FA பக்கங்கள்
Published:Updated:

தேங்க்ஸ்

தேங்க்ஸ்

‘தேங்க்ஸ்...’ இந்த வார்த்தையை நாம் சொல்ல வேண்டிய பல நேரங்களில் சொல்லாமல் விட்டுவிடுகிறோம். நமக்கு உதவி செய்பவர்கள் நன்றியை எதிர்பார்க்கவில்லை என்றாலும், ஒரு தேங்க்ஸ் சொன்னால், அவர்களுக்கு நம்மை ரொம்பப் பிடித்துப்போகும். ‘யாருக்கு நீங்க தேங்க்ஸ் சொல்லணும்?’ எனச் சில சுட்டிகளிடம் கேட்டோம்...  

தேங்க்ஸ்

ன்னைவிட பெரிய டெடி பியருக்கு, ‘‘ஒழுங்காச் சாப்பிடணும் ஜூம்மா’’  எனச் சோறு ஊட்டிக்கொண்டிருந்த சுபஸ்ரீ:

“என்னோட மாமாவும் நானும் ஒரு தடவை ஷாப்பிங் போயிருந்தோம். அங்கே, பெரிய ஷோ கேஸ்லதான் ஜும்மாவைப் பார்த்தேன். பார்த்ததுமே வாங்கிடணும்னு நினைச்சேன். ஆனா, மாமாகிட்டே கேட்கத் தயக்கமா இருந்துச்சு. எல்லாப் பொருட்களையும் வாங்கி முடிச்சதும் ஒரு சர்ப்ரைஸ். மாமாவே,  ஜூம்மாவை வாங்கித் தந்தார். அதுக்காக, மாமாவுக்கு தேங்க்ஸ் சொன்னேன்” எனச் சொல்லிவிட்டு, தனது ஜும்மாவோடு விளையாட ஆரம்பித்துவிட்டாள்.

தேங்க்ஸ்

‘‘என் ப்ளாக்கிக்கு நான்தான் பெட்,” என்றபடியே செல்ல நாய்க்குட்டியைத் தூக்கி, செல்லம் கொஞ்சும் ஜோக்கிம் ப்யூலா, 2-ம் வகுப்பு படிக்கிறாள்.

”ப்ளாக்கி எங்க வீட்டுக்கு வந்து த்ரீ மன்த்ஸ் ஆகியிருந்தது. அப்போ, என் ஃப்ர்த்டே. ப்ளாக்கிகூட ஜாலியா கொண்டாடலாம்னு ரொம்ப ஹேப்பியா இருந்தேன். ஆனா, காலையில பார்க்கும்போது ப்ளாக்கியைக் காணோம்” எனச் சோகமாகும் ப்யூலா, அண்ணன் ஹரிபிரசாத்தைப் பார்த்ததும் ஓடிச்சென்று அவர் மீது தொற்றிக்கொண்டாள்.

“அண்ணாதான் தொலைஞ்சுபோன ப்ளாக்கியைக் கண்டுபிடிச்சு வீட்டுக்கு கூட்டிட்டு வந்தாங்க” என அண்ணனின் கழுத்தைக் கட்டிக்கொள்கிறாள். “ஸோ, அண்ணாவுக்குதான் நான் இவ்ளோ பெரிய தேங்க்ஸ் சொல்லணும்” எனக் கைகளை விரித்துப் புன்னகைத்த அவளிடம், ஓடிவந்து விளையாடத் தொடங்கியது ப்ளாக்கி.

தேங்க்ஸ்

“எங்க ஸ்கூல்ல நிறைய ஆக்டிவிட்டீஸ் செஞ்சுட்டு வரச் சொல்லுவாங்க. நானும் ரொம்பக் கஷ்டப்பட்டு செஞ்சு பாப்பேன். ஆனா, எல்லாம் சொதப்பிரும். அப்போ, ஹென்ரிட்டா அக்காதான் எனக்கு ஹெல்ப் பண்ணுவாங்க” என ஃப்ளாஷ்பேக் சொல்லும் பாலா, முதலாம் வகுப்பு மாணவன்.

பக்கத்து வீட்டு க்யூட் பொண்ணு, ஹென்ரிட்டா க்ளேட்ஸ்க்கு சாக்லேட் தந்து, “தேங்க்ஸ் அக்கா” எனச் சிரித்தான் பாலா.

தேங்க்ஸ்

“நானும் என் தங்கச்சி தேவதர்ஷினியும் அடிக்கடி சண்டை போட்டுப்போம். ஒரு நாள், எனக்கு ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சு. நான், ஹாஸ்பிட்டல்ல இருந்தபோ, தேவதர்ஷினி அழுதிட்டே இருந்தாளாம். நான் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தப்ப, ஓடிவந்து கட்டிக்கிட்டா. என் மேல எவ்வளவு பாசம்னு  அன்னிக்குத்தான் தெரிஞ்சது. அன்னிக்கு அவளுக்கு தேங்க்ஸ் சொல்லலை. இப்போ, 100 தேங்க்ஸோட பார்பி டால் கொடுக்கிறேன்” என தங்கைக்கு சென்டிமென்ட் கிஃப்ட் கொடுக்கிறார் ஜெகநாதன்.

தொகுப்பு: ச.ஆனந்தப்பிரியா 

படங்கள்: சூ.நந்தினி, நா.விஜயரகுநாதன்