Published:Updated:

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

காப்பி அடிக்கலாம் வாங்க !

Published:Updated:
காப்பி அடிக்கலாம் வாங்க !

அந்தச் சிறுவன் மேடைப் பாடகியான தன் அம்மாவுடன் இசை நிகழ்ச்சிக்குச் சென்றான். மேடையில் பாடத் தொடங்கிய அவன் அம்மாவின் குரல் திடீரென்று கரகரப்பாகிவிட்டது. தொடர்ந்து பாடமுடியாமல் கீழே இறங்கிவிட்டாள். சட்டென்று அந்தச் சிறுவன் மேடையில் ஏறி தனக்குத் தெரிந்த பாடலை இனிமையாகப் பாடினான். அவனை உற்சாகப்படுத்த சில்லரைகளை மேடையை நோக்கிப் பார்வையாளர்கள் வீசினார்கள். உடனே பாடுவதை நிறுத்திய அவன், 'கொஞ்சம் பொறுங்கள்’ என்றபடி மேடையில் வீசப்பட்ட பணத்தைச் சேகரிக்கத் தொடங்கினான். சுட்டியின் இந்தச் செயல், பார்வையாளர்களை மேலும் உற்சாகப்படுத்தியது. பணத்தையும் சில்லரை களையும் சேகரித்து முடித்துவிட்டு மீண்டும் விட்ட இடத்தில் இருந்து பாட்டைத் தொடர்ந்தான்! அவன் அம்மா ஹென்னா ஹில், ''மகனே! நீதான் உலகத்திலேயே நம்பர் ஒன் கலைஞன். உன்னைப் பார்க்க மக்கள் போட்டி போட்டு வருவார்கள்!'' என்றாள். ஆம்! அன்று அவனது அம்மா சொன்னது பிற்காலத்தில் உண்மையாயிற்று. அந்தச் சிறுவன்தான் சார்லி சாப்ளின்.

லண்டனில் 1889 ஏப்ரல் 16-ல் பிறந்த சார்லிக்கு ஒரு வயதானபோது, அம்மாவை விட்டு அப்பா பிரிந்துவிட்டார். அம்மா தனது சொற்ப வருமானம் மூலம் சார்லியையும் அவனது அண்ணன் சிட்னியையும் கஷ்டப்பட்டு வளர்த்தார். வீட்டில் எந்நேரமும் வறுமைதான். பேப்பர் போடுவது, முடிவெட்டுவது, பொம்மை செய்வது என சார்லி செய்யாத வேலையே இல்லை.  தாய்க்கு மனநிலை பாதிப்பு ஏற்பட்டபோது,  வீதியில் பாட்டுப்பாடி, நடனமாடி காசு தேற்றினான்.

'எட்டுப் பொடியன்கள்’ என்ற நடனக்குழுவில்  மேடையேறிய சார்லி, தன் தனித்தன்மையை நிரூபித்தான். மொழி தெரியாதவர்களையும் சிரிக்க

##~##

வைக்கும் சிந்தனையில்... வெறும் நடை, உடை, பாவனைகளால் சிரிக்க வைத்து, மக்களிடம் வரவேற்பைப் பெற்றான். பிறகு, 'கார்னோ’ என்ற நாடகக் குழுவில் இணைந்து, அமெரிக்கா சென்றார் சார்லி. மாக்சென்னட் என்பவர், தனது 'விணீக்ஷீவீஸீரீ கி லிவீஸ்வீஸீரீ’ என்ற திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பளித்தார். அது வெற்றிடைய வில்லை. மனம் தளராத சாப்ளின், மக்களைக் கவரும் வகையில் புதுமையாக செய்ய நினைத்தார். அப்போது தோன்றியதுதான் இன்றைக்கும் உலகமே ரசிக்கும் 'ஜிக்ஷீணீனீஜீ’ (நாடோடி) கேரக்டர்.

தொளதொள கால்சட்டை,  இறுக்கமான மேல் சட்டை, ஒரு  தொப்பி, கையில் பிரம்பு, சிறிய மீசை, மிகப் பெரிய வலது கால் ஷூவை இடது காலிலும், இடது கால் ஷூவை வலது காலிலும் அணிந்து, கால்களை அகட்டி தத்தக்கா பித்தக்கா என்று நடந்தார். 'கிட்ஸ் ஆட்டோ ரேஸ் அட் வெனிஸ்’  சார்லி சாப்ளின் நாடோடி வேடத்தில் நடித்த முதல் படம். சுட்டிகள் முதல் பாட்டிகள் வரை அதனைப் பார்த்து குலுங்க குலுங்கச் சிரித்தனர். பின்னர், அவரே இயக்கி நடித்த பல மௌனப் படங்கள் வெற்றி பெற்றன. ஒரு காலத்தில் வறுமையால் வாடிய  சாப்ளின், உலகில் மிக அதிகம் சம்பாதிக்கும் கலைஞர்களில் ஒருவரானார்.

காப்பி அடிக்கலாம் வாங்க !

அவர் அமெரிக்காவுக்கு எதிராகச் செயல்படுகிறார் என குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது வெளியூருக்குச் சுற்றுலா சென்றார். அவர் மீண்டும் அமெரிக்கா திரும்ப வேண்டுமெனில், விசாரணைக் குழு முன் ஆஜராகி பதிலளிக்க வேண்டும் என அமெரிக்க அரசு நிபந்தனை விதித்தது. அதனை ஏற்க மறுத்து, ஸ்விட்சர் லாந்தில் குடியேறினார். அங்கு தன் வாழ்க்கை அனுபவங்களை சுயசரிதையாக எழுதி வெளியிட் டார்.

1972 - ல் அவரது 83-வது வயதில்  திரைப்படத்துறையில் ஆற்றிய அற்புத பங்களிப்பைக் கௌரவிக்கும் வகையில் சிறப்பு ஆஸ்கார் விருது அறிவிக்கப்பட்டது. 20 ஆண்டுகளுக்கு முன் அவரை வெளியேற்றிய அமெரிக்கா, திருவிழாபோல் அலங்காரங்கள், வாணவேடிக்கைகள், வரவேற்பு நிகழ்ச்சிகள் என உற்சாகமாக அவரை வரவேற்றது. 1975-ல் இங்கிலாந்து அரசு அவருக்கு 'சர்’ என்ற உயரிய பட்டத்தை அளித்து பெருமைப்படுத்தியது.

காந்தி, ஐன்ஸ்டீன் போன்ற உலகத் தலைவர்கள் முதல் சாமானிய மக்கள்வரை அனைவரையும் கவர்ந்த சார்லி சாப்ளினிட மிருந்து தன்னம்பிக்கை, விடாமுயற்சி, தளராத மனம், வித்தியாசமான சிந்தனை என நம் வெற்றிக்குத் தேவையான அத்தனை விஷயங்களையும் காப்பி அடிக்கலாம் வாங்க!

காப்பி அடிக்கலாம் வாங்க !