Published:Updated:

`ராபர்ட் நம்மை கவனிக்கிறான்'; உலகின் மிகவும் அச்சுறுத்தும் பேய் பொம்மை; உண்மை சம்பவத்தின் பின்னணி!

Robert ( insta )

இவனுடைய வாழ்வில் அழகாகத் தெரிந்த பொம்மை, இவனைச் சுற்றியுள்ள அனைவருக்கும் விநோதமாகத் தெரிந்தது. அந்த பொம்மையில் ஏதோ சரியில்லை என அனைவரும் கூற ஆரம்பித்தனர்.

`ராபர்ட் நம்மை கவனிக்கிறான்'; உலகின் மிகவும் அச்சுறுத்தும் பேய் பொம்மை; உண்மை சம்பவத்தின் பின்னணி!

இவனுடைய வாழ்வில் அழகாகத் தெரிந்த பொம்மை, இவனைச் சுற்றியுள்ள அனைவருக்கும் விநோதமாகத் தெரிந்தது. அந்த பொம்மையில் ஏதோ சரியில்லை என அனைவரும் கூற ஆரம்பித்தனர்.

Published:Updated:
Robert ( insta )

யார் இந்த ராபர்ட்? இன்றளவும் மக்கள் இவனைப்  பார்த்து அச்சம் கொள்ளக்  காரணம் என்ன?

மிகவும் ரம்யமாக தனக்கென செய்யப்பட்ட நாற்காலியில் தனக்கே உரித்தான அமைதியோடு, மாலுமியின் அழகான உடையோடு, கையில் பொம்மை வைத்துக் கொண்டு, கால் மீது கால் போட்டு அமர்ந்திருக்கும் இந்த ராபர்ட் பொம்மையா மனிதர்களை அச்சுறுத்தக் கூடியவன்?

`ராபர்ட் நம்மை கவனிக்கிறான்'; உலகின் மிகவும் அச்சுறுத்தும்  பேய் பொம்மை; உண்மை  சம்பவத்தின் பின்னணி!
pixabay

ஆனால் நீங்கள் பார்க்கும் இந்த அமைதியான ராபர்ட் உலகிலேயே பயங்கரமான பேய் பொம்மையாம். ஆமாம் என்கின்றனர், ராபர்ட்டை சந்தித்தவர்கள். இவனால் உங்களுக்கு கார் விபத்துகளை ஏற்படுத்த முடியும், வேலையை இழக்க வைக்க முடியும், ஏன் விவாகரத்து ஏற்படுத்தவும் முடியும் என்று கூறுகின்றனர்.  

Annabelle, chucky போன்ற பேய் பொம்மைகளின் கதைகளைப் பார்த்திருப்போம். ஆனால் நிஜ உலகில் ராபர்ட் தான் அச்சுறுத்தக் கூடியவன். 

1905-ல், ராபர்ட் யூஜின் ஓட்டோ என்ற தன்னுடைய பேரனுக்கு  அவருடைய தாத்தா பிறந்தநாள் பரிசாக வழங்கியதுதான் இந்த பொம்மை. ஓட்டோவிற்கு, Gene என்ற பெயரும் உண்டு. இவன் அந்த பொம்மையை மிகவும் நேசித்தான். இவனின் பால்ய காலம் பொம்மையோடே கழிந்தது. அதனால் இந்த பொம்மைக்கும் ராபர்ட் என்ற பெயரையே வைத்தான்.  

Annabelle
Annabelle

போகும் அனைத்து இடங்களுக்கும் இந்த பொம்மையைக் கொண்டு சென்றான். இவனுடைய வாழ்வில் அழகாகத் தெரிந்த பொம்மை, இவனைச் சுற்றியுள்ள அனைவருக்கும் விநோதமாகத் தெரிந்தது. அந்த பொம்மையில் ஏதோ சரியில்லை என அனைவரும் கூற ஆரம்பித்தனர். 

பொம்மையின் நடமாட்டம் வீட்டில் இருப்பதைப் பலர் கண்டனர். ஒரு ஜன்னலில் இருந்து மறு ஜன்னலுக்குப் பொம்மை நகர்ந்தது. யாருமில்லா நேரங்களில் வீட்டில் சுற்றி வந்தது. அறையில் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில், அதைக் கவனிப்பதோடு முகபாவங்களை மாற்றியது எனப் பலர் கூறினர்.   

திருமணத்திற்குப் பின்னும் ஜீனுடன் இந்த பொம்மை  இருந்தது. ஆனால் இவனுடைய மனைவிக்கு இந்த பொம்மையைப் பிடிக்கவில்லை. ஜீன் மரணத்திற்குப் பின் அந்த வீட்டை மிர்ட்டில் ரியுட்டர் என்பவர் வாங்கினார். அப்போதும் அவ்வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் காலடி சப்தங்களையும், சிரிப்பு சப்தங்களையும் கேட்பதாகக் கூறினர்.

`ராபர்ட் நம்மை கவனிக்கிறான்'; உலகின் மிகவும் அச்சுறுத்தும்  பேய் பொம்மை; உண்மை  சம்பவத்தின் பின்னணி!

118 வயதான இந்த பொம்மை, 1994-ம் ஆண்டு முதல் ஃப்ளோரிடா, ஈஸ்ட் மார்டெல்லோ அருங்காட்சியகத்தில் காட்சிக்காக ஒரு கண்ணாடிப்பெட்டியில் வைக்கப்பட்டுள்ளது. அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளரான கோரி கன்வெர்டிடோ, இப்போது ராபர்ட்டின் பராமரிப்பாளராக உள்ளார்.

வருடத்திற்கு ஒருமுறை அவனைப் பெட்டியில் இருந்து எடுத்து ஏதேனும் பாதிப்பு உள்ளதா எனப் பார்ப்பார். ராபர்ட்டின் கதைகளை இவரிடம்  கூறுகையில், ``எனக்கு ராபர்ட்டுடன் மோசமான அனுபவங்கள் ஏதும் இல்லை. எனக்கு அவனைப் பராமரிக்கும் வேலை இருக்கிறது, அதை நான் செய்கிறேன். இது எப்போதுமே அடிப்படையான ஓர் உறவாகவே இருந்து வருகிறது’’ என்று தெரிவித்துள்ளார்.   

மறுபடியும் சென்று ராபர்ட்டை இன்னொரு முறை பாருங்கள்.. ராபர்ட் உங்களை கவனித்து கொண்டிருக்கிறான்!