ஹாய் சுட்டீஸ், இந்த முறை சமையல்கலை நிபுணர் வசந்தா விஜய ராகவன், உங்கள் உடல் நலத்துக்குத் தேவையான ரெண்டு ரெசிபிக்களைத் தந்திருக்கிறார். உடலுக்கு இரும்புச் சத்தை அளிக்கும் பேரீச்சை மற்றும் புரதச் சத்துக்களை அளிக்கும் உடைத்த கடலை, மாவுச் சத்தை அளிக்கும் கோதுமை ஆகியவற்றினால் செய்யப்பட்ட ரெசிபிக்கள் அவை. அம்மாவிடம் செய்து தரச்சொல்லி சாப்பிட்டு மகிழுங்கள்!

இவற்றைச் சுட்டிகள் சாப்பிடுவதால் கிடைக்கக்கூடிய பயன்களையும், சிறப்பு களையும் டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி விளக்குகிறார்.

பேரீச்சை கோவா ஸ்வீட்!

தேவையானவை: பால் கோவா (சர்க்கரை இல்லாதது) - ஒரு கப்(250 கிராம்), சர்க்கரை (- அரை கப்(100 கிராம்), பால்- அரை கப், பேரீச்சம் பழ விழுது - அரை கப் (50 கிராம்) (பாலில் ஊறவைத்து அரைக்கவும்), பாதாம் அல்லது முந்திரி (உடைத்தது) - இரண்டு டேபிள் ஸ்பூன், நெய்- 2 டீ ஸ்பூன்.

செய்முறை: அடி கனமான பாத்திரத்தில்... பால் கோவா, சர்க்கரை, உடைத்த பாதாம் பருப்புகளைப் போட்டு, அடுப்பில் மிதமான தீயில் வைத்துக் கிளறவும். பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்பொழுது அடுப்பை அணைத்துவிட்டு, பாதி விழுதை நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பவும். மேலே, பேரீச்சம் பழ விழுதை நன்றாகப் பரப்பவும். அதன் மேலே, மீதி உள்ள கோவாவைப் பரப்பவும். சூடு ஆறியவுடன் வில்லைகள் போடவும்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 1478 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 1758 கிராம்
புரோட்டீன் - 30 கி
கொழுப்பு - 73 கி
கால்சியம் - 1141 மில்லி கி
இரும்பு - 9.9 மி.கி
பீட்டா கரோட்டின் - 1359 மைக்ரோ கி
ஃபோலிக் ஆசிட் - 8.5 மை.கி
வைட்டமின் சி - 1.5

டயட்டீஷியன் கமென்ட்: இதில் முக்கியமாக, ஆற்றல் மிக அதிகமாகக் கிடைக்கிறது. கொழுப்பும் மாவுச்சத்தும்கூட அதிக அளவில் கிடைக்கிறது. கோவாவை வாணலியில் கிண்டுவதால் சிறிதளவுக்கு இரும்புச் சத்தும் நேரிடையாகக் கிடைக்கிறது. இதை, முன் பகல் நேரத்தில் ஸ்நாக்ஸ் ஆக சுட்டிகளுக்குச் சாப்பிடக் கொடுக்கலாம். பாலில் செய்வதால் கால்சியமும் கிடைக்கிறது. ஒல்லியாக இருக்கும் சுட்டிகளுக்கு அதிகமாகக் கொடுக்கலாம். குண்டான சுட்டிகளுக்கு... கொழுப்பு நீக்கப்பட்ட பாலில் கோவா செய்து, அதைச் சாப்பிடக் கொடுக்கலாம்.

கோதுமை மாவு சீடை!

தேவையானவை: லேசாக வறுத்த கோதுமை மாவு - 2 கப்(200 கிராம்), உடைத்த கடலை மாவு - அரை கப்(50 கிராம்), மிளகாய்த் தூள் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையானது, நெய் - 4 டீஸ்பூன் (20 கிராம்), பெருங்காயத் தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய் - தேவையானது.

செய்முறை: ஒரு வாயகன்ற பாத்திரத்தில், மேலே கொடுத்துள்ள எல்லாவற்றையும் போடவும். தேவையான நீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து, சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டிப் போட்டு பொரித்து எடுக்கவும்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 1518 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 171 கிராம்
புரோட்டீன் - 36 கி
கொழுப்பு - 76 கி
கால்சியம் - 144 மில்லி கி
இரும்பு - 14.9 மி.கி
பீட்டா கரோட்டின்-614மைக்ரோ கி
ஃபோலிக் ஆசிட் - 141 மை கி

டயட்டீஷியன் கமென்ட்: கோதுமை மாவும், உடைத்த கடலை மாவும் இருப்பதால்... மாவுச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம் கிடைக்கிறது. பீட்டா கரோட்டின் குறைவாகக் கிடைக்கும். நார்ச்சத்து அதிகம் கிடைப்பதால், மலச்சிக்கல் உள்ள குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. இதனுடன் எள் சேர்த்தால் இன்னும் சுவையாக இருக்கும். இதை, மாலை நேரத்தில் சிற்றுண்டியாகக் கொடுக்கலாம்.

ஃப்ரூட்ஸ் தோசை!

தேவையானவை: ஆப்பிள் - அரை பழம், மாதுளை - கால் பழம், மாம்பழம் - அரை பழம், கிஸ்மிஸ் - சிறிது, பேரிச்சை - 5, வாழைப் பழம் - ஒன்று, பலாச் சுளை - 2, தேன் - 5 ஸ்பூன், ஏலக்காய் - 2, தோசை மாவு - ஒரு கப்.

செய்முறை: தோசை மாவில் அனைத்துப் பழங்களையும் பொடியாக நறுக்கி, மாவுடன் கலந்துகொள்ளவும். அதனுடன் தேன் கலக்கவும். ஏலக்காயைப் பொடிசெய்து மாவுடன் நன்றாகக் கலக்கவும். இந்த மாவில் தோசை சுட்டு சாப்பிட சுட்டிகளுக்கு மிகவும் பிடிக்கும்.

படங்கள்: சொ.பாலசுப்ரமணியன்