Published:Updated:

கார்ட்டூன் வி.ஐ.பி ! - ஹூ-மேன்

கார்ட்டூன் வி.ஐ.பி ! - ஹூ-மேன்

கார்ட்டூன் வி.ஐ.பி ! - ஹூ-மேன்

கார்ட்டூன் வி.ஐ.பி ! - ஹூ-மேன்

Published:Updated:

இரா.நடராசன்

 அது கரடுமுரடான பாதை. சுற்றிலும் பாலைவன மலைகள். ஆங்காங்கே எலும்புக் குவியல்கள். அங்கேதான் கிரே-ஸ்கல் மாளிகையின் பிரதான வாயில் இருக்கிறது. அதில் இருந்தவாறு கொடிய வில்லன் ஸ்கெலட்டன், உலகை அழிக்க முயல்கிறான். ஆனால், முக்கியமான சாசரஸ்ஸின் புதையல் மண்டபத்தைத் திறக்க அவனால் முடியாது. அதன் சாவி அவனிடம் இல்லை. அங்கே  ஒரு மலையின் முரட்டு நிழலில் ஹீ-மேன் உடன் நம் சுட்டியின் சந்திப்பு நடந்தது.

கார்ட்டூன் வி.ஐ.பி ! - ஹூ-மேன்
##~##

ஹீ-மேன்: ஏய் சுட்டி இந்த ஆபத்தான இடத்துக்கு ஏன் வந்தாய்?

சுட்டி: ஹலோ ஹீ-மேன். என் பெயர் இ.அரவிந்தன். நான் காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படிக்கிறேன். உங்களை சுட்டிகள் சார்பாக சந்திக்க வந்திருக்கிறேன். இளவரசன் ஆடம் ஆக இருக்கும் நீங்கள் தானே ஹீ-மேனாக மாறுகிறீர்கள்?

ஹீ-மேன்: ஆம்! அது டீலாவுக்குத் தெரியாது. அவளிடம் நீ சொல்லாதே!

அரவிந்தன்: உங்களுக்கு அந்த மந்திர வாள் எப்படி கிடைத்தது?

ஹீ-மேன்: அது பெரிய கதை. இடர்னியன் எனும் இன மக்களுக்காக எமது மூதாதையரான சாசரஸ் ஒரு தேசத்தை அமைத்தார். அதன் மன்னராக இருந்து இந்த கிரே-ஸ்கல் மாளிகையைத் தலைமையகமாகக் கொண்டு என் தாத்தா மிரோ ஆட்சி செய்தார். பிறகு, என் தந்தை ரேண்டாரின்

கார்ட்டூன் வி.ஐ.பி ! - ஹூ-மேன்

கைக்கு ஆட்சி வந்தது. அழிவுக்கான யுத்தம் அநீதிக்காரன் ஸ்கெலட்டன் எனும் எலும்பனால் தொடங்கியபோது எங்கள் மூதாதையரான சாசரஸ், கிரே-ஸ்கல் மாளிகையைப் பாதுகாக்க என்னை சக்தி மிக்கவனாய் உருவாக்கினார்.

அரவிந்தன்: கேட்கவே மெய் சிலிர்க்கிறது ஹீ-மேன். அவர்தான் உங்களுக்கு இந்த வாளைக் கொடுத்தாரா? ஆகாயத்தைப் பார்த்து வாளை உயர்த்தி, 'பை த பவர் ஆஃப் கிரே-ஸ்கல்’ என்று உத்தரவிட்டு ஹீ-மேனாக மாறுவது அற்புதமாய் இருக்கும்.

ஹீ-மேன்: இது வாள் மட்டும் அல்ல... பல அபார சக்திகளும், பெருமை வாய்ந்த புதையல்களும் மண்டிக் கிடக்கும் எங்கள் கிரே-ஸ்கல் மாளிகையைத் திறக்கும் சாவியின் ஒரு பாதி!

அரவிந்தன்: உங்கள் மூதாதையரான சாசரஸ்ஸோடு நீங்கள் அடிக்கடி தவநிலையில் உரையாடுவீர்கள் அல்லவா?

ஹீ-மேன்: அது தவநிலை என்று சொல்ல முடியாது. மனம், அறிவு இவற்றை ஒன்றிணைத்து, நேரில் சந்திக்காமல் சிந்தனை மூலமே சாசரஸோடு... டெலிபதி முறையில் உரையாடு வேன். என் தாய் எனக்குச் சொல்லிக் கொடுத்தவை.

அரவிந்தன்: தெரியும். மகாராணி மார்லினாதானே உங்கள் தாய். உங்களோடு இரட்டைக் குழந்தைகளில் ஒன்றாக ஷீ-ராவும் பிறந்தார் அல்லவா?

ஹீ-மேன்: ஆம்! பெண்களில் அதிக பலசாலி ஷீ-ரா. அவளுக்கு, தேவையான சந்தர்ப்பத்தில் உதவுவேன்.

அரவிந்தன்: ஒரு சந்தேகம். உங்கள் வாளை உயர்த்தி மந்திர சக்திகளை நீங்கள் பெறும்போது, இன்னொரு வாளும் வந்து இணைவது போலுள்ளதே... அது என்ன?

ஹீ-மேன்: நல்ல கேள்வி.  நீ கவனித்திருப்பாய் என்று நினைத்தேன். வில்லன் ஸ்கெலட்டன் தனது ஆவி சகாக்களோடு எப்போதும் என்னை அழித்து மாளிகையை கைப்பற்றவே முயலுவான். மாளிகையை அவனால் திறக்க முடியாது. அதன் சாவியின் ஒரு பாதி என் வாள். மறுபாதி வாளாக அவனிடம் உள்ளது.

கார்ட்டூன் வி.ஐ.பி ! - ஹூ-மேன்

அரவிந்தன்: உண்மையில் அவன் யார்?

ஹீ-மேன்: அவன் வேறு யாருமல்ல... என் தந்தை மன்னர் ரேண்டாரின் மூத்த சகோதரன் கெல்டார்தான். நீலத்தோலும், கரும் போர்வையும், கபால முகமுமாய்... அழிவுகளின் மொத்த உருவமாய் தேசத்தைக் காட்டிக் கொடுத்தவன்.

அரவிந்தன்: உங்களைப் படைத்தது..?

ஹீ-மேன்: மற்ற கார்ட்டூன்களைவிட எனக்கு ஒரு சிறப்பு உண்டு. ஏனெனில் நான் முதலில் சுட்டிகளின் விளையாட்டு பொம்மையாகத்தான் உருவாக்கப்பட்டேன். அதற்கு கிடைத்த வரவேற்பினால், அனிமேஷனாகத் தடம் பதித்தேன். என்னை முதலில் பொம்மையாக உருவாக்கியவர்கள் ரோஜர் ஸ்வீட்(Roger Sweet)மற்றும் ராய் பாக்னர்(Ray Wagner) கார்ட்டூனில் கொண்டுவந்தவர் ஜான் இர்வின் (John Erwin).

அரவிந்தன்: உங்கள் முதல் திரைப்படம்?

கார்ட்டூன் வி.ஐ.பி ! - ஹூ-மேன்

ஹீ-மேன்: 1987-ல் வந்த மாஸ்டர்ஸ் ஆஃப் யுனிவர்ஸ். ஹீ-மேனாக டோல்ப் லன்ட்க்ரன்  நடித்தார். படம் வசூலை அள்ளிக் குவித்தது.

அரவிந்தன்: எங்களுக்குப் பிடித்தது  உங்களோடு உள்ள பச்சைப் புலிக்குட்டி.

ஹீ-மேன்: ஹா... ஹா! அது கிரிஞ்ஜர். நான் ஹீ-மேன் சக்திகளைப் பெற்றால், அதுவும் சக்திகளைப் பெற்று, 'பேட்டில் கேட்’ ஆகும்.

அரவிந்தன்: ரொம்ப மகிழ்ச்சி! உங்களைப் பற்றி முழுமையாக அறிந்தேன். என் ஃப்ரண்ட்ஸ் கேட்டால் அசந்து விடுவார்கள்!

ஹீ-மேன்: ஓகே சுட்டி! ஜாக்கிரதையாக ஊர் திரும்பு. ஆபத்து என்றால் நீ  என்னை அழைக்கலாம்!