நவாப் ஆஃப் கிரிக்கெட் !

கே.கணேசன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பட்டோடி சமீபத்தில் காலமானார். இவரது பெயர் மன்சூர் அலிகான். நவாப் வம்சத்தின் ஒன்பதாவது மற்றும் கடைசி நவாப்பும் இவர்தான்.

டைகர் பட்டோடி எனும் செல்லப் பெயரால் அழைக்கப்பட்ட இவர், இந்திய அணிக்காக 1961-75 காலகட்டத்தில் விளையாடினார். இவரது 20-வது வயதில் ஏற்பட்ட கார் விபத்தில் ஒரு கண் பார்வையை இழந்தார். இருப்பினும் கிரிக்கெட் ஆடுவதை விட்டுவிடவில்லை. வலது கை ஆட்டக்காரரான இவர், 1962-ல் பர்படாஸ்ஸில் ஆடிக்கொண்டிருந்தபோது, அப்போதைய கேப்டன் நாரி கான்ட்ராக்டருக்கு தலையில் அடிபட்டுவிட, பட்டோடி கேப்டன் ஆனார். அப்போது பட்டோடிக்கு வயது 21. ஜிம்பாப்வேயின் டைபூ 2004-ல் கேப்டனாக அறிவிக்கப்படும் வரை... இவர் உலகின் இளம் வயது கேப்டன் எனும் சாதனையைப் பெற்றிருந்தார்.

1968-ல் பட்டோடியின் தலைமையில், இந்தியா நியூஸிலாந்துடனான தொடரைக் கைப்பற்றியது... இந்திய அணியின் முதல் தொடர் வெற்றியாகும். கிரிக்கெட்டின் உயரிய விருதான 'வின்ஸ்டன் கிரிக்கெட்டர் ஆஃப் தி இயர்’ அந்த ஆண்டு பட்டோடிக்கு அளிக்கப்பட்டது. பட்டோடிதான் முதல் முதலாக ஒன்றுக்கும் மேற்பட்ட சுழல் பந்து வீச்சாளர்களை அணியில் இடம் பெறச் செய்தார்.

விபத்தில் ஒரு கண் பார்வை இழந்த பட்டோடி, சுமார் ஒன்றரை லட்சம் கண் பார்வைக் குறைபாடு உடையவர்களுக்கு பார்வை கிடைக்க உதவி செய்திருக்கிறார். அத்துடன் மற்றவர்களுக்கு முன் உதாரணமாக, தான் இறந்த பிறகு தன்னுடைய கண்ணை தானமாக அளித்து இருக்கிறார்!

நல்லெண்ணத் தூதுவர் !

சமீபத்தில் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியத்துக்கான (UNICEF) சர்வதேச நல்லெண்ணத் தூதுவராக செரினா வில்லியம்ஸ் நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர், டென்னிஸ் ஆட்டத்தில் ஐந்து முறை சர்வதேச தர வரிசையில் முதல் இடத்தைப் பெற்றவர். மொத்தம்27 கிராண்ட்ஸ்லாம் போட்டிக் கோப்பைகளை வென்றவர். செரினா ஆப்ரிக்க, ஆசிய நாடுகளில் உள்ள பள்ளிகளை மேம் படுத்தச் செயல் படுவார்.