Published:Updated:

ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!

ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!

ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!

ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!

Published:Updated:

கோடைத் தீபாவளியாக இந்த ஆண்டும் பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது ஐபிஎல் அதில், சாதனை படைத்து வரும் சில பட்டாசு வீரர்கள் இவர்கள்...

ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!

ரோஹித் ஷர்மா: மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன். 2008 முதல் 2010 வரை டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடினார். 2009-ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக விளையாடும்போது, கடைசி ஓவரில் 21 ரன்கள்   தேவைப்பட்டன. 26 ரன்கள் அடித்து, அணியின் வெற்றி நாயகனாக மாறினார். 119 போட்டிகளில் 3,123 ரன்களைக் குவித்து உள்ளார். 2014-ல் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆடி, 16 பந்துகளில் 50 ரன்களைக் குவித்தார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!

கிறிஸ் கெய்ல்: பெங்களூர் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கெய்ல். டி20 போட்டிகளில் அதிக சதம் அடித்திருக்கும் சூரர். 2011 மற்றும் 2012 சீசனில் அதிக ரன்களைக் குவித்ததற்காக, ஆரஞ்சுத் தொப்பியைச் சூடிய மன்னர். தனி நபர் அதிகபட்சமாக, 2013-ம் ஆண்டு, புனேவுக்கு எதிராக 175 ரன்கள் குவித்த ரன் வேங்கை. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் மற்றொரு அதிரடி மன்னரான பொல்லார்டு,  கெய்லின் நண்பர். பொல்லார்டு, இந்த ஆண்டு மும்பை அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்திய போட்டியில் இருவருக்கும் முட்டிக்கொண்டது. கடுப்பான பொல்லார்டு, அந்த ஆட்டம் முடியும் வரை, தனது வாயில் பிளாஸ்திரி போட்டுக்கொண்டு, கெய்லை வெறுப்பேற்றினார்.

ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!

தோனி: தொடர்ந்து எட்டு ஐபிஎல் தொடர்களுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் எவர் க்ரீன் ஸ்டார். கடைசி ஓவரில்கூட போட்டியின் திசையை மாற்றும் படைத் தளபதி. இவரின் தலைமையில், இரண்டு முறை கோப்பையை வென்றது சென்னை. மூன்று முறை இறுதிப் போட்டிக்கு வந்தது. ஐபிஎல் போட்டிகளில் இதுவரை, 69 ஆட்டங்களில் வெற்றி கண்டு, அதிக வெற்றிகளைக் குவித்த அணி என்ற பெயரை சென்னைக்கு அளித்தி்ருக்கிறார். பொறுமையே தோனியின் பலமான ஆயுதம்.

ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!
ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!

விராட் கோஹ்லி: பெங்களூர் ராயல் சேலஞ்ச் அணியின் கேப்டன், விராட் கோஹ்லி. ஐபிஎல் போட்டிகளின் இளம் கிரிக்கெட் கேப்டன் இவர். ஐபிஎல் தொடரில் ஒரே அணிக்கு எதிராக, 600 ஓட்டங்களைக் குவித்த முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார். (சென்னை அணிக்கு எதிராக, 18 போட்டிகளில் 646 ரன்கள்). கோஹ்லியின் வேகத்துடன் விவேகமும்  சேர்ந்தால், அணியின் வெற்றி உறுதி.

ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!
ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!

டேவிட் வார்னர்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நம்பிக்கை நட்சத்திரம். இடது கை ஆட்டக்காரர். சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன், டேவிட் வார்னர். ஆரம்பத்தில், டெல்லி அணியில் விளையாடியவர். 2014-ல், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு மாறினார். ஐபிஎல் போட்டிகளில் இவரின் அதிகபட்சம், 109 ரன்கள்.

ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!

சுரேஷ் ரெய்னா: ஐபிஎல் போட்டியின் தொடக்கம் முதல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வரும் புயல் வீரர், சுரேஷ் ரெய்னா. சென்னை அணியின் 120 ஆட்டங்களில் விளையாடிய ஒரே நபர். 3,000 ரன்களைக் கடந்து, ஐபிஎல் போட்டிகளில்  முதல் இடம், அதிக முறை அரை சதம் (23), அதிக கேட்ச் (64) பிடித்த வீரர் போன்ற சாதனைகள் இவர் வசம்.

ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!
ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!

டேல் ஸ்டெயின்: தென் ஆப்பிரிக்காவின் பந்துவீச்சாளரான இவர், சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடிவருகிறார். டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டுகளில், 78 போட்டிகளில் 396 விக்கெட்டுகளை வீழ்த்தியவர். ஐபிஎல் தொடரில் இதுவரை 85 போட்டிகளில் விளையாடி, 90 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஆரம்பத்தில், பெங்களூர் அணிக்காக விளையாடினார். 212 டாட் பந்துகளை வீசியுள்ளார். ஐபிஎல் சீசன் 6-ல் அதிகமான டாட் பந்து வீசிய வீரரும் இவரே.

ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!

டி வில்லியர்ஸ்: பெங்களூர் அணிக்காக விளையாடி வரும் டி வில்லியர்ஸ், தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன்.  மைதானத்தின் எந்தப் பக்கத்திலும் பந்தை விரட்டும் இவருக்கு, ரசிகர்கள் வைத்துள்ள செல்லப் பெயர், மிஸ்டர் 360. ஐபிஎல் தொடரில், இந்தியர்களால் அதிகம் விரும்பப்படும் வெளிநாட்டு வீரர்களில்,  டி வில்லியர்ஸ் முதல் இடத்தில் இருக்கிறார். ஹாக்கி, டென்னிஸ், கோல்ஃப், ரக்பி, பேட்மின்டன் போன்ற போட்டிகளிலும் விளையாடி, மிஸ்டர் 360 என்பதற்குப் பொருத்தமாக வலம் வருபவர்.

ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!
ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!

மலிங்கா: இலங்கை அணியின் புயல் வேகப் பந்து வீச்சாளரான லசித் மலிங்கா, மும்பை அணியின் பல வெற்றிகளுக்கு வித்திட்டவர். ஐபிஎல் தொடரில், அதிக விக்கெட் எடுத்த சாதனையாளர் இவரே. 90 போட்டிகளில்   125 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில், பிரவின் குமாரின் விக்கெட்தான் இவரின் 100-வது விக்கெட்.மலிங்காவின் தலைமுடி போலவே விக்குகள் தயாரிக்கப்பட்டு, விற்பனையில் சாதனை படைத்துவருகிறது.

ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!
ஐபிஎல் அதிரடி நாயகர்கள்!

பிரெண்டன் மெக்கல்லம்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடும் நியூஸிலாந்து வீரர், மெக்கல்லம். ஐபிஎல் வரலாற்றில், முதல் சதம் அடித்த சாதனையாளர் இவரே. ஐபிஎல் முதல் சீசனின் முதல் போட்டி, பெங்களூர் அணிக்கும் கொல்கத்தா அணிக்கும் நடைபெற்றது. அந்தப் போட்டியில், ஆட்டம் இழக்காமல் 158 ரன்கள் குவித்து, ஐபிஎல் என்றால், ‘வேகம்’ என்று பிள்ளையார் சுழி போட்டவர், மெக்கல்லம். 

பி.எஸ்.முத்து

ஜெயசூர்யா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism