இரட்டைக் குழந்தைகள்...

twins ( Chantelle Broughton )

``என்னுடைய 29 வயதான கணவர் ஆஷ்டன் பாதி ஜமைக்கன், பாதி ஸ்காட்டிஷ். குழந்தைகள் பிறக்கும்போது இருவரிடத்திலும் பெரிய வித்தியாசமில்லை. நாள்கள் செல்லச் செல்ல மகளின் நிறம் கருமையாக மாறத் தொடங்கியது.

``ஒண்ணு கறுப்பு, ஒண்ணு வெள்ளை'' இருவேறு நிறம் கொண்ட இரட்டைக் குழந்தைகள்...

``என்னுடைய 29 வயதான கணவர் ஆஷ்டன் பாதி ஜமைக்கன், பாதி ஸ்காட்டிஷ். குழந்தைகள் பிறக்கும்போது இருவரிடத்திலும் பெரிய வித்தியாசமில்லை. நாள்கள் செல்லச் செல்ல மகளின் நிறம் கருமையாக மாறத் தொடங்கியது.

Published:Updated:
twins ( Chantelle Broughton )

இரட்டையர்கள் குறித்து நிறைய கேள்விப்பட்டு இருப்போம். இரண்டு குழந்தைகளுக்கும் சில வித்தியாசங்கள் இருந்தாலும், பெரும்பாலும் இரண்டு குழந்தைகளும் ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால், பெண் ஒருவருக்கு இருவேறு நிறங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்.

Twins
Twins
pixabay

29 வயதான சான்ட்டல் புரோட்டன் (Chantelle Broughton), கடந்த ஏப்ரல் மாதம், அயோன் மற்றும் அசிரா (Ayon and Azirah) என்ற இரட்டையர்களைப் பெற்றுள்ளார். இதில் மகன் அயோன் பச்சை நிறக் கண்களோடு, வெள்ளையாக இருக்க, மகள் அசிரா பிரவுன் நிறக் கண்களோடு கருமையான சரும நிறத்தைக் கொண்டுள்ளாள்.

இரட்டையர்கள் இருவேறு சரும நிறங்களைக் கொண்டிருப்பது மில்லியன் மக்களில் ஒருவருக்குதான் நிகழும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து சான்டல் தெரிவிக்கையில், ``நான் வெள்ளையாக இருக்கிறேன். ஆனால், என்னுடைய தாய்வழி தாத்தா நைஜீரியன். என் கணவர் ஆஷ்டன் பாதி ஜமைக்கன், பாதி ஸ்காட்டிஷ்.

குழந்தைகள் பிறந்தபோது இருவரிடத்திலும் பெரிய வித்தியாசமில்லை. நாள்கள் செல்லச் செல்ல மகளின் நிறம் கருமையாக மாறத் தொடங்கியது. இவர்களின் முடியுமே வித்தியாசமாக உள்ளது. மகளுக்கு அடர்த்தியாக சுருள் முடி உள்ளது. மகனுக்கு முழுவதும் வேறு விதமாக உள்ளது.

Medical
Medical
Photo from Pixabay

அதுமட்டுமல்லாமல், இருவரும் முற்றிலும் மாறுபட்ட குணாதிசயத்தைப் பெற்றுள்ளனர். மகள் அமைதியாக இருக்கும் நிலையில், மகனோ, தனக்கு அதிக கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறான். ஆனால், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு புன்னகைப்பதைக் கவனித்தேன். அவர்கள் இப்படியே இருப்பார்கள் என நினைக்கிறேன். எங்களால் இதை நம்ப முடியவில்லை என்கிறார்கள் குடும்பத்தினரும் நண்பர்களும்’’ எனக் குழந்தைகள் குறித்த தகவல்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.