சூப்பர் ஹீரோக்களை மையப்படுத்தி விளையாடும் ‘லேட்டஸ்ட் ஹிட் ஹாட் கம்ப்யூட்டர் கேம்ஸ்’ இவை.

Save Stark Tower

அவெஞ்சர்ஸ் சூப்பர் ஹீரோக்களில் ஒருவரான, அயர்ன் மேன் (டோனி ஸ்டார்க்) இருப்பிடமான ஸ்டார்க் டவரை, எதிரிகளின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற வேண்டும். சைலாப்ஸ், தோர், ஸ்பைடர் மேன், அயர்ன் மேன் போன்ற சூப்பர் ஹீரோக்களை ஸ்டார்க் டவருக்குச் செல்லும் வழியில், கட்டடங்களின் மேல் நிறுத்திவைத்து, ஸ்டார்க் டவரை எதிரிகள் நெருங்குவதற்குள் அழித்துவிட வேண்டும். எதிரிகள், ஸ்டார்க் டவரைத் தொட்டுவிட்டால் போச்சு. ஸோ, வேகம்... வேகம்!

Hulk

அவெஞ்சர்களின் இன்னொரு சூப்பர் ஹீரோ, பச்சை நிறத்தில் பெரிய உருவமாக மாறும் ஹல்க்கின் சிறப்பே, உயரமாகத் தாவித்தாவிக் கடப்பதும், எதையும் சுக்குநூறாக உடைத்து எறிவதும்தான். அதே மாதிரி, இந்த விளையாட்டிலும் ஹல்க்கின் ஆற்றல் உச்சம் அடையும் வரை அவரைத் தூண்டிவிட்டு, உயரமாக எம்பிக் குதிக்கச் செய்து, இலக்குகளைத் தாக்கி அழிக்க வேண்டும். ஆர் யூ ரெடி?

Spider Man

ஸ்பைடர் மேனில் இரண்டு கேம்ஸ் இருக்கின்றன. வலை பின்னுவது, எதிரிகளை நோக்கி வலையை வீசித் திக்குமுக்காடச் செய்வது, என ஸ்பைடர் மேன் ஸ்டைல்தான் இங்கே ஆயுதம். ‘THE AMAZING SPIDERMAN’ என்ற விளையாட்டில், கீழே விழுந்துவிடாமல் வலைகளைப் பின்னிக்கொண்டே செல்ல வேண்டும். ‘SPIDERMAN- SAVE THE TOWN’ என்ற விளையாட்டில், எதிரில் வரும் பச்சை நிற கோப்ளின்களைக் குறிபார்த்து, தலையை நோக்கி வலையை வீசி அழித்து, நகரத்தைக் காப்பாற்ற வேண்டும்.

X-MEN WOLVERINE

X-Men குழுவின் சூப்பர் ஹீரோவான வோல்வரினின் முக்கியப் பலங்களில் ஒன்று, உலகின் மிகவும் உறுதியான உலோகத்தால் உருவாக்கப்பட்ட நகங்களும், விரைவாகக் காயங்கள் ஆறிவிடும் சக்தியும்தான். வோல்வரினுடைய சிறப்புச் சக்திகளைப் பயன்படுத்தி, X-Men குழுவில் உள்ளோரைக் காப்பாற்றுவதுதான் இந்த த்ரில் விளையாட்டு.

- சுப.தமிழினியன்