Published:Updated:

``உங்க லேப்டாப்பை நான்தான் எடுத்தேன்...'' - மன்னிப்பு கேட்டு திருடன் அனுப்பிய மெசேஜ்!

laptop ( pixabay )

``என்னுடைய லேப்டாப் கடந்த இரவு திருடப்பட்டது. எனக்கு மெயில் அனுப்பி மன்னிப்பு கேட்டுள்ளார்கள். இதற்கு அழுவதா சிரிப்பதா என்பது தெரியாமல், நான் ஒரு கலவையான எமோஷனில் உள்ளேன்..."

``உங்க லேப்டாப்பை நான்தான் எடுத்தேன்...'' - மன்னிப்பு கேட்டு திருடன் அனுப்பிய மெசேஜ்!

``என்னுடைய லேப்டாப் கடந்த இரவு திருடப்பட்டது. எனக்கு மெயில் அனுப்பி மன்னிப்பு கேட்டுள்ளார்கள். இதற்கு அழுவதா சிரிப்பதா என்பது தெரியாமல், நான் ஒரு கலவையான எமோஷனில் உள்ளேன்..."

Published:Updated:
laptop ( pixabay )

கோடி ரூபாய் கொடுத்தாலும், கொலை, கொள்ளை, திருட்டு இதையெல்லாம் செய்யமாட்டேன் என ஒவ்வொருவரும் தனக்கென சில நெறிமுறைகளை விதித்துக் கொள்வதுண்டு. ஆனால் திருடன் ஒருவன், திருடியதற்காக மன்னிப்பு கேட்டு தனக்கென ஒரு எதிக்ஸை கடைப்பிடித்த விசித்திர சம்பவம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

Thief
Thief
pixabay

திருடன், ஒருவரின் லேப்டாப்பை திருடியதோடு, அந்த லேப்டாப்பில் உள்ள மெயில் மூலமாகவே லேப்டாப் உரிமையாளருக்கு ஒரு மெசேஜ் அனுப்பி உள்ளான். அதில் ``நான் நேற்று உங்கள் லேப்டாப்பை திருடினேன். வாழ்க்கையை நடத்த முடியாமல் தவித்து வந்த எனக்கு, பணம் தேவைப்பட்டது.

நீங்கள் ரிசர்ச் புரொபோசலில் பிசியாக இருப்பதை என்னால் பார்க்க முடிகிறது. அதை இந்த மெயிலோடு நான் இணைத்துள்ளேன். உங்களுக்கு வேறு ஏதாவது ஃபைல் தேவைப்பட்டால், திங்கள்கிழமை 12 மணிக்குள் எனக்குத் தெரிவியுங்கள்’’ என மெயில் அனுப்பி உள்ளான். 

இதை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட காட் குளுவா (God Guluva), `என்னுடைய லேப்டாப் கடந்த இரவு திருடப்பட்டது. எனக்கு மெயில் அனுப்பி மன்னிப்பு கேட்டுள்ளார்கள். இதற்கு அழுவதா சிரிப்பதா என்பது தெரியாமல், நான் ஒரு கலவையான எமோஷனில் உள்ளேன்' எனத் தெரிவித்துள்ளார்.

இதற்காகத் தான் திருடினேன் என தன்னுடைய இயலாமையைச் சொல்லி மன்னிப்பு கேட்டதால், இந்தத் திருடனைக் ``கொஞ்சம் நல்ல திருடன்'' என இணையவாசிகள் கூறி வருகின்றனர். திருடினதால கெட்டவன்னு சொல்றதா, இல்ல மன்னிப்பு கேட்டதால நல்லவன்னு சொல்றதா என பலரும் குழம்பி வருகின்றனர்.

எதுவாயினும்,.. ``ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க சான்றோர் பழிக்கும் வினை’’ என்ற திருக்குறளையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்!