பிரீமியம் ஸ்டோரி
சுட்டி கிச்சன்!

லோ நண்பர்களே... குளிர்பானங்கள் உடம்புக்குக் கெடுதல் உண்டாக்குபவை என அறிந்திருப்பீர்கள். பழங்களில் சாறு எடுத்துப் பருகலாம் என்றால், அதில் சேர்க்கும் சர்க்கரையால் உடம்பில் அதிக இனிப்பு சேர்கிறது. பழங்களின் விலையும் அதிகம். அப்புறம்... ஜில்லுனு குடிக்க என்னதான் செய்ய? உடலுக்கு எந்தத் தீங்கும் செய்யாத, இயற்கை அளித்த அற்புதக் குளிர்பானம் இளநீர். அந்த இளநீரில் நீங்களே பானம் தயாரித்து, நண்பர்களுக்குக் கொடுத்து அசத்தலாம்.

இளநீர் ஜூஸ்!

தேவையானவை: இளம் வழுக்கை உள்ள இளநீர்த் தண்ணி - 1 கப், இளநீரின் வழுக்கை - ஒரு கப், நாட்டுச் சர்க்கரை - அரை கப், காய்ச்சி ஆறிய பால் - அரை கப்.

சுட்டி கிச்சன்!

செய்முறை: வழுக்கைத் தேங்காய் மற்றும் நாட்டுச் சர்க்கரையைச் சேர்த்து, மிக்ஸியில்  அரைத்துக்கொள்ளவும் அதை, ஒரு கிண்ணத்தில் எடுத்துக்கொண்டு,  பால் மற்றும் இளநீரைச் சேர்த்துக் கலக்கவும். அவ்வளவுதான்... இளநீர் ஜூஸ் தயார். பருகிப் பாருங்கள், மிகவும் சுவையாக இருக்கும். தேவையெனில், சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில்  வைத்து, கூலாகக் குடிக்கவும்.

சுட்டி கிச்சன்!

குறிப்பு: உடல் சூட்டைக் குறைக்கவும், சிறுநீரகம் சீராகச் செயல்படவும் இளநீர் உதவுகிறது.

நாட்டுச் சர்க்கரைக்குப் பதில், பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்க்கலாம். கூடுமான வரை சர்க்கரையைத் தவிர்ப்பதே ஆரோக்கியத்துக்கு நல்லது.

பிரியா பாஸ்கர்

ரமேஷ் கந்தசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு