அன்புள்ள ஸ்ரீ வாஸ்தவா...

உங்களது வீரத்துக்கு எங்கள் சல்யூட்.

உங்கள் தந்தைக்கு இந்திய ரயில்வேயில் வேலை. கர்நாடக மாநிலத்திலிருந்து சத்தீஸ்கருக்கு அப்போதுதான் மாற்றல் செய்யப்பட்டிருந்தார். அதனால், நீங்கள் குடும்பத்துடன் சத்தீஸ்கரில் இருந்தீர்கள்.

உங்களுக்கு அப்போது ஆறு வயது.இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தீர்கள். அந்த ரயில்வே குடியிருப்புப் பகுதிக்குக் குடியேறி, புதிய பள்ளிக்கூடத்தில் சேர்ந்து கொஞ்ச நாட்களே ஆகி இருந்தன.

சத்தீஸ்கர், மிக அழகான நகரம். ஆனால், வீதி நாய்களால் நிரம்பி இருந்தது. நமது நாடு, நாய்களைத் தோழர்களாகக் கொண்டாடும் நாடு. ‘வீதி நாய்களை நகராட்சி நிர்வாகம் அழிக்கக் கூடாது’ என்கிற விலங்கு பாதுகாப்பு சட்டம் இயற்றிய உலகின் ஏழாவது நாடு. ஸ்ரீவாஸ்தவா, 2006-ம் ஆண்டு நடந்த சம்பவம்தானே அது?

மாலை நேரத்தில், வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்து, வீட்டுப் பாடம் எழுதிக்கொண்டிருந்தீர்கள். உங்களுக்குப் பக்கத்தில், ஓன்றரை வயதே ஆன தங்கைப் பாப்பா படுத்திருக்கிறாள். அந்தக் குழந்தைக்கு அருகே, பக்கத்து வீட்டின் இன்னொரு குட்டிப் பையனும் பொம்மையோடு இருக்கிறான். அந்தக் குழந்தையின் அம்மாவும், உங்கள் அம்மாவும் ரேஷன் வாங்கி வரச் சென்றிருந்தார்கள்.

நீங்கள், உங்களது வீட்டுப் பாடத்தை எழுதியபடியே, பொறுப்புள்ள அண்ணனாக அவர்களைப் பார்த்துக்கொண்டீர்கள்.

திடீரென்று, தெரு நாய்களுக்குள் பயங்கர சண்டை. நாய்கள் தோழமையானவைதான். ஆனால், கோபம் வந்துவிட்டால், பயங்கரமானவையாக மாறிவிடும். அவற்றிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அங்கே சண்டையில் ஈடுபட்ட மூன்று நாய்களில் ஒன்று, வெறியோடு மற்ற இரண்டு நாய்களையும் கடித்து, ‘தானே இந்த இடத்தின் உரிமையாளன்’ என்பது போல அட்டகாசம் செய்துகொண்டிருந்தது. அப்போது, தெருவில் யாருமே இல்லை.

கடிபட்ட இரண்டு நாய்களும், நீங்கள் இருந்த வீட்டுத் திண்ணைக்குத் தாவிவிட்டன. அவற்றின் கோபம், அங்கே அப்பாவியாக இருந்த உங்கள் மீது திரும்பிவிட்டது. குழந்தைகளைக் கடித்துக் குதற, வெறியோடு பாய்ந்தன.

பொம்மையோடு விளையாடிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பையன், கதறி அழத் தொடங்கினான். உடனே எழுந்த நீங்கள், அவற்றைத் துரத்த முயன்றீர்கள். அந்த நாய்கள் இரண்டும், உங்கள் தங்கைப் பாப்பாவிடம் வந்துவிட்டன.

நீங்கள் பாடம் எழுதப் பயன்படுத்திய மேஜையைத் தூக்கி, அவற்றின் மீது வீசினீர்கள். இரண்டு நாய்களையும் தெருவில் தள்ளி, விரட்டுவதற்குப் போராடினீர்கள்.

அப்போது, அவற்றின் கோபம் முழுக்க உங்கள் மீது திரும்பிவிட்டன. உங்களைக் கடிக்க ஆரம்பித்தன. வலி தாங்காமல் அலறியபோதும், குழந்தைகள் பக்கம் வந்துவிடாத வகையில் அவற்றோடு போராடினீர்கள்.

ஒரு நாய் ஓடிவிட்டது. ஆனால், மற்றொரு நாய், ‘விடுவேனா பார்’ என்பது போல திரும்பத் திரும்ப குழந்தைகள் இருக்கும் பக்கமே வந்தது. நாய் கடித்ததால், உங்கள் தொடையில் சதை கிழிந்து, ரத்தம் வந்தது.

அந்தச் சமயத்தில், அந்தப் பக்கமாக வந்தவர்கள் அதைப் பார்த்தார்கள். பதறியபடி, அந்த நாயைக் கழியால் அடித்து துரத்தினார்கள். பிறகு, உங்கள் மூவரையும் தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தார்கள். சிகிச்சை அளித்தார்கள்.

ஸ்ரீவாஸ்தவா, உங்களது துணிச்சலை அறிந்து அனைவரும் பாராட்டினார்கள். சத்தீஸ்கர் நிர்வாகம், வீதியில் திரியும் நாய்களைப் பிடிக்கவும், வெறி தணிக்கும் ஊசிகள் போடவும் உடனடியாகச் செயலில் இறங்கியது.

2007-ம் ஆண்டு, உங்களுக்கு வீரதீரக் குழந்தைகளுக்கான ‘சஞ்சய் சோப்ரா விருது’ வழங்கப்பட்டது. உங்கள் வீரத்துக்கு எங்கள் சல்யூட் ஸ்ரீவாஸ்தவா.

இப்படிக்கு,

சுட்டி இந்தியா.

வீரதீர சாகசங்கள் புரிந்த இந்தியக் குழந்தைகளுக்காக ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது, நேஷனல் பிரேவரி அவார்டு எனப்படும் ‘ராஷ்ட்ரிய வீர்த புரஸ்கார் விருது’. அதைப் பெற்ற சுட்டி வீரர்/வீராங்கனைகளைப் பற்றி சொல்லும் பகுதி இது.

ஆயிஷா இரா.நடராசன்

கண்ணா