Published:Updated:

உலகம் கொண்டாடிய யோகா

உலகம் கொண்டாடிய யோகா

பிரீமியம் ஸ்டோரி

லக சுற்றுச்சூழல் தினம், புத்தக தினம், சிட்டுக் குருவிகள் தினம் என ஒவ்வோர் ஆண்டும் பல

உலகம் கொண்டாடிய யோகா

தினங்களைக் கொண்டாடுகிறோம். அந்த வகையில், ‘சர்வதேச யோகா தினம்’ இந்த ஆண்டு முதல் கொண்டாடப்படுகிறது.

ஜூன் 21 ஏன்...?

2014 செப்டம்பர் மாதம், ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியப் பிரதமர் மோடி உரையாற்றியபோது, ‘‘இந்தியாவின் பழைமையான கலையான, யோகாவின் முக்கியத்துவம் குறித்து உலகம் அறியும். அதன் சிறப்பை  வலியுறுத்தும் வகையில், சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட வேண்டும். பூமியின் வட அரைக்கோளத்தில் மிக நீண்ட பகல் நேரத்தைக்கொண்ட ஜூன் 21-ம் தேதியை, ‘சர்வதேச யோகா தினமாக’ அறிவிக்க வேண்டும்’’ என்று பேசினார்.

ஒரு சர்வதேச தினம் கொண்டாடப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை அறிவிக்க, சில நடைமுறைகள் உள்ளன. ஏன் அந்த தினம் கொண்டாடப்பட வேண்டும்? அதற்கான முக்கியத்துவம் என்ன? எந்த தேதியில் கொண்டாடப்பட வேண்டும்? என்பன போன்றவை குறித்து ஒரு தீர்மானத்தை, ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் தாக்கல் செய்ய வேண்டும்.

உலகம் கொண்டாடிய யோகா

ஐக்கிய நாடுகள் சபையி்ன் பொது அவையில் உறுப்பினராக உள்ள நாடுகள், அந்தத் தீர்மானம் குறித்து விவாதிக்கும். ஆதரித்தோ அல்லது எதிர்த்தோ ஓட்டு அளிப்பார்கள். அந்தத் தீர்மானம் அதிக ஓட்டுகள் பெற்று வெற்றி அடைந்தால்,  குறிப்பிட்ட தேதியில் அந்த நிகழ்ச்சியைக் கொண்டாடும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை, ஐக்கிய நாடுகள் சபை வெளியிடும்.

யோகா தினம்!

உலகம் கொண்டாடிய யோகா

ஆண்டுதோறும் ‘ஜூன் 21-ம் தேதி, ‘சர்வதேச யோகா தினம்’ கொண்டாடப்பட வேண்டும்

உலகம் கொண்டாடிய யோகா

என்ற தீர்மானத்தை, கடந்த ஆண்டு ஐக்கிய நாடுகள் பொது அவையில் இந்தியா தாக்கல் செய்தபோது. அமெரிக்கா, சீனா, கனடா உட்பட 175 நாடுகள் இந்தத் தீர்மானத்தை ஆதரித்தன. ஒரு தீர்மானத்துக்கு இவ்வளவு ஆதரவான ஓட்டுகள் ஐநா சபையில் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை. தீர்மானம் வெற்றி பெற்றதை அடுத்து, சர்வதேச யோகா தினம், ஜூன் 21-ல் கொண்டாடும் என அன்றைய தினமே அறிவிப்பு வெளியிடப்பட்டது.

2015 ஜூன் 21, முதல் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. புது டெல்லியில், இந்தியப்

உலகம் கொண்டாடிய யோகா

பிரதமர் உட்பட 35,985 பேர் யோகா செய்தனர். இந்த நிகழ்ச்சியில், 84 நாடுகளில் இருந்து வந்து கலந்துகொண்டனர். உலகம் முழுவதும் இந்த சர்வதேச யோகா தினம் கொண்டாடப் பட்டது.

கின்னஸ் சாதனை!

புதுடெல்லியில் நடந்த முதல் சர்வதேச யோகா தினத்தில், இரண்டு கின்னஸ் சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. ஒரே நேரத்தில் 35,985 பேர் கலந்துகொண்ட யோகா நிகழ்ச்சி என்பது ஒரு சாதனை. ஒரே நிகழ்ச்சியில், 84 நாடுகளைச் சேர்ந்தவர்கள் நபர்களும் கலந்துகொண்டது இன்னொரு கின்னஸ் சாதனை.

உலகம் கொண்டாடிய யோகா

கனடா, அமெரிக்கா, ஐரோப்பாவில் சில நாடுகள் மற்றும் ஜப்பான், சீனா,

உலகம் கொண்டாடிய யோகா

ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் யோகா குறித்த விழிப்புஉணர்வு அதிகம். அவர்களும் இந்த நாளை சிறப்பாகக் கொண்டா டினார்கள். யோகா குறித்த பரிச்சயம் இல்லாத நாடுகளிலும் யோகா குறித்த அறிமுகம் இந்தத் தினத்தின் மூலம் ஏற்பட்டுள்ளது.

அந்த நாளில்...

முதல் சர்வதேச யோகா தினத்தில், இந்தியா மற்றும் உலக அளவில் நடந்த சில ஹைலைட் துளிகள்...  

• இந்திய ராணுவ வீரர்கள் பலர், தங்களுடைய முகாம்கள் அமைந்துள்ள இடங்களில் யோகா

உலகம் கொண்டாடிய யோகா

செய்தனர். உலகின் மிக உயரமான போர்க்களமாகக் கருதப்படும் சியாச்சின் மற்றும் கார்கில் போன்ற பனி படர்ந்த சிகரங்களில், இந்திய ராணுவ வீரர்கள் யோகாவில் ஈடுபட்டனர். இந்தியக் கப்பற்படை வீரர்களும், தென் சீனக் கடல் வரையுள்ள முகாம்களிலும் யோகா செய்தனர்.

• சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சீன மாணவர்கள் யோகா செய்தனர். பெய்ஜிங்கில் மட்டும் 16 இடங்களில், யோகா நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

• இங்கிலாந்து, தென் கொரியா, மலேசியா மற்றும் தாய்லாந்தில் சர்வதேச யோகா  தினம்

உலகம் கொண்டாடிய யோகா

கொண்டாடப்பட்டது. பிரான்ஸ் நாட்டில், ஈபிள் கோபுரத்துக்குக் கீழே, நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வட்ட வடிவில் அமர்ந்து யோகா செய்தது கண்கொள்ளாக் காட்சி.

• ஜோத்பூரில் உள்ள ஒரு நீச்சல் குளத்தில், சிறுவர்கள் நீர் யோகாவில் ஈடுபட்டனர். காஷ்மீரின் ஸ்ரீநகரில், NCC மாணவர்களும் CRPF வீரர்களும் யோகா செய்தனர்.

• நீண்ட தூரம் ஓடும் மாரத்தான் போட்டிகளைப் போல, சென்னை பச்சையப்பா கல்லூரியில்

உலகம் கொண்டாடிய யோகா

யோகாத்தான் நிகழ்ச்சி நடைபெற்றது, 6,000 நபர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

• சென்னை, புழல் மத்திய சிறையில் 450 கைதிகளும் காவலர்களும் ஒன்றுகூடி யோகா செய்தனர்.

சுப.தமிழினியன்

க.சதீஷ்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு