Published:Updated:

நியூ ஸ்போர்ட்ஸ் !

நியூ ஸ்போர்ட்ஸ் !

நியூ ஸ்போர்ட்ஸ் !

நியூ ஸ்போர்ட்ஸ் !

Published:Updated:

கே.கணேசன்

'இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஜோடி!

நியூ ஸ்போர்ட்ஸ் !
##~##

சின்சினாட்டி நகரில் சமீபத்தில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில்... இந்தியாவின் இரட்டைப் புயல்களான லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி ஜோடி வெற்றி பெற்றுள்ளது. இந்த ஜோடி சமீப காலமாகத்தான் மீண்டும் இணைந்து ஆட ஆரம்பித்து இருக்கிறது. இது, இந்த சீசனில் பெற்ற மூன்றாவது கோப்பையாகும். ஏற்கனவே, சோனி எரிக்ஸன் கோப்பை மற்றும் சென்னை ஓப்பன் கோப்பை ஆகியவற்றை இந்த ஜோடி கைப்பற்றி இருந்தது.

இதே ஜோடி, கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன் இக்கோப்பையை வெற்றி பெற்று இருந்தது. இப்போது தங்களுக்கு எதிரான ஃப்ரெஞ்சு, செர்பிய ஜோடியை நேர் செட்களில் ஜெயித்தது. ''பத்தாண்டுகளுக்கு முன் வெற்றியை எப்படி உணர்ந்தோமோ... அப்படியே இப்போதும் உணர்கிறோம். இது அடுத்து வரும் அமெரிக்க ஓப்பன் போட்டிக்கு எங்களுக்கு உந்து சக்தியாக இருக்கும்'' என்கிறார்கள்.

வெல்டன் டிராவிட்!

நியூ ஸ்போர்ட்ஸ் !

டிராவிட் மீண்டும் ஒரு முறை, 'நான் இப்போதும் இந்தியப் பெருஞ்சுவர் தான்’ என்பதை இங்கிலாந்தில் நிரூபித்து இருக்கிறார். நடந்து முடிந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் மொத்த இந்திய அணியும் தடுமாறியபோது, இவர் மட்டும் ஒற்றை நபராகக் களத்தில் நின்று முடிந்தவரை போராடினார். இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் சக வீரர்கள் தடுமாற... இவர்  நான்கு போட்டிகளில் மூன்று சதங்கள் எடுத்து, இந்தத் தொடரின் சிறந்த பேட்ஸ்மென் விருதினைப் பெற்றார். 35 சதங்களைக் கடந்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் சுனில் கவாஸ்கரின் சாதனையைக் கடந்து இருக்கிறார். இவருக்கு மேலே பாண்டிங் (39), காலிஸ் (40), சச்சின் (51) ஆகியோர் இருக்கிறார்கள். டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 12,775 ரன்கள் சேர்த்து, சச்சினுக்கு அடுத்து ரெண்டாவது இடத்தில் இருக்கிறார் டிராவிட்.