பிரீமியம் ஸ்டோரி
ஸாரி!

‘ஸாரி...’ சின்ன வார்த்தைதான். ஆனால், நாம் செய்த தவறை உணர்ந்து, நம்மைவிட சிறியவர்களிடம் அதைக் கேட்க, அவ்வளவு சீக்கிரம் வாய் வராது. ‘உங்கள் பிள்ளைகளிடம் என்றாவது ஸாரி கேட்டிருக்கீங்களா?’ எனச் சில பெற்றோர்களிடம் கேட்டோம்.

ஸாரி!

டீனாவின் வீட்டுக்குள், சுவர் முழுக்க கலர் கலர் கிறுக்கல்கள். டீனாவின் அம்மா மெல்ஃபி, ‘‘இப்படித்தான், கையில் கலர் பென்சில் கிடைச்சாப் போதும், சுவர் முழுக்க கிறுக்கிவெச்சுடுவா. சில சமயம் கோவம் வந்து அடிச்சிடுவேன். ஆனா, டீனாவின் டிராயிங் மிஸ், ‘டீனா, நல்லா டிராயிங் வரையறா’ன்னு சொல்லும்போது சந்தோஷமா இருக்கும். அப்போ எல்லாம் சொல்ல நினைச்சு, சொல்லாத வார்த்தையை இப்போ சொல்றேன், ‘அம்மு,  ஸாரிடா’ ” என டீனாவை தூக்கி அணைத்து செல்ல முத்தம் கொடுத்தார்.

ஸாரி!

“இவங்க ரெண்டு பேருக்கும் ஸ்போர்ட்ஸ்ல செம இன்ட்ரஸ்ட். ஸ்கூல்ல வைக்கிற எல்லா ஸ்போர்ட்ஸ் போட்டியிலும் புகுந்து விளையாடிடுவாங்க. விளையாடுற எல்லாத்துலயும் வின் பண்ணிருவாங்க. அதனால, ஸ்கூல் ஸ்போர்ட்ஸ் டே-ல நிச்சயம் பரிசு இருக்கும். ஆனா, ‘ஸ்போர்ட்ஸ் டே’ நடக்கிற அன்னிக்கு, நான் வொர்க் பிஸியில்  மாட்டிப்பேன். நான் வரலைனு கோவிச்சுக்கிட்டு, ரெண்டு பேரும் போட்டுத் தாக்கிருவாங்க” எனச் சிரிக்கிறார் தந்தை கெளரி சங்கர்.

‘‘அப்பாவ மன்னிச்சூ” என ஸாரி கேட்டு, தனது வாரிசுகளான பொம்மேந்தர புவனேஸ்வரையும், ஆதீஸ்வரையும் மடியில் அமர்த்தி, அவர்களுக்குப் பிடித்த ஸ்போர்ட்ஸ் பொருட்களைப் பரிசாக க் கொடுத்து, இன்ப அதிர்ச்சி அளித்தார் கெளரி சங்கர்.

ஸாரி!

‘‘எங்க வீட்டில், என் பொண்ணுக்கும் பையனுக்கும் கடுமையான போட்டி இருந்துக்கிட்டே இருக்கும். இவனும் அடிக்கடி அக்காவிடம் வம்பு பண்ணிக்கிட்டே இருப்பான். ஒரு நாள் அவளை அடிச்சிட்டான். அவனை அடி பின்னிட்டேன். அவன் ரொம்ப நேரம் அழுதுக்கிட்டே இருந்தான். ‘ஏம்மா தம்பிய அடிச்சே?’னு பொண்ணு கேட்க, எனக்கும் அழுகை வந்துடுச்சு. அன்னிக்கு முழுக்க வீட்டில் யாரும் சாப்பிடலை. அந்தச் சமயம்தான் என் பையனிடம் மன்னிப்பு கேட்டேன்” என தனது மகன் சண்முகப்பிரியனை அணைத்துக் கொள்கிறார் அம்மா மேனகா சாந்தி.

- கே.குணசீலன்

- ச.ஆனந்தப்பிரியா

படங்கள்: சூ.நந்தினி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு