Published:Updated:

உறுதிமொழி

உறுதிமொழி

உறுதிமொழி

உறுதிமொழி

Published:Updated:

ந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டு, மக்கள் மனதில் உயர்ந்தவர். தனது அன்பினால் குழந்தைகளின் மனங்களைக் கவர்ந்தவர். இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் நேச வரிகள்...

உறுதிமொழி

•  குழந்தைகளுடன் இருப்பதில், உரையாடுவதில், விளையாடுவதில் பேரானந்தம் அடைந்து, நானும் வயதை மறந்து குழந்தையாக மாறிவிடுகிறேன்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

•  பெரியவர்களின் மதம், ஜாதி, நிறம், கட்சி, நாடு, மொழி, சடங்குகள், ஏழை, பணக்காரன் முதலிய எல்லைகளைக் கடந்தவர்களாகக் குழந்தைகள் பழகுகிறார்கள், செயல்படுகிறார்கள்.

•  தொழிற்சாலைகள், ஆலைகளை நான் முழுவதும் ஆதரிக்கிறேன். ஆனால், எல்லாவற்றையும்விட விவசாயம் முக்கியம் என்பேன்.

•  முழுமையான நம்பிக்கையோடு பெருஞ்செயல் ஒன்றுக்காக மக்கள் ஒன்று கூடும்போது, புதிய வரலாறு உண்டாகும்; பொற்காலம் ஏற்படும்.

•  வீரம் மிகுந்த நாயகர்கள், உயிரே போனாலும் தலை வணங்க மாட்டார்கள். இவர்களே தேசத்தின் நிலையை மாற்றக் கூடியவர்கள்.

•  பள்ளிகளே நான் செல்லும் ஆலயங்கள், மாணவர்களே நான் வணங்கும் தெய்வங்கள்.

•  பசி, வறுமை, சுத்தமின்மை, கல்லாமை, மூடநம்பிக்கை ஆகிய சிக்கல்களை அறிவியல் மட்டுமே தீர்க்க முடியும்.

•  நமது உரிமைகள், சலுகைகள் ஆகியவற்றுக்குக் குரல் எழுப்புகிறோம். நமது கடமைகள்,  பொறுப்புகளை நினைவில்கொள்வது அதைவிட முக்கியம்.

•  நல்ல கட்டடங்கள், ஓவியங்கள், நூல்கள் ஆகியவற்றைவிட ஒரு நாகரிகத்தின் மிக அழகான அம்சம், சுயநலம் இல்லாமல்   இணைந்து பணியாற்றும் மனிதர்களே.

- பூ.கொ.சரவணன் ஓவியம்: பாரதிராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism