Published:Updated:

புகழ்பெற்ற BTS இசைக்குழுவில் சேர ஆசை... வீட்டை விட்டு வெளியேறி 1,200 கி.மீ. சென்ற சிறுமிகள்!

இரு சிறுமிகளும் ஒன்றாக வெளியே சென்று விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்துவிடும் நிலையில், பல மணி நேரமாகியும் அவர்களை காணாததால் முஹம்மத் ஜுனைத் என்பவர் தன்னுடைய மகளையும், மற்றொரு சிறுமியையும் காணவில்லை எனக் காவல்துறையில் புகார் அளித்தார்.

புகழ்பெற்ற BTS இசைக்குழுவில் சேர ஆசை... வீட்டை விட்டு வெளியேறி 1,200 கி.மீ. சென்ற சிறுமிகள்!

இரு சிறுமிகளும் ஒன்றாக வெளியே சென்று விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்துவிடும் நிலையில், பல மணி நேரமாகியும் அவர்களை காணாததால் முஹம்மத் ஜுனைத் என்பவர் தன்னுடைய மகளையும், மற்றொரு சிறுமியையும் காணவில்லை எனக் காவல்துறையில் புகார் அளித்தார்.

Published:Updated:

தென்கொரிய இசைக்குழுவான BTS -க்கென, உலகம் முழுவதிலும் தனிரசிகர் பட்டாளம் உண்டு. பிரபலங்கள் மீதுள்ள அதீத விருப்பத்தால் அவர்களைக் காண வேண்டும், பேச வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்குள்ளும் இருக்கும். ஆனால் பாகிஸ்தானின் கராச்சி நகரில் வசிக்கும் இரு சிறுமிகள், இவர்களைக் காண வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர்.

girl( representational image)
girl( representational image)
pexels

காவல்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, பாகிஸ்தானில் உள்ள கராச்சி நகரம், கொரங்கி பகுதியில் வசித்து வரும் 13 மற்றும் 14 வயதுடைய சிறுமிகள் இருவர், ஜனவரி 2-ம் தேதியில் இருந்து காணாமல் போயுள்ளனர். இரு சிறுமிகளும் ஒன்றாக வெளியே சென்று விளையாடிவிட்டு வீட்டிற்கு வந்துவிடும் நிலையில், பல மணி நேரமாகியும் அவர்களை அன்று காணாததால், முஹம்மத் ஜுனைத் என்பவர் தன்னுடைய மகளையும், மற்றொரு சிறுமியையும் காணவில்லை என காவல்துறையில் புகார் அளித்தார். யாரேனும் சிறுமிகளைக் கடத்தி இருக்கக்கூடும் எனச் சந்தேகிக்கப்பட்டு, புகார் பதிவு செய்யப்பட்டது.

தேடுதலில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் சிறுமிகள் இருவரையும் 1,200 கிலோமீட்டர் தொலைவில் லாகூரில் கண்டுபிடித்தனர். சிறுமிகளிடம் விசாரணை மேற்கொண்டதில், தென்கொரிய, பிரபல இசைக்குழுவான BTS -ஐ சந்திக்கச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.

diary
diary
pexels

இது குறித்து கொரங்கி பகுதியின் மூத்த காவல் கண்காணிப்பாளர் அப்ரைஸ் அலி அப்பாசி கூறுகையில், ``இசைக்குழுவால் ஈர்க்கப்பட்ட சிறுமிகள் இருவரும் கொரியாவுக்கு சென்று BTS இசைக்குழுவில் சேர விரும்பி உள்ளனர். போலீஸாருக்கு கிடைத்த தகவலில், சிறுமி ஒருவர் தனது ஆசையைக் குறிப்பிட்டுள்ளார். ரயிலில் போகவிருக்கும் கால அட்டவணையும், தோழியுடன் தப்பித்துப் போகவிருக்கும் திட்டங்களையும் அதில் குறிப்பிட்டு இருந்தார்’’ என்று தெரிவித்துள்ளார். 

தென்கொரிய இசைக்குழுவான BTS-ல் சேர சிறுமிகள் வீட்டை விட்டுச் சென்ற சம்பவம் கராச்சி நகரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.