Published:Updated:

சவப்பெட்டியில் 1 மணிநேர திகில் அனுபவம் பெற ரூ.47 லட்சம்... பயத்தைப் போக்க நூதன ஏற்பாடு!

funeral ( pixabay )

கேட்பதற்கே பயமாக இருந்தாலும், இப்படிச் செய்வதால் `மக்களின் பயம் மற்றும் அச்சத்தில் இருந்து வெளிவர இது பெரிதும் உதவும்’ என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

பயத்தைப் போக்கிக்கொள்ள, அந்த பயத்தை முதலில் எதிர்கொள்ள வேண்டும் எனப் பலர் சொல்லிக் கேட்டிருப்போம். எது பயமோ அந்த பயத்துக்கான சூழலை எதிர்கொள்கையில், அந்த பயத்திலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

fear
fear
pixabay

இந்நிலையில், ரஷ்ய நிறுவனமான ப்ரீகேட்டடு அகாடமி, பயத்தைப் போக்க `psychic therapy’ என்ற டெக்னிக்கை பயன்படுத்துகிறது. அதாவது, பயத்திலிருந்து ஒருவரை வெளிக்கொண்டு வர, அவரை ஒரு மணிநேரத்துக்கு உயிருடன் சவப்பெட்டியில் புதைக்கிறது.

கேட்பதற்கே பயமாக இருந்தாலும், இப்படிச் செய்வதால் `மக்களின் பயம் மற்றும் அச்சத்தில் இருந்து வெளிவர இது பெரிதும் உதவும்’ என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இப்படி ஒருவரை சவப்பெட்டியில் புதைத்து ஒரு மணிநேரம் வரையில் வைத்திருக்க, ரூ.47 லட்சம் வரை இந்நிறுவனத்தால் பெறப்படுகிறது. இவ்வளவு தொகையைச் செலுத்த முடியாதவர்கள் ரூ.12 லட்சம் வரை கொடுக்கலாம். இவர்களுக்கு இந்தச் செயல்முறை ஆன்லைனில் நடத்தப்படும். தங்களுடைய இறுதி ஊர்வலத்தை ஆன்லைனிலேயே பார்க்கலாம். இறுதிச் சடங்கில் பாடப்படும் பாடல்களும் மெழுகுவத்திகளும் இவருக்காக ஏற்றப்படும். 

candles
candles
pixabay

இந்த நிறுவனத்தைத் தோற்றுவித்த யாகடெரினா ப்ரீஓப்ராஹென்ஸ்கே (Yakaterina Preobrazhenskaya) கூறுகையில், ``இறுதி அடக்கம் செய்யும் இந்த முறை மிகவும் பாதுகாப்பானது. அதோடு எங்களுடைய வாடிக்கையாளர்களின் பாதுகாப்பே எங்கள் நிறுவனத்துக்கு முதன்மை முக்கியத்துவம் வாய்ந்தது. 

அடக்கம் செய்யப்பட்டு மீளும் செயல்முறைக்குப் பின், அந்த நபருக்கு வாழ்வதற்கான விருப்பம் மீண்டும் உருவாகும். பயத்தைப் போக்குவது மட்டுமல்லாமல், மனநல திறன்களை வளர்க்கவும் இந்த தெரபி பெரிதும் உதவும்'' என்று கூறியுள்ளார். 

என்னதான் இருந்தாலும் ஒரு மாதிரி திகிலா இருக்கே பா..!