பிரீமியம் ஸ்டோரி

ஹாய் சுட்டீஸ், இந்த முறை டிரை ஃபுரூட்ஸ் மற்றும் வெல்லம் கலந்த பர்ஃபியும், கேழ்வரகில் செய்த ஸ்டீம்டு பணியாரமும்  எளிய ரெசிபிக்களாக சமையல்கலை நிபுணர் வசந்தா விஜயராகவன் செய்து  தந்திருக் கிறார். உங்க அம்மாகிட்ட செஞ்சுதரச் சொல்லி டேஸ்ட் பண்ணிப் பாருங்க.  இவற்றைச் சாப்பிடுவதால், உடலுக்குக் கிடைக்கும் பயன்களை டயட்டீஷியன் கிருஷ்ணமூர்த்தி விளக்குகிறார்.

டிரை ஃப்ரூட் வெல்ல பர்ஃபி!

தேவையானவை: முந்திரி, பாதாம், வேர்க்கடலை, உடைத்த கடலை, பொடியாக நறுக்கிய பேரீச்சம்பழம், திராட்சை, செர்ரி- (இவை ஒவ்வொன்றும் 30 கிராம்) - 2 கப், பொடித்த வெல்லம் (100 கிராம்) - அரை கப், ஏலத்தூள் - அரை டீஸ்பூன், நெய்- 3 டீஸ்பூன்.

சிக்கு..புக்கு...குக்கு !
##~##

செய்முறை: கடாயில் வெல்லத்தைப் போட்டு (தண்ணீர் விடவே வேண்டாம்) வெல்லம் கரைந்து 7 அல்லது 8 கொதி வரும்பொழுது ஏலத்தூளுடன் பருப்புகளைச் சேர்த்துக் கிளறவும். சற்று இறுகியவுடன், நெய் தடவப்பட்டு இருக்கும் தாம்பாளத்தில் கொட்டி, நன்றாகச் சமப்படுத்தவும். கொஞ்சம் சூடு ஆறினவுடன் வில்லைகள் போடவும்.

கிடைக்கும் சத்துக்கள்:

ஆற்றல் - 1388 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 151 கிராம்
புரதம் - 30 கி
கொழுப்பு - 60 கி
கால்சியம் - 281 மில்லி கி
இரும்பு - 14.5 மி.கி
பீட்டா கரோட்டின் - 431 மைக்ரோ கி
ஃபோலிக் ஆசிட் - 48 மை.கி
கொலின் - 47 மை.கி

டயட்டீஷியன் கமென்ட்:  இதில் கொழுப்பு, நார்ச்சத்து ஆகியவை கிடைக்கிறது. வெல்லம் இருப்பதால், உடலுக்குத் தேவையான இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து கிடைக்கிறது. உலர் பழ வகைகள் இருப்பதால், புரதமும் மூளைக்குத் தேவையான எண்ணெய்ப் பசையும் கிடைக்கிறது. இதில் இருந்து சுட்டிகளின் உடல்நலனுக்குத் தேவையான சோடியம், பொட்டாசியம் மற்றும் சல்ஃபர் போன்ற தாது உப்புக்களும் போதுமான அளவுக்குக் கிடைக்கின்றன.

கேழ்வரகு மாவு 'ஸ்டீம்டு’ பணியாரம்!

தேவையானவை: கேழ்வரகு மாவு(100 கிராம்) - ஒரு கப், அரிசி மாவு(20கிராம்) - 2 டேபிள் ஸ்பூன், வெல்லத்தூள்(50 கிராம்) - அரை கப், ஏலத்தூள் - அரை டீஸ்பூன், சமையல் சோடா - ரெண்டு சிட்டிகை, தேங்காய் பல்லு பல்லாக நறுக்கிய துண்டுகள்- 4 டீஸ்பூன்.

சிக்கு..புக்கு...குக்கு !

செய்முறை: வெல்லத்தைக் கரைய விட்டு, மண் போக வடிகட்டி 5 நிமிடம் கொதிக்க விடவும். இதில் இரண்டு மாவையும் போட்டு, தேங்காய், ஏலத்தூள் சேர்த்துக் கலந்து, சிறிய கப்புகளில் ஊற்றி (இட்லிக்கு வேகவைப்பது போல்) வேகவைத்து எடுக்கவும்.

கிடைக்கும் சத்துக்கள்:

சிக்கு..புக்கு...குக்கு !

ஆற்றல் - 657 கிலோ கலோரி
கார்போஹைட்ரேட் - 140 கிராம்
புரோட்டீன் - 10 கி
கொழுப்பு - 12 கி
கால்சியம் - 393 மில்லி கி
இரும்பு - 5.9 மி.கி
பீட்டா கரோட்டின் - 42 மைக்ரோ கி
ஃபோலிக் ஆசிட் - 23 மை கி
கொலின் - 47

டயட்டீஷியன் கமென்ட்: கேழ்வரகில் இருந்து கிடைக்கும் மாவுச் சத்து, குழந்தைகளின் உடலுக்கு உடனடியாக ஆற்றலைத் தரும். இது, வெகு எளிதில் ஜீரணமாகும் உணவாகும். இதைச் சிற்றுண்டியாகவே காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகளில் கொடுக்கலாம். கேழ்வரகை நீரில் ஊறவைத்து, முளைகட்டிய பிறகு அரைத்துப் பணியாரம் செய்தால், அதில் இன்னும் சத்துக்கள் அதிகமாகக் கிடைக்கும்.

பால் பணியாரம்!

தேவையானவை: பச்சரிசி - ஒன்றரை கப், புழுங்கல் அரிசி - ஒரு ஸ்பூன், வெந்தயம் - 25 கிராம், உளுந்து-அரை கப். இவற்றை, 4 மணி நேரம் ஊற வைக்கவும். அரிசி, உளுந்து ஆகியவற்றைத் தனித்தனியே அரைத்துக் கொள்ளவும். எண்ணெய்-அரை லிட்டர். பால் - அரை லிட்டர், தேவையான அளவு சர்க்கரை. ஐந்து ஏலக்காய். பாலில் ஏலத்தைப் பொடியாக்கிப் போடவும். இதில் சர்க்கரையைக் கலந்து வைக்கவும்.

செய்முறை: ஒரு வாணலியில் எண்ணெய்யைக் காயவிடவும். அரைத்து வைத்திருக்கும் அரிசி மற்றும் உளுந்து மாவை ஒன்றாகக் கலக்கிக் கொள்ளவும். எலுமிச்சை அளவுக்கு மாவை சிறிய குழிக்கரண்டியில் எடுத்து, எண்ணெயில் இட்டு வேகவிடவும். உருண்டைகள் நன்கு வெந்தவுடன்... காய்ச்சி, சர்க்கரை கலந்து வைத்துள்ள பாலில் உருண்டைகளைப் போடவும். கிண்ணத்தில் நான்கைந்து உருண்டைகளும் சிறிது பாலும் ஊற்றி, ஒரு ஸ்பூனுடன் சுட்டிகளுக்குக் கொடுக்கவும்!

சிக்கு..புக்கு...குக்கு !
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு