Published:Updated:

வட அமெரிக்காவின் பிரமாண்ட பொங்கல் திருவிழா! #MyVikatan

Representational Image
Representational Image

வட அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் மெட்ரோபிளக்ஸ் தமிழ் சங்கம் MTS வழங்கும் 2020-ம் ஆண்டு பிரமாண்ட பொங்கல் விழா இன்று நடைபெறுகிறது.

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!

ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்களை ஒன்றிணைக்கும் புது முயற்சியாக, மெட்ரோப்ளெக்ஸ் தமிழ் சங்கம், இதுவரை கண்டிராத மிகப்பெரிய பொங்கல் விழாவாக டல்லாஸில் மிகப்பெரிய இடவசதி கொண்ட டாக்டர் பெப்பர் அரேனா அரங்கத்தில், பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக கொண்டாடவுள்ளது.

வட அமெரிக்காவின் பிரமாண்ட பொங்கல் திருவிழா! #MyVikatan

இங்கு நடக்கும் கபடிப் போட்டியில் 10 அணிகள் மோதுகின்றன. இதில் இரண்டு பெண்கள் அணி கலந்துகொள்வது சிறப்பான செய்தியாகும். பாரம்பர்ய விளையாட்டுக்களான உறி அடித்தல், கயிறு இழுத்தல் முதலியவை ஏழாயிரத்துக்கும் அதிகமான பார்வையாளர்கள் முன்னிலையில் நடக்கிறது. 300 பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் ஒரே வண்ண சேலையில் அரங்கேற்றிடும் கும்மி நடனம் அரங்கேறுகிறது. ஞானசம்பந்தம் ஐயா மற்றும் பிரபல பேச்சாளர்கள் பங்கு பெறும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

பங்கேற்பாளர்களுக்கு MTS தன்னார்வலர்கள் கைப்பட சமைக்கும் அறுசுவை மதிய உணவ வழங்கப்படவுள்ளது.

-சக்திகுமார்

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

My Vikatan
My Vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், வீடியோ, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். மீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க இங்கே க்ளிக் செய்க https://www.vikatan.com/special/myvikatan/

பின் செல்ல