பிரீமியம் ஸ்டோரி
லஞ்ச் பாக்ஸ்!

‘காக்கா முட்டை’ படம் பார்த்தீங்களா? அதில், பாட்டி செய்த பீட்சா, காமெடி காட்சியா இருந்தாலும், நம்ம வாழ்க்கை முறைக்கு ஏற்ற ஆரோக்கியமான உணவையே, வித்தியாசமான வடிவிலும், புதிய சுவையிலும் தரலாம்னு சொல்லி இருக்காங்க. இதோ, உங்களுக்காக அழகான வடிவில், ஆரோக்கியமான இரண்டு ரெசிப்பிகள். அம்மாகிட்டே செய்து தரச் சொல்லுங்க.

காய்கறித் தோசை!

லஞ்ச் பாக்ஸ்!

தேவையானவை: நறுக்கிய வெங்காயம், தக்காளி, குடமிளகாய் - தலா ஒன்று, துருவிய கேரட், முட்டைகோஸ், பீட்ரூட் - சிறிதளவு, தோசை மாவு,  எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை: வெங்காயம், தக்காளி, குடமிளகாயை லேசாக எண்ணெய் ஊற்றி வதக்கவும். தோசை மாவைக் கெட்டியாக வார்க்கவும். அதன் மீது, வதக்கி வைத்திருக்கும் பொருள்களை மேலாகவைத்து, தோசைக்கரண்டியால் மாவுக்குள் அழுத்திவிடவும்.  மிதமான சூட்டில் நன்றாக வேகவைத்து எடுத்தால், ஆரோக்கியமான, அழகான காய்கறித் தோசை ரெடி!

அவல் புட்டு

லஞ்ச் பாக்ஸ்!

தேவையானவை: சிவப்பு அவல் - 200 கிராம், தேங்காய்த் துருவல் - ஒரு கப், ஏலக்காய்த் தூள் - சிறிதளவு, சர்க்கரை - 100 கிராம், நெய் - 4 டீஸ்பூன், வறுத்த முந்திரிப்பருப்பு - 10.

செய்முறை: அவலை சிறிது நெய்விட்டு லேசாக வறுத்து, ரவையாகப் பொடிக்கவும். இதில், சிறிது தண்ணீர் தெளித்து, புட்டுக் குழாயில் நிரப்பி, வேகவிடவும். நன்றாக வெந்தவுடன் உதிர்த்து, தேங்காய்த் துருவல், சர்க்கரை, நெய், ஏலக்காய்த்தூள், வறுத்த முந்திரி சேர்த்து, நன்றாகக் கலக்கவும். டேஸ்ட்டி அண்ட் ஹெல்த்தி அவல் புட்டு ரெடி!

- ப்ரீத்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு