பிரீமியம் ஸ்டோரி

பொட்டுக்கடலை டேட்ஸ் பால்ஸ்!

சுட்டி கிச்சன்!

திகம் அடுப்பைப் பற்றவைக்கும் வேலை இல்லாமல், உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் சத்தான மற்றும் சுவையான ரெசிப்பிகளை நீங்களே செய்யலாம். உங்கள் நண்பர்களுக்கும் பெற்றோருக்கும் கொடுத்து அசத்தலாம்!

தேவையானவை:

பொட்டுக்கடலை - ஒரு கப், வறுத்த நிலக்கடலை - அரை கப், பொடித்த வெல்லம் - முக்கால் கப், பேரீச்சம்பழம் - 5, உலர்ந்த திராட்சை - ஒரு மேஜைக் கரண்டி, முந்திரி - 5, ஏலக்காய் - 2, நெய் - ஒரு மேஜைக் கரண்டி, தண்ணீர் - தேவைக்கேற்ப.

சுட்டி கிச்சன்!

செய்முறை:

பொட்டுக்கடலை, தோல் நீக்கிய வறுத்த வேர்க்கடலை, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து, அம்மாவின் உதவியோடு, மிக்ஸியில் நன்றாக அரைத்து, எடுத்துக்கொள்ளவும்.

இந்த மாவில் லேசாக தண்ணீர் தெளித்து, பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம், முந்திரி, உலர்ந்த திராட்சைகளைச் சேர்த்து கலக்கவும். இவற்றுடன் பொடித்த வெல்லம், நெய் சேர்த்து நன்கு பிசையவும். அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து, நன்கு பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக்கவும். அவ்வளவுதான், சுவையான பொட்டுக்கடலை டேட்ஸ் பால்ஸ் ரெடி!

குறிப்பு:

«வெல்லத்துக்குப் பதில் தேன் சேர்க்கலாம். தேன் சேர்த்தால், தண்ணீர் சேர்க்க வேண்டும்.

«சர்க்கரைக்குப் பதில் வெல்லம், நாட்டுச்சர்க்கரை, கருப்பட்டி, பனங்கற்கண்டைப் பயன்படுத்தலாம். ஏனெனில், சர்க்கரையைவிட இவை ஆரோக்கியமான இனிப்பு. உடலுக்கு எந்தத் தீங்கும் தராதவை.

«எந்த வகையான இனிப்புப் பண்டம் செய்யும்போதும், கூடுமான வரை சர்க்கரைக்குப் பதில், கருப்பட்டி அல்லது நாட்டுச்சர்க்கரையைப் பயன்படுத்துவது  சிறப்பு.

சுட்டி கிச்சன்!

பயன்கள்:

பொட்டுக்கடலை, வேர்க்கடலையில் உடலுக்குத் தேவையான புரதச்சத்து நிறைந்துள்ளது.

பேரிச்சைபழம், வெல்லத்தில் உடலுக்கு தேவையான இரும்புச் சத்து உள்ளது.

பிரியா பாஸ்கர்

பா.காளிமுத்து்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு