Published:Updated:

பட்டையைக் கிளப்பும் டான்ஸ் பார்ட்டி!

ஜாஸ்...பல்லெட்...ஹிப்ஹாப்...

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

‘‘ஸ்கூல் லாஸ்ட் பெல் எப்போடா அடிக்கும்னு காத்திருப்பேன். பெல் அடிச்ச அடுத்த நிமிஷம், வெளியே வர்ற முதல் ஆள் நான்தான். அங்கே ஆரம்பிக்கிற ஓட்டம், இந்த டான்ஸ் கிளாஸ்ல வந்துதான் நிற்கும்” என்றபடி துள்ளிக் குதிக்கிறார் ரித்தீஷ்.

‘‘எனக்கு ஃபர்ஸ்ட் பெல் அடிக்கும்போதே, கால்கள் தாளம்போட ஆரம்பிச்சுடும். இதுதான் பல்லெட் ஸ்டெப். எப்படி இருக்கு அங்கிள்?” என உற்சாகமாக ஒரு ஸ்டெப் போடுகிறார் ஐஸ்வர்யா.

எல்.கே.ஜி படிக்கும் யுவன், ‘‘நான் இந்த கிளாஸ்ல சேர்ந்து ஒரு மாசம்தான் ஆகுது. ரொம்ப ரொம்ப  என்ஜாய் பண்றேன். சே, இத்தனை வருஷமா (?!)  மிஸ் பண்ணிட்டோமேனு தோணுது” என குரலில் செம ஃபீலிங் காட்டுகிறார்.

பட்டையைக் கிளப்பும் டான்ஸ் பார்ட்டி!

திருச்சி, கன்டோன்மென்ட் அருகே உள்ளது,    ‘ட்ரீமர்ஸ் டான்ஸ் ஸ்டுடியோ’. எல்.கே.ஜி-யில் தொடங்கி, எல்லா வயது சுட்டிகளாலும் நிரம்பி இருக்கிறது. யாருடைய கால்களும் தரையில் இல்லை. ஜாஸ், பல்லெட், ஹிப்ஹாப் எனப் பின்னிப் பெடல் எடுத்துக்கொண்டிருந்தார்கள்.

ட்ரீமர்ஸ் டான்ஸ் ஸ்டுடியோ நிறுவனத்தை நடத்திவரும் சதீஸ்வரன், ‘‘சின்ன வயசில் இருந்தே எனக்கு டான்ஸ் ரொம்ப இஷ்டம்.  ஸ்கூல், காலேஜ், கல்ச்சுரல் புரோகிராம்களில் நிறையப் பரிசுகள் வாங்கி இருக்கேன். இரண்டு வருஷமா சினிமாவிலும் டான்ஸ் பண்றேன். குட்டிப் பசங்களுக்காக ஒரு டான்ஸ் ஸ்கூல் ஆரம்பிக்கணும், அதைத் தமிழ்நாட்டின் பெஸ்ட் டான்ஸ் ஸ்கூலா  கொண்டுவரணும்கிறது என்னோட ஆசை” என்கிறார்.

பட்டையைக் கிளப்பும் டான்ஸ் பார்ட்டி!

ஜூம்பா, ஏரோபிக்ஸ், ஜாஸ், ஹிப்ஹாப், மார்டன் ஆர்ட் டான்ஸ் என எல்லா வகை நடனங்களும் இங்கே கற்றுத்தரப்படுகின்றன. இங்கே நடனம் கற்ற சுட்டிகள், தொலைக்காட்சி நடன நிகழ்ச்சிகளில் அசத்திவருகிறார்கள்.

‘‘அடிப்படைப் பயிற்சி மட்டும் இல்லாமல், பசங்களை உற்சாகப்படுத்த வித்தி்யாசமான முயற்சிகளையும் செய்துட்டே இருப்போம். அதில் ஒன்று, ஹிட் பாடல்களுக்கு புது ஸ்டெப் போட்டு, வீடியோவா...” என்று சதீஸ்வரன் சொல்லும்போது, குறுக்கே பாய்கிறார் சித்தார்த்.

‘‘அங்கிள்... அங்கிள்... அதை நான் சொல்றேன்.புதுசா ஒரு சினிமா வந்தா, அதுல வரும் ஹிட் சாங்குக்கு ஏற்ற மாதிரி, வேற மூவ்மென்ட் போட்டு டான்ஸ் ஆடுவோம். அதை, வீடியோவா எடுத்து,   யூ டியூப், ஃபேஸ்புக்கில் அப்லோட் பண்ணுவாங்க. எங்க சீனியர்ஸ் போடுகிற டான்ஸ் எல்லாம் செம ஹிட்” என்று உற்சாகமாகச் சொல்கிறார் சித்தார்த்.

பட்டையைக் கிளப்பும் டான்ஸ் பார்ட்டி!

“டான்ஸ் கத்துக்கிறதாலே உடம்பு, மூளை எப்பவும் ஃப்ரெஷ்ஷா இருக்கு அங்கிள். முன்னாடி எல்லாம் கொஞ்ச நேரம் விளையாடினாலே சோர்ந்துபோய்டுவேன். படிக்கும்போதும் மனசிலேயே பதியாது. ஆனால், டான்ஸ் கிளாஸுக்கு வந்ததுக்கு அப்புறம், நல்லா ஆடவும் கத்துக்கிட்டேன். படிப்பிலும் பெஸ்ட்டா வந்துட்டு இருக்கேன்” என்கிறார் அபிநயா.

‘‘எப்படி ஃபினிஷிங் பஞ்ச் கொடுத்தாங்க பார்த்தீங்களா? அதான் அபிநயா” என்று கலாய்த்த ரித்தீஷ், ஒரு ஹிப் ஹாப் ஸ்டெப் போட்டு, அபிநயாவிடம்  அடி வாங்காமல் எஸ்கேப் ஆனார்.

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: தே.தீட்ஷித் 

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு