Published:Updated:

உடைந்த பாலத்தை, நீதிபதியிடம் சொல்லி சரி செய்த பாபநாசம் சிறுமியின் உறுதி!

உடைந்த பாலத்தை, நீதிபதியிடம் சொல்லி சரி செய்த பாபநாசம் சிறுமியின் உறுதி!

உடைந்த பாலத்தை, நீதிபதியிடம் சொல்லி சரி செய்த பாபநாசம் சிறுமியின் உறுதி!

உடைந்த பாலத்தை, நீதிபதியிடம் சொல்லி சரி செய்த பாபநாசம் சிறுமியின் உறுதி!

உடைந்த பாலத்தை, நீதிபதியிடம் சொல்லி சரி செய்த பாபநாசம் சிறுமியின் உறுதி!

Published:Updated:
உடைந்த பாலத்தை, நீதிபதியிடம் சொல்லி சரி செய்த பாபநாசம் சிறுமியின் உறுதி!

 பள்ளியின் ஆரம்ப வகுப்புகளில் கடிதம் எழுதுதல், விதிமுறைகளை அறிதல், நாம் என்னவெல்லாம் செய்ய வேண்டும் போன்ற பாடங்கள் இருக்கும். குறிப்பாக, சமூக அறிவியல் பாடத்தில் சாலை விதிகள், அரசின் வழிமுறைகள், குடிமகனின் கடமைகள் போன்ற அடிப்படை விஷயங்களைக் கற்றுத்தருவார்கள். அப்படி, தான் கற்றதிலிருந்து தன் ஊரில் ஒரு நல்ல மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார் சிறுமி'சாய்டாப்ஸி'. தஞ்சை மாவட்டம் பாபநாசத்தில் வசிக்கும் இவர், அருகிலுள்ள தனியார்ப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருகிறார். அப்படி என்ன செய்தார் என்பதை அவரே விளக்குகிறார்.

'என் பேரு டாக்டர். சாய்டாப்ஸி (டாக்டர் ஆகப்போகிறாராம். அதனால், யார் கேட்டாலும் இப்படித்தான் சொல்வாராம்). நான் சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கிறேன். எங்க தெருவில் ஒரு சின்ன பாலம் இருக்கு. அதுல நடக்கிறவங்க கீழே விழுந்துட கூடாதுன்னு, பாதுகாப்புக்காக இருந்த தடுப்பு உடைஞ்சு ரெண்டு வருஷம் ஆச்சு. ரெண்டு பக்கமும் தடுப்பு இல்லாம பாலத்துல போகவே பயமா இருக்கும். நாங்க ஸ்கூலுக்குப் போகும்போது கொஞ்சம் கவனம் இல்லாம போனாக்கூட வாய்க்காலில் விழுந்துவிடுவோம். அப்படி விழுந்துட்டா, வாய்க்காலில் கிடக்கும் கிளாஸ், முள் எல்லாம் குத்தி, கிழிச்சிடும் ஆபத்தும் இருக்கு. இரவில் வருபவர்களுக்கு ரொம்ப சிரமம். இந்த மாதிரி ஏதாவது பிரச்னை என்றால் அதிகாரிகளிடம் தெரிவிக்கணும்னு நான் சிவிக்ஸ் புக்ல படிச்சிருக்கேன். அப்போதான் எங்க ஊரு கோவில் கும்பாபிஷேகத்துக்கு ஜட்ஜ் அங்கிள் வந்தார்.

நான் ஜட்ஜ் அங்கிளிடம் இந்தப் பாலம் பாதுகாப்பு இல்லாமல் இருப்பதைப் பற்றிச் சொன்னேன். ஜட்ஜ் அங்கிள், என்னைத் தனியாக் கூப்பிட்டு முழு விவரத்தையும் கேட்டாங்க. எங்களைச் சுத்தி போலீஸா இருந்தாங்க, எனக்குப் பயமா இருந்துச்சு. ஆனா, எல்லா விஷயத்தையும் தைரியமா சொன்னேன். நாளைக்கு வந்து மனு கொடுக்க சொன்னாங்க. ஸ்கூல்ல சொல்லி கொடுத்த மாதிரி, அனுப்புநர், பெருநர், உயர்திரு அய்யா எல்லாம் போட்டு நானே மனு எழுதினேன். ஜட்ஜ் அங்கிளிடம் கொடுத்தபோது, வாங்கிக்கொண்டு, சீக்கிரம் கட்டித்தருவோம் என்று பிராமிஸ் செய்தார். அப்புறம் உதவியாளரை அனுப்பி இடத்தைப் பார்க்க சொன்னாங்க. அவங்க சொன்னமாதிரியே கொஞ்ச நாள்ல பாலத்ததையும் தடுப்பையும் கட்டிக் கொடுத்துட்டாங்க. நான் நன்றி கடிதம் எழுதி ஜட்ஜ் அங்கிளிடம் கொடுத்தேன். 'இதே மாதிரி படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும்'னு என்னை வாழ்த்தி பரிசு கொடுத்தாங்க' என்று மகிழ்ச்சியாக சொல்கிறார் சாய்டாப்ஸி'.

சாய்டாப்ஸியின் அம்மா, 'அவளுக்கு பொதுவாகவே சமூகம் சார்ந்து செயல்படுவதில் ஆர்வம். தெருவில் ஒரு பத்து நண்பர்களை வைத்துக்கொண்டு தெருவிளக்கு எரியவில்லை என்று முறையிடுவது, தண்ணீர் வரவில்லை என்று கேட்பது எனத் துடிப்பாகச் செயல்படுவார்கள். சமீபத்தில், ராணுவ வீரர்கள் பலியானபோதுகூட எங்களிடம் சொல்லாமல்  நண்பர்களுடன் சேர்ந்து மெழுகுவர்த்தி வாங்கி, தெருவில் அஞ்சலி செலுத்தினார்கள். சென்னையில் இருக்கும்பொழுது ஜல்லிக்கட்டு போராட்டத்திற்குத் தினமும் சென்றாள். கடந்த பத்தாம் தேதி குபாபிஷேகதிற்கு பாபநாசம் நீதிபதி வந்தார். என்னிடம் சொல்லாமலே அவரிடம் பேசி, மனு எழுதி அவங்க அப்பாவுடன் சென்று இதைச் சாதித்துக்காட்டியிருக்கிறாள். ஊரில் எல்லோரும் பாராட்டினதைக் கேட்டது ரொம்ப சந்தோஷமா இருக்கு' என்றார்.

சிறிய பாலம்தான் என்றாலும், யாரும் அக்கறை காட்டாதபோது, ஒரு சிறுமி தன் சொந்த முயற்சியால் அதில் வெற்றியடைந்துள்ளார். 'என் ஸ்கூல்ல ஹெட் மாஸ்டர் எல்லோரையும் சாய்டாப்ஸி மாதிரி செயல்படனும் என்று சொன்னாங்க. அதைக் கேட்கும்போதே எனக்கு பெருமையா இருந்துச்சு' என்கிறார் சாய்டாப்ஸி. அதே நெகிழ்வுடன் ஒவ்வொருமுறையும் அந்தப் பாலத்தைக் கடக்கிறார்.