Published:Updated:

கர்ப்பம் கண்டறியப்பட்ட 48 மணி நேரத்தில் பிரசவம்... இது அமெரிக்க ஆச்சர்யம்!

கர்ப்பம் ( சித்திரிப்புப் படம் )

அந்தப் பெண்ணின் உடலில் திடீரென சில மாற்றங்கள் உண்டாகின. கால்களில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்தார். அப்போதுதான், அவர் கர்ப்பமாக இருக்கும் தகவலை மருத்துவர் தெரிவித்தார்.

கர்ப்பம் கண்டறியப்பட்ட 48 மணி நேரத்தில் பிரசவம்... இது அமெரிக்க ஆச்சர்யம்!

அந்தப் பெண்ணின் உடலில் திடீரென சில மாற்றங்கள் உண்டாகின. கால்களில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்தார். அப்போதுதான், அவர் கர்ப்பமாக இருக்கும் தகவலை மருத்துவர் தெரிவித்தார்.

Published:Updated:
கர்ப்பம் ( சித்திரிப்புப் படம் )

அமெரிக்காவில் ஆச்சர்யமூட்டும் நிகழ்வாக, கர்ப்பமானதை உறுதிசெய்த 48 மணி நேரத்துக்குள் பெண் ஒருவர் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.

பொதுவாக, ஒரு பெண்ணின் கர்ப்பகாலம் என்பது, 10 மாதங்களாகும். குறைப்பிரசவங்கள்கூட குறைந்தபட்சம் 6 - 7 மாதங்களில்தான் நிகழ்கின்றன. ஆனால், அமெரிக்காவில் ஒரு பெண்ணுக்கு, கர்ப்பம் கண்டறியப்பட்ட 48 மணி நேரத்தில் பிரசவம் நிகழ்ந்துள்ளது.

Baby (Representational Image)
Baby (Representational Image)
Photo by Omar Lopez on Unsplash

அமெரிக்காவின் ஒமாஹாவைச் சேர்ந்த 23 வயதான ஆசிரியரான பெய்டன் ஸ்டோவர்தான், இத்தகைய விந்தையான அனுபவத்தைச் சந்தித்துள்ளார். பணியிடத்தில் எதிர்கொண்ட அழுத்தம் காரணமாக ஏற்பட்ட உடல் சோர்வை அவர் கவனிக்கத் தவறினார். உடல் எப்போதும் சோர்வாக இருப்பது இயல்பானதுதான் என்று கருதி, அதை அவர் பொருட்படுத்தவில்லை.

ஆனால், ஸ்டோவரின் உடலில் திடீரென சில மாற்றங்கள் உண்டாகின. கால்களில் வீக்கம் ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவரிடம் சென்று பரிசோதித்தார். அப்போதுதான், அவர் கர்ப்பமாக இருக்கும் தகவலை மருத்துவர் தெரிவித்தார். மேலும், அல்ட்ரா சவுண்ட் உட்பட சில பரிசோதனைகளை டாக்டர்கள் மேற்கொண்டு இதை உறுதி செய்தனர். அத்துடன், ஸ்டோவரின் சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழந்துவிட்டதாகவும், சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

Baby (Representational image)
Baby (Representational image)
Pexels

கருவுறுதலின் ஆரம்பகட்டத்தில் ஏற்படும் ரத்த அழுத்த பாதிப்பு (Pre-Eclampsia) ஸ்டோவருக்கு உள்ளதாகவும், இது பிற உறுப்புகளை பாதிக்கலாம் எனவும் மருத்துவ அறிக்கைகள் தெரிவித்தன. இதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஸ்டோவருக்கு இரவில் ஆண் குழந்தை பிறந்ததாக, அவரின் காதலன் தெரிவித்துள்ளார். குழந்தையைக் காப்பாற்ற மருத்துவர்கள் சிசேரியன் மேற்கொண்டபோது தனக்கு மிகவும் பயமாகவும் கவலையாகவும் இருந்ததாக, ஸ்டோவர் கூறினார்.

ஸ்டோவருக்கு 10 வாரங்கள் முன்கூட்டியே பிறந்துள்ள குழந்தை, நான்கு பவுண்டு எடை கொண்டுள்ளது. இந்தச் சம்பவத்தை நம்ப முடியவில்லை என்று தெரிவித்துள்ள ஸ்டோவர் தம்பதி, எப்போதும் சிறந்த பெற்றோராக இருக்க விரும்புவதாகவும் பூரிப்புடன் தெரிவித்துள்ளனர்.