கே.கணேசன்

ஹாய் சுட்டீஸ்... சென்ற இதழில், ஒடுக்கப்பட்ட இனமான கறுப்பர் இனத்தில் பிறந்து, தனது ஓடும் திறமையால் தன் இனத்துக்கே புகழ் சேர்த்த ஜெஸ்ஸி ஓவன்ஸ்-ன் வாழ்க்கையைக் காப்பி அடித்தோம்.

இந்த முறை இந்தியாவின் எதிர்காலத் தூண்களாக விளங்கப் போகிற சுட்டிகளை எல்லாம், 'கனவு காணுங்கள்’ எனச் சொல்லி, இந்தியாவை 2020-க்குள் ஒரு வல்லரசாக உருவாக்கத் தூண்டும் அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையைக் காப்பி அடிக்கலாம் வாங்க! இதில் ஒரு சிறப்பு... இந்த மாதத்தில்தான் அவர் பிறந்தார்.

அப்துல் கலாம் 1931-ஆம் ஆண்டு, அக்டோபர் 15-ஆம் தேதி ராமேஸ்வரத்தில் பிறந்தார். இவரது அம்மா... அஸ்மா அம்மையார், அப்பா... ஏ.பி. ஜைனுலாப்தீன். அப்பா, இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே பாய்மரக் கப்பல் போக்குவரத்து நடத்திவந்தார்.

சிறு வயதில் குடும்பத்தின் பொருளாதாரச் சுமையைக் குறைக்க, வீடுகளுக்கு செய்தித்தாள் போடும் பணியைச் செய்தார் கலாம். அப்போது கிடைக்கும் அவகாசத்தில், தினமும் செய்தித்தாள்கள் படிப்பதை வழக்கமாகக் கொண்டார். ''இந்தப் பழக்கம், தனது பொது அறிவினை வளர்த்துக் கொள்ள நல்ல பயிற்சியாக இருந்தது'' என்பார் அப்துல் கலாம்.

ஆரம்பக் கல்வியை ராமேஸ்வரம் ஊராட்சிப் பள்ளியிலும், பிறகு எஸ்.எஸ்.எல்.சி. வரை ராமநாதபுரம் ஸ்வார்ட்ஸ் பள்ளியிலும் படித்தார். பள்ளி நாட்களில்... தனது ஆசிரியர் தங்களுக்கு கற்பித்த விதம், கலாமை ஒரு விஞ்ஞானியாக்கியது.

கலாமின் ஆசிரியர் ஒரு நாள் பறவைகள் வானில் பறப்பதைப் பற்றி பாடம் நடத்தினார். அதில் ஆர்வம் கொண்ட கலாம், அதை இன்னும் தெளிவாகத் தெரிந்து கொள்ள விரும்பினார். ஆசிரியரும் அடுத்த நாள் அவரை வகுப்பறைக்கு வெளியே அழைத்துச் சென்று பறவைகள் பறக்கும் விதத்தை விளக்கினார். அப்போதே கலாமுக்கு தானும் வானில் பறக்க வேண்டும் எனும் சிந்தனை மனதில் படிந்தது. அந்த எண்ணத்தை கலாம் எப்போதும் கைவிடாமல் அதற்கேற்ற மேற்படிப்பு களைப் படித்தார்.

கல்லூரிப் படிப்பை திருச்சி புனித ஜோசப் கல்லூரியிலும், பின்பு சென்னை தொழில்நுட்பக் கல்லூரியில், 'வான் பொறியியலும்’ படித்தார். 1963-ல் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சேர்ந்தார். பின்னர், 1982-ஆம் ஆண்டு, ஹைதராபாத்தில் உள்ள விஞ்ஞான ஆராய்ச்சிக் கழகத்தின் செயலாளராக தேர்ந்து எடுக்கப்பட்டார். அப்போது, முழுக்க முழுக்க இந்திய அறிவியல் தொழில் நுட்பத்துடன் கூடிய ராக்கெட் தயாரிக்கும் திட்டத்தை உருவாக் கினார். பல உயர் தொழில் நுட்பங்களைப் புகுத் தினார்.

இந்தியாவின் அக்னி, ப்ருத்வி போன்ற ஏவுகணைகள் இவரது தலைமையில் ஏவப் பட்டன. இவருடைய கடின உழைப்புக்காக, இந்தியாவின் 'ஏவுகணை மனிதர்’ என்றும் அழைக் கப்பட்டார். அதே போல, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த இரண்டாம் பொக்ரான் அணு ஆயுதச் சோதனையில் இவரது பங்கும் முக்கியமானது. இவர், 2002 முதல் 2007 வரை நமது குடியரசுத் தலைவராகவும் சிறப்பாகப் பணியாற்றி இருக்கிறார்.

தனது வாழ்க்கை வரலாற்றை 'அக்னிச் சிறகுகள்’ என்ற நூலாகவும், இந்தியா எப்படி சிறந்து விளங்க வேண்டும் என்பதை, 'இந்தியா 20/20’ என்ற நூலாகவும் எழுதியுள்ளார்.

இந்திய அரசு கலாமுக்கு பத்ம பூஷன், பத்ம விபூஷன், பாரத் ரத்னா ஆகிய உயரிய விருதுகளை வழங்கி கௌரவித் துள்ளது. வானில் தான் பறந்ததோடு மட்டும் நில்லாமல், இந்திய அரசின் விண்கலங்களையும் பறக்கச் செய்து, உலக அரங்கில் இந்தியாவின் பெருமையை அறியச் செய்தார்.

இப்போது, இந்தியா மற்றும் வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களிலும் மாணவர்களுக்கு பாடம் போதிக்கும் பணியினைச் செய்து வருகிறார்.

கலாம் இளைஞர்களிடம், குறிப்பாக சுட்டிகளிடம் மிகவும் அன்புடன் பழகினார். சுட்டிகள்தான் நாட்டின் பெருமையை உயர்த்தக் கூடியவர்கள் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டு இருந்தார். பள்ளி மாணவர்கள் மத்தியில் உரை ஆற்று வது என்றால், இவருக்கு கொள்ளை மகிழ்ச்சி. அப்போது, மாணவர் கள் கேட்கும் கேள்வி களுக்கு உடனடியாக நகைச்சுவையுடனும் சிந்திக்கும்படியும் பதில் அளிப்பது இவரது சிறப்பு. இவரால் பல மாணவர்கள் லட்சியக் கனவு கொண்டு, தனது வாழ்க்கையில் இவரது போதனை களைக் கடைபிடித்து வருகின்றனர்.

அப்துல் கலாம் எளிமையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும், படிக்கும் காலத்திலிருந்தே வானில் பறக்கவேண்டும் எனும் இலக்கை நிர்ணயம் செய்துகொண்டு அதை சாதித்தார். அதே போல நாமும் ஓர் உயர்ந்த லட்சியத்தை உருவாக்கிக் கொண்டு, அதனை... அடைய படிக்கும் காலத்திலேயே முயற்சிகளைத் தொடர வேண்டும். இலட்சியத்தை நோக்கிய பயணத்தை அப்துல் கலாம் அவர்களின் வாழ்க்கையில் இருந்து காப்பி அடிக்கலாம் வாங்க!