Published:Updated:

துருக்கி : 24 மணி நேரத்தில் 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் - 3,600-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்!

துருக்கி நிலநடுக்கம்
News
துருக்கி நிலநடுக்கம்

24 மணி நேர இடைவெளியில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் துருக்கி, சிரியாவில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

Published:Updated:

துருக்கி : 24 மணி நேரத்தில் 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் - 3,600-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்!

24 மணி நேர இடைவெளியில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் துருக்கி, சிரியாவில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

துருக்கி நிலநடுக்கம்
News
துருக்கி நிலநடுக்கம்

சிரியா எல்லையின் தென்கிழக்கே, துருக்கியின் ஒரு பகுதியான காஸியான்டெப்பிலிருந்து (Gaziantep) 33 கிலோமீட்டர் தொலைவில், நூர்டாகி நகரத்தின் அருகில் நேற்று அதிகாலை 3:20 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் 7.8 அளவில் பதிவாகியிருக்கும் இந்த அதிபயங்கர நிலநடுக்கத்தை அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் உறுதிசெய்திருக்கிறது.

துருக்கி - நிலநடுக்கம்
துருக்கி - நிலநடுக்கம்

சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தால், அந்தப் பகுதியில் நூற்றுக்கணக்கான கட்டடங்கள் விழுந்தன. அதில் ஏராளமானோர் சிக்கிக்கொண்டனர். நிலநடுக்கம் ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே அந்தப் பகுதியில் மீட்புப்பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

துருக்கி - நிலநடுக்கம்
துருக்கி - நிலநடுக்கம்

மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்றுவந்த நிலையில், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்திருப்பதாகவும், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்திருப்பதாகவும் அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். துருக்கியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் தாக்கம் காரணமாக, சிரியாவிலும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. அங்கும் தீவிர மீட்புப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவந்தன. துருக்கியின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை நிறுவனமும், ஐரோப்பிய ஒன்றியமும் அங்கு தீவிர மீட்புப்பணிகளில் ஈடுபட்டுவந்தன.

துருக்கி நிலநடுக்கம்
துருக்கி நிலநடுக்கம்

நேற்று காலை 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மீண்டும் நேற்று மாலை, இரவு என அடுத்தடுத்து பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் இரண்டு முறை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பாதிப்புகள் மிகவும் மோசடைமடைந்திருக்கின்றன. 24 மணி நேர இடைவெளியில் மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் துருக்கி, சிரியாவில் ஆயிரக்கணக்கான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. மீட்புப்பணியினர், இதுவரை கட்டட இடிபாடுகளில் சிக்கிய 2,000-க்கும் மேற்பட்டோரை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்திருக்கின்றனர். அதே வேளையில், நெஞ்சை உலுக்கும் விதமாக இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியாவில் இதுவரை 3,600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருப்பதாக அங்கிருந்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது.