Published:Updated:

``ஆண்களின் ஷூக்களையே அணிகிறேன்”: கின்னஸ் சாதனை படைத்த உலகின் பெரிய பாதம் கொண்ட பெண்!

தான்யா ஹெர்பர்ட் ( கின்னஸ் உலக சாதனை )

``என்னுடைய பெற்றோர்கள் எனக்கு மிகப்பெரிய ஆரோக்கியமான தன்னம்பிக்கையை கற்றுக் கொடுத்தார்கள். அதனால் நான் உயரமாய் இருப்பதைக் குறித்து எப்போதும் வருந்தியதில்லை...''

``ஆண்களின் ஷூக்களையே அணிகிறேன்”: கின்னஸ் சாதனை படைத்த உலகின் பெரிய பாதம் கொண்ட பெண்!

``என்னுடைய பெற்றோர்கள் எனக்கு மிகப்பெரிய ஆரோக்கியமான தன்னம்பிக்கையை கற்றுக் கொடுத்தார்கள். அதனால் நான் உயரமாய் இருப்பதைக் குறித்து எப்போதும் வருந்தியதில்லை...''

Published:Updated:
தான்யா ஹெர்பர்ட் ( கின்னஸ் உலக சாதனை )

அமெரிக்காவின்  டெக்சாஸ் பகுதியைச் சேர்ந்த தான்யா ஹெர்பர்ட் என்பவர், உலகின் மிகப்பெரிய பாதங்களைக் கொண்ட பெண் என்ற கின்னஸ் சாதனையைப் படைத்துள்ளார்.

தான்யா ஹெர்பர்ட் பாதம்
தான்யா ஹெர்பர்ட் பாதம்

இவரின் வலது பாதம், 13.03 அங்குலமுடையவை (33.1 செ.மீ), இடது பாதம் 12.79 அங்குலமுடையவை (32.5 செ.மீ). அதோடு இவர் உலகின் உயரமான பெண்ணை விட 3 அங்குலமே உயரம் குறைந்தவர் என, கின்னஸ் உலக சாதனை தெரிவித்துள்ளது. 

இந்த சாதனை குறித்து தான்யா கூறுகையில், ``உலகில் மிகப்பெரிய பாதங்களைக் கொண்ட பெண் என்பதற்காக நான் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பெற்றுள்ளேன். எனது பாதங்கள் 33 செ.மீ நீளமுடையவை. நான் 16, 17 அளவுள்ள ஆண்களின் காலணிகளையும், 18 அளவுள்ள பெண்களின் காலணிகளையும் அணிவேன்.

நான் 6. 9 அடி உயரம். ஆச்சர்யமாக, நான் உலகின் மிக உயரமான பெண்ணை விட 3 இன்ச் மட்டுமே குறைவு. நான் எப்போதும் ஆண்களின் டென்னிஸ் ஷூ மற்றும் லோஃபர்ஸ்களை அணிவேன். பள்ளிப் பருவங்களில் அழகாக உடை உடுத்தும் போது, ஆண்களின் காலணிகளை உடுத்துவது அவ்வளவு அழகாக இருக்காது.

கடைகளிலும் எனக்கேற்ற காலணிகள் கிடைப்பதில்லை.  எனவே என்னுடைய காலணிகளை எப்போதும் ஆன்லைனில் தான் வாங்குவேன்.

வளரும் போதும் சுற்றியுள்ள அனைவரையும் விட, நானே உயரமானவளாக இருப்பேன். என்னுடைய அம்மா 6.5 அடி, அப்பா 6.4 அடி, அதனால் நான் உயரமாய் இருப்பதை விட வேறு வழியில்லை.

என்னுடைய பெற்றோர்கள் எனக்கு மிகப்பெரிய ஆரோக்கியமான தன்னம்பிக்கையை கற்றுக் கொடுத்தார்கள். அதனால் நான் உயரமாய் இருப்பதைக் குறித்து எப்போதும் வருந்தியதில்லை.

எனக்கு நினைவிருக்கும் வரை என்னுடைய உயரத்தால், நான் கேலி கிண்டலுக்கு உள்ளானதில்லை; என்னுடைய நண்பர்கள் என்னை நன்றாகவே பார்த்துக் கொண்டார்கள். நான் வளர்கையில் எங்குச் சென்றாலும், அனைவரும் என்னை நேசித்தார்கள் அன்பு செலுத்தினார்கள். 

என்னால் முன்னர் நுழைய முடியாத கதவுகள், தற்போது கின்னஸ் சாதனை படைத்ததனால் திறக்கப்படலாம்’’ எனத் தெரிவித்துள்ளார். 

வாழ்த்துக்கள்  தான்யா ஹெர்பர்ட்!