Published:Updated:

சுதந்திரத் துளிகள்

சுதந்திரத் துளிகள்

சுதந்திரத் துளிகள்

‘சுதந்திரம் எனது பிறப்புரிமை; அதை நான் அடைந்தே தீருவேன்’ என்ற வீர முழக்கத்தை எழுப்பியவர், லோகமான்ய பால கங்காதர திலகர். ‘சுதேசியம்’ என்ற வார்த்தையை முதன்முதலில் தீவிரப்படுத்தியவரும் இவர்தான்.

• ‘வந்தே மாதரம்’ என்ற சுதந்திர முழக்கப் பாடலை எழுதியவர், பக்கிம் சந்திர சட்டோபாத்தியாயா (Bankim Chandra Chattopadhyay). 1882-ம் ஆண்டு வெளியான, இவரது ‘ஆனந்த மடம்’ என்ற வங்காள மொழி நாவலில் இந்தப் பாடல் இடம்பெற்றிருந்தது.

• இந்திய தேசிய கீதமான ‘ஜன கண மன’ பாடலை இயற்றியவர், ரவீந்திரநாத் தாகூர். 1911 டிசம்பர் 27-ம் தேதி, கொல்கத்தா நகரில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில், முதன்முறையாக இந்தப் பாடல் பாடப்பட்டது.

• ‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே; ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று’ என்றப் பாடலை, இந்திய சுதந்திரத்துக்கு முன்பே, எழுதியவர் மகாகவி பாரதியார்.

• காந்தியின் அகிம்சைக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு,

‘கத்தி யின்றி ரத்த மின்றி

யுத்த மொன்று வருகுது’

என்ற சுதந்திரப் பாடலை எழுதியவர், நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பிள்ளை.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு