பிரீமியம் ஸ்டோரி

‘‘ஸ்கூல்ல மிஸ் கொடுக்கிற ஹோம்வொர்க்கை முடிச்சு, வெரிகுட் வாங்கும்போது தருனித்தா ஹேப்பி அண்ணாச்சி. வீட்டுல அம்மாவுக்கு ஹெல்ப் பண்ணி, ஹக்ஸை வாங்கினா, தருனித்தா டபுள் ஹேப்பி அண்ணாச்சி” எனக் கையில் மாப், பக்கெட்டில் தண்ணீரோடு சிரிக்கிறார் தருனித்தா.

வீட்டைச் சுத்தம் செய்வது, காய்கறிகளை நறுக்குவது என ஞாயிற்றுக்கிழமைகளில் தருனித்தா செம பிஸி.

ஹோம்வொர்க்!

அம்மாவோடு சேர்ந்து சப்பாத்தி மாவு உருட்டிக்கொண்டிருந்த விஷ்ணுகுமார், “எனக்கு கிச்சன் வேலையில் உதவி செய்ய ரொம்ப ரொம்பப் பிடிக்கும். என் ஃப்ரெண்ட்ஸ், ‘ஏன்டா பொம்பளைங்க வேலையா செய்றேனு கிண்டல் பண்ணுவாங்க. மாவு பிசையறப்பவும், அரிசியை தண்ணீரில் அலசுறப்பவும் கையில் ஜில்லுனு ஏற்படும் பரவசம் அவங்களுக்குத் தெரியலை” என்றான்.

சமையல் அறையில் இருந்து சுட்ட சப்பாத்தியோடு வந்த விஷ்ணுகுமாரின் அக்கா பிரியங்கா, ‘‘பாடம், ரிவிஷன், டெஸ்ட்னு இருக்கிற மூளைக்கு, இந்த ஹோம்வொர்க் ரிலாக்ஸா இருக்கு. இதைச் செய்துட்டு ஸ்கூல் ஹோம்வொர்க் செய்றப்ப, இன்னும் சுறுசுறுப்பா இருக்கும்” என்கிறார்.

அக்கறையோடு துணிகளை மடித்துக்கொண்டிருந்த யோகமித்ரா, ‘‘வாராவாரம் அப்பாவின் பைக்கை நான்தான் துடைப்பேன். அப்படி ஆரம்பிச்சு, கிக்கர் போட்டு பைக்கை ஸ்டார்ட் பண்ணக் கத்துக்கிட்டேன். இதைப் பார்த்த அப்பா, ‘இன்னும் கொஞ்சம் பெரியவனானதும் உனக்கு பைக் ஓட்ட கத்துத்தர்றேன்’னு சொல்லியிருக்கார். பைக் ஓட்டிட்டு ரோட்டுல போறதை நினைச்சாலே வாவ்...’’ எனக் கண்களை விரிக்கிறார்.

உங்க ஹோம்வொர்க் எப்படி?

- பி.நிர்மல்

படங்கள்: மோ.ரஞ்சித் நேசகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு