ம்மா, அப்பா, தம்பி, தங்கச்சி என நிறையப் பேர் இருந்தாலும் ஃப்ரெண்ட்ஸ் எப்பவுமே ஸ்பெஷல்தான். ‘என் நண்பேன்டா! ’ எனச் சொல்லும் அளவுக்கு உங்கள் நட்பு குறித்து ஒரு விஷயம் சொல்லுங்க எனக் கேட்டோம்.

ஷிப்...ஷிப்...ஃப்ரெண்ட்ஷிப்!

‘‘எனக்கு, ஜிம்னாஸ்டிக்னா அவ்ளோ பிடிக்கும். அதைவிட, என் ஃப்ரெண்டு கிரியை ரொம்பப் பிடிக்கும்” என்கிற பூஜாஸ்ரீ, ஆறாம் வகுப்பு படிக்கிறார்.

“நான் ஜிம்னாஸ்டிக் கிளாஸ் போகணும்னு வீட்டுல கேட்டதுக்கு சம்மதிக்கலை. ரொம்ப வருத்தமா இருந்துச்சு. இதைத் தெரிஞ்சுக்கிட்ட கிரி, என் வீட்டுக்கு வந்தான். அம்மா, அப்பாகிட்டே பேசி, சம்மதிக்க வெச்சான். இப்போ, நான் ஜிம்னாஸ்டிக் கிளாஸுக்குப் போறேன்னா, அதுக்குக் காரணமே இந்த நண்பன்தான்” என தோழனின் தோளில் கை போட, ‘‘நட்பில் இதெல்லாம் ஒரு விஷயமா?” எனச் சின்னதாக சிரிக்கிறார் கிரி.   

ஷிப்...ஷிப்...ஃப்ரெண்ட்ஷிப்!

‘‘எனக்கு, ஸ்போர்ட்ஸ் ரொம்ப இஷ்டம். நாள் முழுக்க விட்டாலும்  விளையாடிட்டு இருப்பேன். போன வருஷம் என் பர்த்டே அன்னிக்கி வீட்டுக்கு வந்து ஒரு கிஃப்ட் கொடுத்தான் ஷமீம். திறந்து பார்த்தா, ஸ்போர்ட்ஸ் ஷூ. கொஞ்சம் கொஞ்சமா சேர்த்த காசுல வாங்கினானாம். இந்த மாதிரி எனக்குப் பிடிச்சதைச் செஞ்சு, அடிக்கடி அன்பான  சர்ப்ரைஸ் கொடுப்பான்” என்கிறார் விக்னேஷ்.

அவர் முதுகில் தாவி ஏறிய ஷமீம், “இந்த மாதிரி உப்பு மூட்டை ஏறி    தொல்லை சர்ப்ரைஸும்  கொடுப்பேன்” என்று சிரித்தார்.

ஷிப்...ஷிப்...ஃப்ரெண்ட்ஷிப்!

‘‘எனக்கு சட்சட்டுனு கோபம் வந்துடும். எல்லார்கிட்டேயும் ஃபைட் பண்ணுவேன். இதனால, கிளாஸ்ல யார்கூடவும் பேசாம உட்கார்ந்திருப்பேன். அப்போதான் வித்திகா புதுசா வந்து சேர்ந்தா” என ஃப்ளாஷ்பேக் ஓட்டுகிறார், நான்காம் வகுப்பு விஸ்ருதி.

‘‘எல்லோரும் இவளைக் குறை சொன்னது கஷ்டமா இருந்துச்சு. நேரா இவகிட்டேயே போய், ‘நீ இந்த மாதிரி ஃபைட் பண்ணிட்டே இருந்தா, ஃப்ரெண்ட்ஸ்னு சொல்லிக்க யாருமே இருக்க மாட்டாங்க. உன்னை மாத்திக்க. நாம ஃப்ரெண்ட்ஸா இருப்போம்’னு சொன்னேன். முறைக்கப் போறானு நினைச்சா, விஸ்ருதி சிரிச்சுக்கிட்டே கை கொடுத்தா. அந்த நாளில் இருந்து என்னோடு சேர்ந்து இவளுக்கும் நிறைய ஃப்ரெண்ட்ஸ்” எனத் தோழியை அணைக்கிறார் வித்திகா.

ஷிப்...ஷிப்...ஃப்ரெண்ட்ஷிப்!

‘‘ஒரு தடவை நான் தேர்வில் மார்க்ஸ் ரொம்பக் கம்மியா வாங்கிட்டேன். அப்பா, அம்மா, டீச்சர்ஸ் எல்லார்கிட்டே இருந்தும் பயங்கரத் திட்டு. அன்னைக்கு ஃபுல்லா அழுதுட்டே இருந்தேன். அப்போ, ஆகாஷ் வந்து எனக்கு ஆறுதல் சொல்லி, ‘நீதான் நெக்ஸ்ட் எக்ஸாம்ல ஃபர்ஸ்ட் வருவே’னு சொன்னான். எனக்குப் புரியலைனு சொன்ன பாடங்களைப் பொறுமையா சொல்லிக்கொடுத்தான். அவன் சொன்ன மாதிரியே, நெக்ஸ்ட் எக்ஸாம்ல நான்தான் ஃபர்ஸ்ட்” எனக் கண் சிமிட்டுகிறார், ஏழாம் வகுப்பு தருண்.

- ச.ஆனந்தப்பிரியா

படங்கள்: சூ.நந்தினி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு