65 வயது குட்டிப் பையனும் அவனுடைய க்யூட் நாயும், சினிமா திரையில் அட்டகாசம் செய்யவர்றாங்க என்பதுதான், உலகச் சுட்டிகளிடம் இப்போதைய ஹாட் டாக். அந்தப் படம், ‘தி பீனட்ஸ் மூவி’ (The Peanuts Movie).
அமெரிக்காவின் பிரபல கேலிச்சித்திர ஓவியர், சார்லஸ் எம்.ஸ்க்யூல்ஸ் (Charles M.Schulz), ‘தி பீனட்ஸ்’ என்ற பெயரில், ஸ்ட்ரிப் காமிக்ஸ் தொடரை 1950-ம் ஆண்டு அக்டோபர் 2-ம் தேதி அறிமுகம்செய்தார். பீனட்ஸ் என்றால், வேர்க்கடலை என அர்த்தம். சார்லி ப்ரௌன் (Charlie Brown) என்கிற சிறுவன், அவனது செல்ல நாய் ஸ்னூபி (Snoopy) மற்றும் நண்பர்கள் செய்யும் அன்லிமிடெட் அட்டகாசம்தான் படம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
75 நாடுகள், சுமார் 2,600 செய்தித்தாள்கள், 17,897 அத்தியாயங்களாக வந்த இந்த பீனட்ஸ் கேங், 2000-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி விடைபெற்றார்கள். ஆயினும், தொகுப்பு புத்தகங்களாக, மறுபதிப்புகளாக இன்றும் வலம்வருகிறார்கள். அன்று, கார்ட்டூன் வடிவில் நம் தாத்தா, பாட்டிகளைச் சிரிக்கவைத்த சார்லஸ் ப்ரௌன் மற்றும் ஸ்னூபி கேங், இப்போது சினிமாவாகவருகிறார்கள்.
ப்ளூ ஸ்கை ஸ்டுடியோ மற்றும் டுவென்டியத் செஞ்சுரி ஃபாக்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, ஐஸ் ஏஜ்: கான்டினென்டல் ட்ரிஃப்ட் (Ice Age: Continental Drift) படத்தை இயக்கிய, ஸ்டீவ் மார்ட்டினோ (Steve Martino) இயக்குகிறார். 100 மில்லியன் செலவில், பிரமாண்டமாகத் தயாரிக்கப்படும் இந்தப் படத்தைப் பற்றி சொல்லும் ஸ்டீவ் மார்ட்டினோ, ‘சார்லி ப்ரௌன் என்கிற சிறுவன் முன்னெடுக்கும் காரியங்கள் தோல்வியில் முடிவடைகின்றன. தான் பெற்ற அனுபவங்களில் இருந்து நேர்மறை எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுத்து ஜெயிப்பதே கதை. பெரிதாகக் கனவு (Dream Big) காண வேண்டும், இலக்குகள் பெரிதாக இருக்க வேண்டும் என்பதை நகைச்சுவை கலந்து சொல்கிறோம். இந்தப் படத்தைப் பார்க்கும் குழந்தைகள், தங்கள் மனதில் நற்சிந்தனைகளையும் விடாமுயற்சியையும் வளர்த்துக்கொள்வது நிச்சயம்’ என்கிறார்.
பீனட்ஸ் குழுவின் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறார்கள், உலகச் சுட்டிகள்!
யுவா