Published:Updated:

உலகின் ஆபத்தான விஷச் செடி; வீட்டில் வளர்ப்பவரின் விநோத ஆசையும் அதன் பின்னணியும்!

Gympie-Gympie ( @stevewil94 )

சூடான அமிலத்தில் எரிவது போலவும், அதேசமயம் மின்சாரம் தாக்கியது போலவும் இந்தத் தாவரத்தின் கொட்டு நம்பமுடியாத அளவுக்கு வலியும் வேதனையும் நிறைந்ததாக இருக்கும்.

உலகின் ஆபத்தான விஷச் செடி; வீட்டில் வளர்ப்பவரின் விநோத ஆசையும் அதன் பின்னணியும்!

சூடான அமிலத்தில் எரிவது போலவும், அதேசமயம் மின்சாரம் தாக்கியது போலவும் இந்தத் தாவரத்தின் கொட்டு நம்பமுடியாத அளவுக்கு வலியும் வேதனையும் நிறைந்ததாக இருக்கும்.

Published:Updated:
Gympie-Gympie ( @stevewil94 )

போர் அடிக்கிறது என்றால் என்ன செய்யலாம்?. சிலர் அமைதியாகப் படுத்து உறங்கலாம், சிலர் தொலைபேசி மூலம் யாரையாவது அழைத்துப் பேசலாம், சிலர் வேண்டுமென்றே பிறரை வம்பிழுக்கலாம். இன்னும் சிலர் வடிவேல் பாணியில், ``இதுவும் ஒருமாதிரி நல்லாதானே இருக்கு இப்படியே போவோம்’’ என சும்மாவே  இருக்கலாம். 

ஆனால் போர் அடித்ததால், தன்னுடைய வீட்டில் மிகவும் ஆபத்தான உயிரையும் பறிக்கக்கூடிய செடியை ஒருவர் வளர்த்துள்ளார்.

உலகின் ஆபத்தான விஷச் செடி; வீட்டில் வளர்ப்பவரின் விநோத ஆசையும் அதன் பின்னணியும்!

டேனியல் எம்லின் - ஜோன்ஸ் என்ற 49 வயதான பிரிட்டிஷ் மனிதர், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் ஆன்லைனில் பாடம் எடுக்கும் ஆசிரியராக இருக்கிறார்.

இவருக்குச் செடிகள் என்றால் பிடிக்கும். ஆனால், தோட்ட வகை செடிகளால் சலிப்படைந்தவர், வேறு ஏதாவது செடிகள் வைக்கலாம் என்று யோசித்துள்ளார். அந்தக் கணத்தில் இவருக்கு உதித்ததுதான் ஆபத்தான செடியை வளர்க்கும் எண்ணம்.

உலகில் மிகவும் ஆபத்தான Gympie-Gympie எனும் செடியின் விதையை ஆர்டர் செய்து வாங்கி வளர்த்து வந்தார். செடி வளர்ந்ததும் அதன் மீது ஆபத்து என்று எழுதி கூண்டில் வைத்து விட்டார்.

ஆஸ்திரேலியன் கொட்டும் மரம் (Australian Stinging Tree) என அழைக்கப்படும் Gympie-Gympie தாவரம், நம் மேலே பட்டால், சூடான அமிலத்தில் எரிவது போலவும், அதேசமயம் மின்சாரம் தாக்கியது போலவும் வலியும் வேதனையும் இருக்கும். இந்த வேதனை வாரங்கள், மாதங்கள் வரைகூட ஒருவரை பாதிக்கலாம். அந்த அளவுக்கு `உலகின் மிகவும் விஷம் நிறைந்த தாவரம்’ என  அறியப்படுகிறது. நம்பமுடியாத அளவுக்கு வலியும் வேதனையும் நிறைந்ததாக இருக்குமாம்.

உலகின் ஆபத்தான விஷச் செடி; வீட்டில் வளர்ப்பவரின் விநோத ஆசையும் அதன் பின்னணியும்!

இந்த தாவரத்தால் தீண்டப்படும்போது, பல மாதம் வரை வலியும், தற்கொலை எண்ணமும்கூட வரும் எனத் தெரிவிக்கின்றனர்.

இது குறித்துப் பேசிய டேனியல், ``நீங்கள் இணையத்தில் இதற்கான விதைகளைப் பெறலாம். ஆனால், இது வெளியே பரவாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். எனவே, நான் இதை முன் அறையிலுள்ள பானையில் வைத்தேன். ஆஸ்திரேலியாவிலுள்ள ஒரு நிறுவனத்திலிருந்து இந்த விதைகளை வாங்கினேன். இதற்கு 60 ஆஸ்திரேலிய டாலர்கள் வரை செலவானது.

அதன் விலை மலிவாக இல்லை. எனக்குச் செடிகள் என்றால் பிடிக்கும். இருந்தாலும் தோட்டச் செடி வகைகளால் சலிப்படைந்த நான் இதை வளர்க்க ஆரம்பித்தேன்’’ எனத் தெரிவித்துள்ளார்.

போர் அடித்ததால் விஷ செடியை வாங்கி வளர்த்த இம்மனிதரின் செயல், அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது.

கொஞ்சம் டெரர் ஆன ஆளா இருப்பாரோ..?