Published:Updated:

`இவங்க ட்வின்ஸ்தான்; ஆனால், இடைவெளி மட்டும் ஒரு வருஷம்!' - எப்படி தெரியுமா?

Baby (Representational Image)
News
Baby (Representational Image) ( Photo by Omar Lopez on Unsplash )

``இது என்னுடைய மருத்துவ வாழ்க்கையில் மறக்கமுடியாத பிரசவம். புத்தாண்டை இதைவிட சிறப்பாக யாரும் வரவேற்க முடியாது" என்று தெரிவித்துள்ளார். பாத்திமா தம்பதியினருக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஓர் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.

கலிஃபோர்னியாவிலுள்ள மருத்துவமனை ஒன்றில் பாத்திமா மாட்ரிகள் மற்றும் ராபர்ட் ட்ரூஜிலோ தம்பதிக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்தனர். இதிலென்ன சுவாரஸ்யம் என்கிறீர்களா? இந்தக் குழந்தைகள்தான் புத்தாண்டு முழுவதும் சென்சேஷன். இரட்டைக் குழந்தைகள் இருவரும் வெவ்வேறு வருடங்களில் பிறந்திருப்பதுதான் அந்த சென்சேஷனுக்குக் காரணம்.

கர்ப்பிணி (Representational Image)
கர்ப்பிணி (Representational Image)

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

ஒரு குழந்தை டிசம்பர் இரவு 11.45 மணியளவிலும், மற்றொரு குழந்தை 15 நிமிடம் கழித்து, புத்தாண்டு பிறந்த நள்ளிரவு 12 மணிக்கும் பிறந்தனர். இதனால் இரட்டைக் குழந்தைகளை வெவ்வேறு நாள்களில், வெவ்வேறு மாதத்தில், வெவ்வேறு வருடத்தில் ஒரே பிரசவத்தில் பெற்றெடுத்தார் என்ற சாதனையைப் படைத்துள்ளார் அந்தத் தாய். இரட்டையர்களில் ஒரு குழந்தை ஆண், மற்றொரு குழந்தை பெண்.

இதுகுறித்து பாத்திமா அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனை வெளியிட்ட பதிவு உலகம் முழுவதும் வைரல் ஆனது. இது குறித்து அந்தப் பதிவில், ``அய்லின் 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி பிறந்தார். அவளுடைய சகோதரன் ஆல்பிரடோ அந்தக் குழந்தைக்கு 15 நிமிடங்களுக்கு முன் 2021-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி பிறந்தான்" என்று குறிப்பிடப்பட்டு குழந்தைகளின் போட்டோவையும் வெளியிட்டிருந்தது.

இதுகுறித்து குழந்தைகளின் தாய் பாத்திமா பேசியபோது, ``எனக்கு இரு வேறு வருடங்களில் இரட்டைக் குழந்தைகள் பிறந்த விஷயம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது" என்று தெரிவித்துள்ளார். குழந்தைகளின் புகைப்படத்தை நெட்டிசன்கள் அதிகம் ஷேர் செய்தும், அவர்களுக்கு வாழ்த்துக் கூறியும், இது அதிசயமான நிகழ்வு என்றும் பதிவிட்டு வருகின்றனர்.

Baby (Representational Image)
Baby (Representational Image)
Image by Christian Abella from Pixabay

இதுகுறித்து பாத்திமாவிற்கு பிரசவம் பார்த்த மருத்துவர் ஆனா அபிரில் அரியஸ் கூறுகையில், ``இது என்னுடைய மருத்துவ வாழ்க்கையில் மறக்கமுடியாத பிரசவம். புத்தாண்டை இதைவிட சிறப்பாக யாரும் வரவேற்க முடியாது" என்று தெரிவித்துள்ளார். பாத்திமா தம்பதியினருக்கு ஏற்கெனவே இரண்டு பெண் குழந்தைகள் மற்றும் ஓர் ஆண் குழந்தை உள்ளது குறிப்பிடத்தக்கது.