Published:Updated:

தனி வீடுகளுக்குக் குடிபுகும் இலங்கை மலையகத்தமிழர்கள்!

‘அட்டன்’ ரஞ்சித்

மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தனிவீட்டுத் திட்டத்தில் இரண்டு அறைகள், ஒரு வரவேற்பு அறை, மலசலக்கூட வசதி என்பன 750 சதுர அடி நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது.

தனி வீட்டுத் திட்டம்
தனி வீட்டுத் திட்டம்
இந்தக் கட்டுரை எழுதிய ‘அட்டன்’ ரஞ்சித், இலங்கையில் அட்டன் என்ற ஊரைச் சேர்ந்தவர். இலங்கையின் பல்வேறு ஊடகங்களில் செய்திக்கட்டுரைகள் எழுதிவருகிறார். அச்சு ஊடகத்தில் 30 ஆண்டுகள், தொலைக்காட்சியில் ஏழு ஆண்டுகள் என 37 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டவர்.
தனி வீட்டுத் திட்டம்
தனி வீட்டுத் திட்டம்

இலங்கையிலுள்ள மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் 150 ஆண்டுகளுக்கும் மேலாக லயன் வாழ்க்கை முறையில்தான் (இடைவெளியில்லாத குடியிருப்புகள்) வாழ்ந்துவந்தனர். மெதுவாக மாடி வீட்டுத் திட்டத்துக்குக் கொண்டுவரப்பட்டபோதிலும் மலையக மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான வழிவகைகள் கிடைக்கவில்லை. இருந்தபோதிலும், 2015-ம் ஆண்டு புதிய அரசாங்கம் உருவாகிய பிறகு மலையக மக்கள் லயன் வாழ்க்கை முறைமையிலிருந்து மெதுமெதுவாகத் தனி வீட்டுத் திட்டத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளனர்.

மலைநாட்டுப் புதிய கிராமங்களில் தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் மலையகத்தில் தனி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுச் செல்கிறது. இதில் அமைச்சகத்தின் நிதி ஒதுக்கீட்டில் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிறுவனத்தின்கீழ் காணிப் பரப்பளவில் தனி வீட்டுத் திட்டம் மேற்கொள்ளப்பட்டு மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டுள்ளது. இதேவேலை இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியோடு அநேகமான தோட்டப் பகுதிகளில் தனிவீட்டுத் திட்டங்களை மேற்கொண்டு மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டு வருகிறது.

தனி வீட்டுத் திட்டம்
தனி வீட்டுத் திட்டம்

இந்நிலையில் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு அமைத்துக் கொடுக்கப்படுகின்ற தனிவீட்டுத் திட்டமானது நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவின் பணிப்புரைக்கு அமைய இலங்கை நாட்டின் பிரதமர் ரனில் விக்ரமசிங்க வழிகாட்டலின்கீழ் மேற்கொள்ளப்படுகிறது. குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, மின்சார வசதி போன்ற அடிப்படை வசதிகளோடு இந்தத் தனி வீட்டுத்திட்டம் அமைத்துக் கொடுக்கப்படுவதோடு ஒரு தனி வீட்டுத் திட்டத்துக்கு 10 லட்சம் ரூபாய் செலவில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மலையகத்தில் வாழ்கின்ற இந்திய வம்சா வழி மக்களுக்கென இலங்கை அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீட்டின்கீழ் அமைச்சர் பழனி திகாம்பரத்தின் தலைமையில், கடந்த 2015-ம் ஆண்டு முதல் இதுவரை காலகா பகுதியில் 8,000 தனிவீட்டுத் திட்டத்தில் ஏராளமான வீட்டுத் திட்டங்கள் மக்கள் பாவனைக்குக் கையளிக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல வீடுகள் வெகுவிரைவில் கையளிக்கப்பட இருக்கின்றன.

தனி வீட்டுத் திட்டம்
தனி வீட்டுத் திட்டம்

ஆரம்பகாலப் பகுதியில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் முதற்கட்டமாக 4,000 வீடுகள் மலையக வம்சாவழி மக்களுக்கு வழங்கப்படவுள்ளபோதிலும் அதில் 1,600 வீடுகள் மக்களுக்குக் கையளிக்கப்பட்டுள்ளவேளையில், மேலும் 2,400 வீடமைப்புத் திட்டத்தின் அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ள நிலையில், இந்த 2,400 இந்திய வீட்டுத் திட்டங்களும் மக்கள் பாவனைக்கு வெகுவிரைவில் கையளிக்கப்படவுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் ஊடாக வழங்கப்பட்ட 4,000 வீடமைப்புத் திட்டத்தில் மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்ட 1,600 வீடமைப்புத் திட்டத்தில் பூண்டுலோயா டன்சினன் தோட்டப் பகுதியில் அமைக்கப்பட்ட இந்திய வீடமைப்புத் திட்டத்துக்கு மகாத்மா காந்திபுரம் எனவும் பொகவந்தலாவ செல்வகந்த தோட்டப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டத்துக்கு வீ.கே.வெள்ளையன் புரம் எனவும், பூண்டுலோயா எல்பொட பகுதியில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்துக்கு பகவத்சிங்புரம் எனவும், டயகம பகுதியில் அமைக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்துக்கு ஆபிரஹாம் சிங்கோ என்ற பெயரிலும புதிய கிராமங்களாக மாற்றியமைக்கப்பட்டுள்ளன.

தனி வீட்டுத் திட்டம்
தனி வீட்டுத் திட்டம்

இதேவேளை அண்மையில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, டிக்கோய கிழங்கன் வைத்தியசாலையைத் திறந்து வைத்து நோர்வுட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றின்போது இந்திய வம்சாவழி மலையக மக்களுக்கு அமைச்சர் பழனி திகாம்பரத்தால் முன்னெடுக்கப்பட்ட வீடமைப்புத் திட்டத்தை இனங்கண்ட இந்தியப் பிரதமர் மலையக மக்கள் நலன் கருதி மேலும் 10,000 வீடமைப்புத் திட்டங்களை வழங்குவதாக வாக்குறுதி வழங்கியவாறு மலையக மக்களுக்கு 10,000 வீடமைப்புத் திட்டத்தை வழங்கியுள்ளார்.

இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் வழங்கப்பட்ட அந்த 10,000 வீடமைப்புத் திட்டத்தை மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் தற்போது இடம்பெற்று வருகின்றன.

தனி வீட்டுத் திட்டம்
தனி வீட்டுத் திட்டம்

மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தனி வீட்டுத் திட்டத்தில் இரண்டு அறைகள், ஒரு வரவேற்பு அறை, மலசலக்கூட வசதி என்பன 750 சதுர அடி நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ளது. நுவரெலியா பதுளை கண்டி மாத்தறை தெனியாய களுத்துறை கேகாலை ஆகிய பகுதிகளில் இந்தத் தனி வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இது மாத்திரமன்றி மலையகத் தோட்டப்புறங்களில் அண்மைக்காலமாகத் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் புதிய தனிவீட்டுத் திட்டத்தை அமைச்சர் பழனி திகாம்பரம் முன்னெடுத்து வருகிறார். இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் அமைக்கப்பட்ட டிக்கோயா கிழங்கன் ஆதார வைத்தியசாலையில் பெருந்திரளான மக்கள் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

தனி வீட்டுத் திட்டம்
தனி வீட்டுத் திட்டம்

அத்தோடு, மலையகத்தில் இதுவரை காலமும் புனரமைக்கப்படாத பிரதான வீதிகள் கோடி ரூபாய் செலவில் காப்பட் வீதியாகவும் தோட்டப்புறங்களில் உள்ள வீதிகள் கொங்ரீட் வீதியாகவும் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றன.

மலையகத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற ஒவ்வொரு வீடமைப்புத் திட்டத்தின் திறப்புவிழா நிகழ்வுக்கு இலங்கைக்கான இந்திய உயஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து கலந்துகொண்டு மக்கள பாவனைக்குக் கையளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தனி வீட்டுத் திட்டம்
தனி வீட்டுத் திட்டம்

இந்நிலையில், இலங்கையில் வாழ்கின்ற இந்திய மலையக வம்சாவழி மக்களுக்கு இந்த வீட்டுத் திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் இந்திய அரசாங்கத்துக்குக் கோடான கோடி நன்றிகளைச் சமர்ப்பணமாக்குகிறார்கள், இந்திய மலையக வம்சாவழி மக்கள்.