Published:Updated:

சிக்கு...புக்கு..குக்கு !

சிக்கு...புக்கு..குக்கு !

சிக்கு...புக்கு..குக்கு !

சிக்கு...புக்கு..குக்கு !

Published:Updated:

ஹாய் சுட்டீஸ், உங்கள் உடல் வளர்ச்சிக்குத் தேவையான இரும்புச் சத்தை அளிக்கும் அவல் மூலம்... அவல் பக்கோடா, அவல் பொட்டுக் கடலைமாவு லட்டு என ரெண்டு சூப்பர் ரெசிபிக்களைச் செய்து தந்திருக்கிறார் சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன். இவற்றைச் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய பயன்களையும், சிறப்புகளையும் விளக்குகிறார் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி. அம்மாக்கிட்டே செஞ்சு தரச் சொல்லி சாப்பிடுங்க சுட்டீஸ்!

 அவல் பக்கோடா!

தேவையானவை: அவல் - ஒரு கப்(100 கிராம்), பொட்டுக்கடலை - அரை கப்(50 கிராம்), கோதுமை மாவு - கால் கப்(25 கிராம்), நெய் - 4 டீஸ்பூன்(25 கிராம்), மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையானது, முந்திரி - 2 டீஸ்பூன்(10 கிராம்). முந்திரியை விருப்பம் இருந்தால் சேர்த்துக் கொள்ளவும்.

சிக்கு...புக்கு..குக்கு !
##~##

செய்முறை: அடுப்பில் மிதமான தீயில் அவலை வறுக்கவும் (எண்ணெய் வேண்டாம்). வறுத்த அவலை பொட்டுக் கடலையுடன் சேர்த்து, மிக்ஸியில் போட்டு மாவாக அரைக்கவும். இதனுடன் கோதுமை மாவு, உப்பு, நெய், பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து, தேவையான நீர் விட்டு, கெட்டியாகப் பிசைந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், சிறிது சிறிதாக கிள்ளிப் போட்டு சிவப்பாக பொரித்து எடுக்கவும்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 1558 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 156 கிராம்
புரோட்டீன் - 35 கி
கொழுப்பு - 87
கால்சியம் - 117 மில்லி கி
இரும்பு - 32 மி.கி
பீட்டா கரோட்டின் - 742 மைக்ரோ கிராம்
ஃபோலிக் ஆசிட் - 139 மை.கி

டயட்டீஷியன் கமென்ட்: அவல்  எளிதில் கிடைக்கக்கூடியது. இதில் கிடைக்கும் இரும்புச் சத்து மிகவும் அதிகம். ஒரு நாளைக்குத் தேவையான இரும்புச் சத்து ஒரே வேளையில் கிடைத்துவிடும்! இரும்புச் சத்து கிடைப்பதால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகம் சுரக்கும். உடலில் வலுக் குறைந்து காணப்படும் சுட்டிகளுக்கு அவல் ரொம்ப நல்லது. இதில் இருந்து கிடைக்கும் கால்சியம், குறைவுதான் என்றாலும் தேவைப் பட்டால் சிறிது எள்ளையும் சேர்த்துக்கொண்டால், தேவையான அளவு கால்சியம் கிடைக்கும். இதில் கண்களுக்கு நன்மை பயக்கும் பி-காம்ப்ளக்ஸ் கிடைக்கும்.

அவல், பொட்டுக்கடலை மாவு லட்டு!

தேவையானவை: எண்ணெய் இல்லாமல் வறுத்த அவல் - 2 கப் (200 கிராம்), பொட்டுக் கடலை - அரை கப்(100 கிராம்), சர்க்கரை - 2 கப் (300 கிராம்), திராட்சை, முந்திரி(10 கிராம்), (நெய்யில் வறுத்தது), நெய் - அரை கப்(100 கிராம்), ஏலத்தூள் - அரை டீஸ்பூன்.

சிக்கு...புக்கு..குக்கு !

செய்முறை: அவல், பொட்டுக்கடலை, சர்க்கரை இந்த மூன்றையும் மிக்ஸியில் போட்டு மாவாக அரைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் ஒரு பாத்திரத்தில் போட்டு... ஏலத்தூள், வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்து, நெய்யைக் காய்ச்சி ஊற்றி, சூடாக இருக்கும்போதே உருண்டைகளாகப் பிடிக்க வேண்டும்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 3199 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 513 கிராம்
புரோட்டீன் - 36 கி
கொழுப்பு - 108 கி

சிக்கு...புக்கு..குக்கு !

கால்சியம் - 111 மில்லி கி
இரும்பு - 5.5மி.கி
பீட்டா கரோட்டின் - 2513 மைக்ரோ கி
ஃபோலிக் ஆசிட் - 139 மை கி
கொலின் - 46.5

டயட்டீஷியன் கமென்ட்: அவல் பொட்டுக்கடலை மாவு லட்டு, ஆற்றலை அளிக்கும். இதில் பீட்டா கரோட்டின் அதிகம் கிடைப்பதால் கண்களுக்கு மிகவும் நல்லது. எடை குறைவாக இருக்கும் சுட்டிகள், இதை சாப்பிடுவதன் மூலம் எடையை அதிகரித்துக் கொள்ளலாம். ஏற்கெனவே பருமனாக இருக்கும் சுட்டிகள், இதை அதிகம் சாப்பிட வேண்டாம். இதிலிருந்து கிடைக்கும் ஆற்றல் உடனடியாக உடலில் சேரும். ஓடியாடுகின்ற குழந்தைகளுக்கு மிகவும் ஏற்ற உணவு. காலை, மாலைகளில் ஸ்நாக்ஸாகவும் கொடுக்கலாம்.

வாழைப்பூ துவையல்!

தேவையானவை: வாழைப்பூ - ஒன்று, மிளகாய் வற்றல் - 12, கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன், உளுத்தம்  பருப்பு - 2 டீஸ்பூன், பெருங்காயம்,  புளி - சிறிதளவு, உப்பு  தேவைக்கேற்ப.

செய்முறை: வாழைப்பூவை ஆய்ந்து, நறுக்கி சிறிது மோர் கலந்த நீரில் ஊற வைக்கவும். பிறகு, நீரில் மஞ்சள் பொடி கலந்து அடுப்பில் வேகவைக்கவும், மிளகாய் வற்றல், கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை சிறிது எண்ணெய்விட்டு வாணலியில் வறுக்கவும். பின்பு, வறுத்த பொருட்கள் சிறிது ஆறியவுடன், மிக்ஸியில் ரவைபோல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு, புளி வேகவைத்த வாழைப்பூ ஆகியவற்றைச் சேர்த்து மறுமுறை அரைத்து இறக்கினால், சுவையான வாழைப்பூ துவையல் ரெடி!

சிக்கு...புக்கு..குக்கு !