‘‘அம்மா, அப்பா எடுத்துத் தர்றதுனு இல்லாம, என் டிரெஸ் எல்லாமே என் சாய்ஸா இருக்கணும். நமக்குப் பிடிச்ச டிரெஸ்ஸை வாங்கணும்ப்பா” என்றாள் மஹன்யா.

“ஆமா. நம்மோடு கடைக்கு வந்தோமா, ஓரமா நின்னு வேடிக்கை பார்த்தோமானு பேரன்ட்ஸ் இருக்கணும்” என்றான் அஷ்ரே.

“ஆஹா... ஸ்பீல்பெர்க்கை மிஞ்சும் கற்பனையா இருக்கே. நடக்கிற விஷயமா இது?” என்ற ராஜேஷ் குரலில் ஏ... ஏ... ஏக்கம்.

இது எங்க ஷாப்பிங்!
இது எங்க ஷாப்பிங்!
இது எங்க ஷாப்பிங்!

இதைக் கேட்டதும், “இந்த சமூக சேவைகூட செய்யாட்டி எப்படி? வாங்க, செஞ்சிருவோம். உங்க பேரன்ட்ஸை கை கட்டி வேடிக்கை பார்க்கவைக்கிறது எங்க பொறுப்பு” எனச் சொன்னோம்.

மூன்று பேரும் தங்கள் பெற்றோருடன் உற்சாகமாகக் கிளம்பினார்கள். சென்னை, தி.நகரில் இருக்கும் நாயுடு ஹால் ஷோரூமுக்குள் பந்தாவாக நுழைந்தார்கள். விறுவிறுப்போடு சுதந்திர ஷாப்பிங் நடந்தது. முடிவு?

“வாவ்... இந்த வின்டேஜ் டி-ஷர்ட் சூப்பர். மேட்சா ஜீன்ஸ், ஒரு சன்கிளாஸ் போட்டுக்கிட்டு நடந்துபோனா...” எனக் கழுத்தை உயர்த்தி, கற்பனைக் குதிரையில் ஏறினான் அஷ்ரே.

‘‘என்னோட செலக்‌ஷன் எப்படி? இதுக்குப் பேர், பிளாஸோ ஓவர்கோட்’’ என்றபடி வந்து நின்றான் ராஜேஷ்.

‘‘நமக்கு எப்பவும் ஒண்ணோடு  நிறுத்திக்கிறது பிடிக்காதுப்பா. அதான், ரெண்டு டிரெஸ் செலெக்ட் பண்ணிட்டேன்” எனச் சொல்லி தலையைச் சிலுப்பினாள் மஹன்யா.

‘‘பில் செட்டில் பண்ற வேலையை பேரன்ட்ஸ் பார்த்துக்கட்டும். வாங்க, நாம போட்டோவுக்கு போஸ் கொடுப்போம்” என்றபடி, போட்டோசெஷனுக்குத் தயாரானார்கள்.

 ரொம்ப விவரம்!

- பா.நரேஷ்,

படங்கள்: க.சர்வின் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு