பிரீமியம் ஸ்டோரி

ண் உண்டியலில் காசு சேமிச்சது தாத்தா காலம். எதிலும் அட்ராக்‌ஷன் எதிர்பாக்கும் இந்தக் காலத்துச் சுட்டிகளுக்கு, சேமிக்கும் பழக்கத்தை உண்டாக்கும் உண்டியலில் அட்ராக்‌ஷன் இல்லாட்டி எப்படி? இதோ கலக்கலான சில உண்டியல்கள். இதில், உங்களுக்குப் பிடிச்சதை வாங்கி, காசை சேமியுங்க. ‘என் காசு... என் உரிமை’ என கெத்து காட்டுங்க.

உண்டியல்
உண்டியல்
உண்டியல்
உண்டியல்

• அசத்தலா ஸ்கேட்டிங் செய்யும் வரிக்குதிரை உண்டியல், பீங்கானால் செய்யப்பட்டது. விலை: ரூ.699.

• பசுவின் தலைபோல முன்புறம், நான்கு சக்கரங்களோடு, ஷூ வடிவில் சுண்டி இழுக்கும் உண்டியல். விலை: ரூ.599.

• கலக்கலா கார் ஓட்டும் பீங்கானால் செய்யப்பட்ட பசு உண்டியல். விலை: ரூ.599.

• கை, கால்களுக்கு ஸ்பிரிங்வெச்சு, பாட்டு கேட்கும் நாய் உண்டியல், பார்த்ததும் நம் கவனத்தை ஈர்க்கும். பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது. விலை: ரூ.499.

• ‘ஐ திங்’ என வளைந்து நெளிந்து யோசிக்கும் பீங்கான் பூனை உண்டியல்.  விலை: ரூ.399.

• அகில உலக ஃபேமஸ் ஸ்டார்ஸ் பன்றிக்குட்டி உண்டியல்கள். தரத்துக்கு ஏற்ப பல விலைகளில் கிடைக்கின்றன.

உண்டியல்

- ஐ.மா.கிருத்திகா

படங்கள்: உ.கிரண்குமார், ம.நவீன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு