உங்கள் வயதென்ன என்ற கேள்விக்கு உடனே பதில் சொல்ல முடியும். ஆனால் தென் கொரியா மக்கள் வயதைக் கணக்கிடும் முறையைக் கேட்டால் ஆச்சர்யப்பட்டு போவீர்கள்.
நம் வழக்கத்தில், குழந்தை பிறந்தால், அந்தக் குழந்தை பிறந்த அதே தேதி அடுத்த ஆண்டு வரும்போது ஒரு வயது என மதிப்பிடுவோம். ஆனால் தென் கொரியாவில் வேறு முறையைப் பின்பற்றுகின்றனர். அதாவது ஒன்பது மாதங்கள் குழந்தை, தாயின் வயிற்றில் இருப்பதும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகிறது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குழந்தை பிறந்த அன்றே அந்தக் குழந்தைக்கு வயது ஒன்று. உதாரணத்திற்கு, ஒரு குழந்தை டிசம்பர் மாதத்தில் பிறக்கிறது என்றால் பிறந்த நாளன்றே அந்தக் குழந்தையின் வயது ஒன்று. ஜனவரி மாதம் தொடங்கியதும் அதன் வயது இரண்டாகிவிடும்.
கேட்பதற்கு வியப்பாக இருந்தாலும் இந்த முறையைதான் தென் கொரிய மக்கள் கடைப்பிடித்து வருகின்றனர். இதைத் தவிர்த்து வயதைக் கணக்கிடும் மற்ற இரண்டு முறைகளும் தென் கொரியாவில் கடைப்பிடிக்கப்படுகிறது. குழந்தை பிறக்கும் போது அதன் வயது பூஜ்ஜியம். ஒரு வருடம் கழித்து குழந்தை பிறந்த அதே தேதியில் வயது அதிகரிக்காது, மாறாக புதுவருடத்தின் போதே குழந்தையின் வயது அதிகரிக்கும்.

இந்த வயதுக் கணக்கீட்டு முறையால், தொடர் குழப்பங்களும், தேவையற்ற சமூக பொருளாதார செலவுகளும் உண்டாவதால், பல நூற்றாண்டுகள் பழைமையான இந்தக் கணக்கீட்டு முறையை மாற்ற நாட்டின் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள யூன் சுக் யோல், தற்போது வலியுறுத்தி வருகிறார். விரைவில் இந்த `கொரிய வயது' முறை மாறலாம் என பலராலும் எதிர்பார்க்கப்படுகிறது.