Published:Updated:

அதிஷ்டம்னா இதுதான்... லாட்டரியில் வென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்!

lottery ( Pixabay )

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும், 5-3-8-3-4 என்ற ஐந்து இலக்க எண்ணுள்ள லாட்டரி மீது பந்தயம் கட்டியுள்ளனர். இவர்கள் வாங்கிய நம்பரிலேயே லாட்டரி அடித்ததால், மூன்று பேரும் தலா 50,000 டாலர் வரை வென்றுள்ளனர்.

ஒருவருக்கு லாட்டரி அடித்தாலே, அந்தக் குடும்பமே குஷியாகி விடுவதுண்டு. ஆனால், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேருக்கும் லாட்டரி அடித்தால் எப்படி இருக்கும்..?  `கூரையைப் பிய்த்துக்கொண்டு அதிர்ஷ்டம் கொட்டும்’ என்று கேள்விப்பட்டிருப்போம். அதேபோலதான் அதிர்ஷ்டம் இவர்கள் வசமாகியுள்ளது. 

அதிஷ்டம்னா இதுதான்...  லாட்டரியில் வென்ற  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்!
pixabay

இங்கிலாந்தின் மேரிலாந்து பகுதியில் வசித்து வரும் 61 வயதானவர், 28 வயதான இவரின் மகளும், 31 வயதான இவரின் மகனும் ஒரே இலக்க எண்ணின் மீது பந்தயம் கட்டினர். இதற்கான செலவு ஒரு அமெரிக்க டாலர் ஆகும்.

அதாவது அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும், 5-3-8-3-4 என்ற ஐந்து இலக்க எண்ணுள்ள லாட்டரி மீது பந்தயம் கட்டியுள்ளனர். இவர்கள் வாங்கிய நம்பரிலேயே லாட்டரி அடித்ததால், மூன்று பேரும் தலா 50,000 டாலர் ( இந்திய மதிப்பில் 41 லட்ச ரூபாய் ) வரை வென்றுள்ளனர்.

அதிஷ்டம்னா இதுதான்...  லாட்டரியில் வென்ற  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர்!
pixabay

வென்ற பணத்தில் ஒருவர் வீடு வாங்க உள்ளதாகவும், மற்ற இருவர் அந்த பணத்தை முதலீடு செய்வதற்கும் பயன்படுத்த உள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.